You are here

சிங்க‌ப்பூர்

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

‘மைக்ரோ 2000 டெக்னாலஜி’ நிறுவனத்தைச் சேர்ந்த இரு ஊழியர்கள் மீது நேற்று நீதிமன்றத்தில் லஞ்ச ஊழல் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டது. அந்நிறுவனத்தின் முன்னைய வாடிக்கையாளர் சேவை அலுவலர்களின் அணித் தலைவ ரான இங் ஜுன் சியாங் என்பவர் $238,530 தொகையை லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது 26 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஐபோன் கைபேசிகளை மாற்றித் தருவது தொடர்பில் நிறுவனத்தின் நடைமுறை விதிகளுக்கு முரணாகச் செயல்பட்ட அதிகாரிகள் பற்றி மேலிடத்தில் தெரிவிக்காமல் இருப்பதற்காக அவர் அந்தப் பணத்தைப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஓய்வுக்காலத்தில் கைகொடுக்கும் கட்டாயச் சேமிப்பு

படம்: திமத்தி டேவிட்

முஹம்­மது ஃபைரோஸ்

சிங்கப்­பூ­ரில் வாழ்க்கைத் தரமும் மருத்­துவ வச­தி­களும் அதி­க­ரித்­துள்ள நிலையில் மக்­களின் வாழ்நாளும் அதிகரித்துள்­ளது. இதனா­லேயே ஓய்­வுக்­கா­லத்­திற்­காக சேமிக்­கும் பழக்­கத்தை இளம் பரு­வத்­தி­லி­ருந்தே ஏற்படுத்த வேண்டும் என்றும் அதைத்­தான் மத்திய சேம நிதித் திட்டம் செய்­கிறது என்றும் கூறி­யுள்­ளார் மனி­த­ வள அமைச்­சர் லிம் சுவீ சே. ‘மசேநிதி எதற்­காக இருக்­கிறது?’ எனும் தலைப்­பில் நேற்று முன்­தி­னம் இரவு நடை­பெற்ற ‘பிஏ காப்பி டாக்’ கலந்­துரை­யா­ட­லில் பேசியபோது அவர் இதனைத் தெரி­வித்­தார்.

வீவகவின் பற்றாக்குறை $1.6 பில்லியன்

வீடமைப்பு வளர்ச்­சிக் கழகத்தின் பற்­றாக்­குறை முடி­வடைந்த 2015/2016க்கான நிதி­யாண்­டில் 1.639 பில்­லி­யன் வெள்ளியாக குறைந்தது என்று நேற்று வெளி­யிட்ட ஆண்ட­றிக்கை­யில் தெரி­வித்தது. வீட்டு உரிமம் தொடர்­பில் மட்டும் கழ­கத்­திற்கு ஏற்­பட்ட பற்­றாக் ­குறை $1.179 பில்லியன். வீடு­களின் விற்பனை, வீடு கள் வாங்குவதன் தொடர்பில் வழங்கப்பட்ட மசே நிதியின் வீட்டு மானி­யங்கள், இன்னும் கட்டி முடிக்­கப்­ப­டாத வீடுகளால் ஏற்படும் இழப்பு ஆகியவையால் பற்­றாக்­குறை ஏற்­பட்­ட­தாகக் கழகம் விளக்­கி­யது.

மருத்துவ செலவைக் குறைக்க பரிந்துரை

தனியார் துறையில் சிகிச்சைக்­கா­கும் செலவு, பொது மருத்­து­வ­மனை­களில் தனியார் நோயா­ளி­கள் செலுத்­து­வதை­விட மிக அதி­க­மாக உள்ளது. இதற்கு கட்டண வழி­காட்டி முறை இல்­லா­த­து­டன் பெரும்பா­லும் காப்­பு­றுதி நிறு­வ­னங்களே செலவை ஏற்­றுக்­கொள்­வ­தும் கார­ணங்க­ளா­கக் கூறப்­படு­கின்றன. இதனால் காப்­பு­றுதி நிறு­வ­னங்கள் அதிக கட்­ட­ணங்களைக் கட்ட வேண்­டி­யுள்­ளது. எனவே அவை மக்கள் செலுத்த வேண்டிய சந்தா தொகையை உயர்த்­து­ கின்றன.

30 மாணவர்கள் மீது தேசிய பல்கலைக்கழகம் நடவடிக்கை

முதல் ஆண்டு மாண­வர்­களுக்­கான அறிமுக முகாம்­களில் முறையற்ற நடை­முறை­களை ஏற் பாடு செய்­த­தற்­காக 30 மூத்த மாண­வர்­கள் மீது தேசிய பல்­கலைக்­க­ழ­கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அவரவர் குற்றங்களைப் பொறுத்து ஒரு பருவ காலத்­திற்கு இடை­நீக்­கம், $2,000 அப­ரா­தம், 100 மணி நேரம் வரை­யி­லான கட்டாய சமூக சேவை போன்ற தண்டனை­கள் விதிக்­கப்­பட்­டன. கடந்த ஜூலை மாதம் நடந்த அந்த அறிமுக முகாம் நட­வ­டிக்கை­கள் குறித்து சுமார் 400 மூத்த மாண­வர்­கள், புதிய மாண­வர்­களி­டம் விசாரணை மேற்­ கொள்­ளப்­பட்­ட­தாகப் பல்­கலைக்­க­ழ­கத்­தின் ஒழுங்­கு­முறை நட­வ­டிக்கைக் குழு கூறியது.

மனிதவள சான்றிதழுக்குப் புதிய கட்டமைப்பு

மனிதவள நிபுணர்களின் திறன்களுக்கு சான்றிதழ் வழங்கும் புதிய திட்டம் அடுத்த ஆண்டு இரண்டாம் காலண்டில் நடைமுறைக்கு வருமுன் இம்மாத இறுதியில் சோதனை அடிப்­படையில் அறிமுகம் காணவுள்ளது. மனிதவளத் துறையில் ஒரு முகமான தரவரிசையை ஏற்படுத்தும் முயற்சியின் முதற்கட்டமாக இந்த தேசிய மனிதவள சான்றிதழ் கட்டமைப்பு விளங்குகிறது. எதிர்காலப் பொருளியலுக்குத் தேவைப்படும் மனிதவளத்திற்கு உதவ தற்பொழுது மனிதவளத் துறையில் இருப்பவர்கள் தங்க­ளின் திறன்களை மேம்படுத்­திக் ­கொள்வது அவசியமாகிறது.

கடற்படையின் புதிய கப்பல் ‘யூனிட்டி’ வெள்ளோட்டம்

சிங்கப்பூர் குடியரசு கடற்படை, யூனிட்டி (ஐக்கியம்) என்ற தன் னுடைய மூன்றாவது எல்எம்வி கப்பலை நேற்று வெள்ளோட்ட மிட்டது. சிங்கப்பூர் டெக்னா லஜிஸ் மெரின் நிறுவனத்தின் பெனோய் தளத்தில் இந்தக் கப்பல் வெள்ளோட்டமிடப்பட்டது. தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஓங் யி காங் அந்த நிகழ்ச்சியைப் பார்வையிட்டார். திரு ஓங்கின் மனைவி திருமதி டயனா ஓங், கப்பல் வெள்ளோட் டத்தை தொடங்கிவைத்தார். இந்தக் கப்பல் சிங்கப்பூரிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப் பட்டது. இதைப் போன்ற எட்டு கப்பல்கள் வரும் 2020ல் சேவை யில் ஈடுபடுத்தப்படும்.

பல்கலை. விடுதியில் ‘ரகசிய கண்’: சந்தேகப் பேர்வழி கைது

நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் மாணவர் விடுதி ஒன்றில் ஒரு மாணவரை ரகசியமாக படம் எடுத்த சந்தேக நபர் ஒருவர் சிக்கினார். விடுதி எண் 16ல் தங்கியிருக்கும் நான்காவது ஆண்டு மாணவர் ஒருவரை சில மாணவர்களே பிடித்தனர். குளித்துக் கொண்டிருந்த ஒரு மாணவரை அவர் படம் எடுத்த தாகத் தெரியவந்தது. விடுதியில் பின்னிரவு சுமார் 1 மணிக்கு குளித்துக்கொண்டிருந்த மாணவர், தன் குளியல் அறைக்கு மேலே சுவரில் ஒரு செல்பேசியைக் கண்டார். வேகமாக ஓடி சந்தேகப்பேர்வழியை அவர் மடக்கினார். அந்தப் பேர் வழி ஒரு தடுப்பறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

இந்தோனீசியாவில் கைதான சிங்கப்பூர் படகோட்டி மீது புதிய குற்றச்சாட்டு

இந்தோனீசியாவின் பிந்தான் தீவுக்கு அருகே தஞ்சுங் பெராக் கிட் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்துவிட்டதாக இந்தோனீசிய குடிநுழைவுத் துறை அதிகாரிகள் சூ சியாவ் ஹுவாட் என்ற சிங்கப்பூரரை ஏப்ரல் 16ஆம் தேதி முதல் பிடித்து வைத்திருக் கிறார்கள். அந்தப் படகோட்டி குறைந்த பட்சம் மேலும் இரண்டு வாரங் களுக்கு தஞ்சோங் பினாங்கி லேயே காவலில் இருக்க வேண்டி யிருக்கும் என்று தெரிகிறது.

சுற்றுப்புற மன்றத்தின் நிர்வாக இயக்குநர் இடைநீக்கம்

சிங்கப்பூர் சுற்றுப்புற மன்றத்தின் நிர்வாக இயக்குநர் எட்வின் சியா பணியிலிருந்து இடைக் காலமாக நீக்கப்பட்டிருக் கிறார் என்பது தெரியவந் திருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. தான் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் தெரியவில்லை என்று திரு சியா கூறிய தாக அந்தச் செய்தித்தாள் தெரிவித்தது. அந்தச் செய்தி தனக்கு நேற்று அக்டோபர் 13ஆம் தேதி காலைதான் தெரிவிக்கப் பட்டதாகவும் திரு சியா குறிப்பிட்டு இருக்கிறார். “அதிகாரபூர்வ வேலை நிமித்தமாக வெள்ளி இரவு நான் பயணம் மேற்கொள்ளவிருந்தேன்.

Pages