You are here

சிங்க‌ப்பூர்

குப்பைத் தொட்டியில் விழுந்து ஊழியர் காயம்

வீடமைப்பு வளர்ச்­சிக் கழக அடுக்­கு­மாடி வீட்டின் குப்பைத் தொட்­டி­யில் இருந்து விழுந்த ஊழியர் ஒருவர் காய­மடைந்து உள்ளார். நேற்றுக் காலை 10.10 மணி அளவில் சம்ப­வம் குறித்து தகவல் வந்த­தாக சிங்கப்­பூர் குடிமைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது. ஜாலான் ரூமா திங்கி, புளோக் 8ல் சம்ப­வம் நிகழ்ந்­ துள்­ளது. மேலே இருந்து விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப் பட்டது. ஒருவர் கொள்­ளக்­கூ­டிய குப்பைத் தொட்­டிக்­குள் 20 வய­து­களை உடைய ஆடவர் ஒருவர் காய­மடைந்து இருந் தார் என்று குடிமைத் தற்­காப்புப் படை கூறியது. அதி­கா­ரி­கள் அந்தக் கூண்டை வெட்டி காய­மடைந்த­வரை மீட்­ட­னர்.

சமூகத்திற்கு $150,000 திரட்டிய பாலர்கள்

 படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் 300க்கு மேற்பட்ட பாலர் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 20,000 பாலர்கள் சமூகத் திட்டங்களில் 500,000 மணி நேரத்தைச் செலவழித்து கடந்த ஆறு மாதங்களில் 150,000 வெள்ளிக்கு மேல் திரட்டி சமூகத் திற்குப் பங்காற்றியிருக்கின்றனர். அரசாங்க முயற்சிகளின் ஓர் அங்கமாக இந்த நிதியை பாலர்கள் திரட்டியுள்ளனர். கடந்த ஆண்டு ஆரம்பக்கால பாலர் பருவ மேம்பாட்டு வாரியத் தின் முதல் சமூகத் திட்டம் தொடங்கப்பட்டது. ‘சிறிய அளவில் தொடங்கி பெரிய அளவில் கனவு காணுங் கள்’ என்ற திட்டத்தில் அப்போது 8,000 குழந்தைகள் பங்கேற்றனர். அதன் பிறகு சமூகத் திட்டங் களில் பாலர்கள் செலவழிக்கும் நேரம் ஐந்து மடங்காக அதி கரித்துள்ளது.

குளத்தில் வளர்க்கப்படும் மீன்களை சூறையாடும் நீர் நாய்கள்

குளத்தில் வளர்க்கப்படும் மீன்களை சூறையாடும் நீர் நாய்கள்

பாசிர் ரிஸ் பூங்காவில் தனியார் துறைக்குச் சொந்தமான குளத்தில் வளர்க்கப்படும் மீன்களை கடந்த ஆறு மாதங்களாக ஒன்பது நீர் நாய்கள் சூறையாடி வருகின்றன. இதனால் ‘டிபெஸ்ட் ரெக்ரி யேஷன்’ என்ற குளத்துக்குச் சொந்தக்காரரான திரு டேரன் செங்கின் வருமானத்தில் பெரிய துவாரம் விழுந்துள்ளது. ஒவ் வொரு முறையும் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் $300 முதல் $500 மதிப்பிலான மீன்களை நீர் நாய்கள் தின்றுவிடுவதாக நியூ பேப்பருக்கு அளித்தப் பேட்டியில் திரு டேரன் செங் கூறியிருந்தார். 2014ல் குளத்தை வாங்கிய போது இரண்டு நீர் நாய்களை மட்டுமே பார்த்ததாகக் கூறிய அவர், ஆறு மாதங்களில் நிலைமை மோசமாகி விட்டது என்றார்.

சாலை விபத்தில் பாதசாரி மரணம்

சாலை விபத்தில் பாதசாரி மரணம்

வெளிநாட்டு ஊழியர் என்று நம்பப்படும் பாதசாரி ஒருவர் சாலை விபத்தில் நேற்று மாண்டார். கெப்பல் சாலையில் கார் ஒன்று அவரை மோதித் தள்ளியது. தஞ்சோங் பகார் ரயில் நிலையத்திற்கு அருகே நேற்று காலை 10.15 மணி அளவில் சாலை விபத்து நேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திலேயே அந்த 35 வயது ஆடவர் இறந்ததாக போலிஸ் உறுதிப்படுத்தியது. பாதசாரியை மோதிய வாகனம் ஆயர் ராஜா விரைவுச்சாலைக்கு கீழே உள்ள பள்ளத்தில் கிடந்தது. 31 வயது வாகனமோட்டி சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

பால்ய வயதில் கிட்டப்பார்வை எனில் பார்வை கெடும் ஆபத்து; ஆய்வு எச்சரிக்கிறது

 படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாலர் பருவத்தில் அல்லது தொடக்கநிலை பள்ளியில் படிக்கையில் பிள்ளைக்கு கிட்டப்பார்வை ஏற்பட்டது என் றால் வயது ஆக ஆக அந்த நிலை அதிகரிக்கக்கூடும் என் றும் கடைசியில் கண் பார்வை மங்கி அறவே பார்வை போய் விடக்கூடிய ஆபத்தும் இருக் கிறது என்றும் எச்சரிக்கப்பட்டி ருக்கிறது. சிங்கப்பூர் பிள்ளைகளி டையே அதிக கிட்டப்பார்வை குறைபாடு பற்றி சிங்கப்பூர் கண் ஆய்வுக் கழகமும் சிங்கப் பூர் தேசிய பல்கலைக்கழகமும் 15 ஆண்டுகாலம் ஆய்வு ஒன்றை நடத்தின. அந்த ஆய்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன் மூலம் இந்த நிலவரம் தெரியவந்திருக்கிறது.

புக்கிட் பாஞ்சாங்இலகு ரயில் முறை கைவிடப்படக்கூடும்

செகார் (Segar) நிலையத்தில் இலகுரக ரயிலுக்காக காத்திருந்த பயணிகள். சென்ற மாதம் 28ஆம் தேதி இந்தச் சேவை தாமதமடைந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ரயில் கட்டமைப்பில் அடிக்கடி பிரச்சினையை கொடுக் கும் புக்கிட் பாஞ்சாங் இலகு ரயிலை முற்றிலுமாக கைவிட்டுவிடு வது உள்ளிட்ட பல யோசனைகள் குறித்து ரயில் சேவையை நடத்தும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் நிலப் போக்குவரத்து ஆணையமும் ஆராய்ந்து வருகின்றன. எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் ரயில் வண்டிகள் நிர்வாக இயக்கு நர் லீ லிங் வீ, இந்த நிறுவனத்தின் இணையத்தளத்தில் இதன் தொடர்பில் பல விவரங்களை வெளியிட்டிருக்கிறார். புக்கிட் பாஞ்சாங் இலகு ரயி லின் எதிர்காலத்தை ஒரு கூட்டுக் குழு மறுபரிசீலனை செய்துவரு கிறது. 17 வயதாகும் அந்த ரயில் முறையின் வடிவமைப்பு கிட்டத் தட்ட முடிவு கட்டத்திற்கு வந்து விட்டது.

‘வட்டார வேளாண் துறைக்கு உரமாக சிங்கப்பூர் திகழலாம்’

PHOTO: THE BUSINESS TIMES

சிங்கப்பூரின் வேளாண்மைத் துறை மிகவும் சிறியது என்றாலும் இந்த வட்டார உணவுப் பாது காப்பிற்கு சிங்கப்பூர் தொண் டாற்ற முடியும் என்று போக்கு வரத்து அமைச்சரும் உள் கட்டமைப்புக்கான ஒருங் கிணைப்பு அமைச்சருமான கோ பூன் வான் தெரிவித்திருக்கிறார். ஆசியான் வேளாண்மை, காட்டுவளத் துறை அமைச்சர் களின் 38வது கூட்டத்தை தொடங்கிவைத்து நேற்று அவர் பேசினார். அந்தக் கூட்டத்தைச் சிங்கப்பூர் ஏற்று நடத்தியது. ஆசியான் அமைச்சர்களுடன் சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளும் கலந்துகொள் ளும் கூட்டத்தொடரில் 16வது கூட்டமாகவும் அது இருந்தது. “சிங்கப்பூரில் வேளாண்மைத் துறை என்பது மிகமிகச் சிறியது.

பாதுகாப்பின்றி சைக்கிளோட்டிய 700க்கு மேற்பட்டோர் பிடிபட்டனர்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாதுகாப்பின்றி சாலைகளில் சைக்கிள், மின்சார ஸ்கூட்டர் போன்ற வாகனங்களை ஓட்டிய குற்றத்திற்காக 700க்கும் மேற்பட்டவர்கள் கடந்த மே மாதம் முதல் பிடிபட்டுள்ளனர் என்று நிலப்போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது. சாலைகளில் பாதுகாப்பின்றி சைக்கிள் போன்ற வாகனங்களை ஓட்டுபவர்களைக் கண்காணிக்க சென்ற மே மாதம் ஆணையம் நிறுவிய துடிப்புடன் நடமாடும் அமலாக்கக் குழு இதுவரை 400க்கும் மேற்பட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பின்றி ஓட்டுபவர்களுக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் தற்போது ஆலோசனைகளுடன் பாதுகாப்பு பயணக் கையேடுகளையும் வழங்கி வருகிறார்கள்.

சுகாதார அமைச்சு வெளியிடும்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தனியார் மருத்துவமனைகளில் நடத்தப்படும் அறுவை சிகிச்சை களுக்கான மொத்த கட்டணத் தொகை குறித்த தகவலை சுகாதார அமைச்சு அதன் இணையத்தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளது. பொது மருத்துவமனைகளில் நடத்தப்படும் அறுவை சிகிச்சை களுக்கான மொத்த கட்டணத் தொகை குறித்த தகவலைக் கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து அது வெளியிடத் தொடங்கியது. தனியார் மருத்துவமனை களிலும் இந்த முறையைக் கையாண்டால் கட்டணத் தொகை தொடர்பான தகவல் வெளிப்படை யானதாக இருக்கும் என்றும் வெளியிடப்படும் தகவலைக் கொண்டு நோயாளிகள் எங்கு அறுவை சிகிச்சை செய்து கொள்வது என்பது குறித்து முடிவு எடுக்கலாம் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.

வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் பெரும்பாலான பிரிவுகளில் இறக்கம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் பெரும்பாலான பிரிவுகளில் இறக்கம் கண்டுள்ளது. சிறிய வகை கார்களுக்கான கட்டணம் மட்டும் 50,000 வெள்ளியிலிருந்து 51,507 வெள்ளிக்கு ஏற்றம் கண்டது. பெரிய வகை கார்களுக்கான கட்டணம் 55,501 வெள்ளியிலிருந்து 53,001 வெள்ளிக்குக் குறைந்தது. சரக்கு வாகனங்கள், பேருந்துகள் ஆகியவற்றுக்கான கட்டணம் 49,890 வெள்ளியிலிருந்து 48,702 வெள்ளிக்குக் குறைந்தது. பொதுவாகப் பெரிய வகை கார்களுக்காகப் பயன்படுத்தப்படும் பொதுப் பிரிவு 55,201 வெள்ளியிலிருந்து 54,200 வெள்ளிக்குச் சரிந்தது. மோட்டார் சைக்கிளுக்கான கட்டணம் 6,501 வெள்ளியிலிருந்து 6,353 வெள்ளிக்குக் குறைந்தது.

Pages