You are here

சிங்க‌ப்பூர்

‘கேபிஇ’ விரைவுச்சாலையில் ‘இஆர்பி’

நிலப்போக்குவரத்து ஆணையம் காலாங்- பாயலேபார் விரைவுச்சாலையில் மின்னியல் சாலைக் கட்டணத்தை (இஆர்பி) முதல் முறையாக அறிமுகப்படுத்த திட்டமிடுவதாக நேற்று கூறியது. அங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இது உதவும் என்று வாரியம் சொன்னது. கேபிஇ சுரங்கப்பாதைக்கு முன்னால் இருக்கும் மின்னியல் சாலைக் கட்டண நுழைவாயிலை இயக்க ஆலோசித்து வருவதாக வாரியம் தெரிவித்தது. வடக்கு-கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு அப்பகுதியின் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தி வருவதாக வாரியம் கூறியது.

பிரதமர் லீ: வெளியுறவில் உறுதியான நிலைவேண்டும்

பிரதமர் லீ சியன் லூங்

சிங்கப்பூர் நேரத்துக்கு ஏற்ப சாய்ந்து செயல்படும் நாடு என்ற எண்ணம் மற்ற நாடுகளுக்கு ஒருபோதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று பிரதமர் லீ சியன் லூங் குறிப்பிட்டிருக்கிறார். “சிங்கப்பூர் தனக்குச் சொந்த மான, உறுதியான ஒரு நிலையை கொண்டிருக்க வேண்டும். யாரிடம் பேசினாலும் எந்த நாட்டில் எந்தத் தலைநகரில் இருந்தாலும் தன் சொந்த நிலையில் உறுதியாக இருக்க வேண்டும்,” என்று திரு லீ குறிப்பிட்டார். பிரதமர், சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையில் அரசதந் திர உறவு ஏற்பட்டு 50 ஆண்டு காலம் ஆவதைக் குறிக்கும் வகை யில் அந்த நாட்டிற்கு நான்கு நாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண் டிருந்தார். அந்தப் பயணம் நேற்று முடிந்தது.

இணையம் வழி பந்தயம் கட்டலாம்

இணையம் வழி பந்தயம் கட்டலாம்

சிங்கப்பூரை தளமாகக் கொண்டு செயல்படும் சிங்கப்பூர் பூல்ஸ், சிங்கப்பூர் டர்ஃப் கிளப் ஆகிய இரண்டு நிறு வனங்களுக்கு இணையம் மூலம் சூதாட்டப் பந்தயம் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து சிங்கப்பூரில் அடுத்த இரண்டு மாத காலத்தில் இணையத்தில் சூதாட்டப் பந்தயம் கட்டும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும். தொலைதூர சூதாட்டச் சட்டத்திலிருந்து இந்த இரு அமைப்புகளுக்கும் உள்துறை அமைச்சு விலக்கு அளித்திருக் கிறது. இந்தச் சட்டம் இணையம் வழியாகவும் தொலைபேசி வழியாகவும் சூதாடுவதைத் தடுக்கிறது.

லீ குவான் இயூ வாரிசுகள் மனு தள்ளுபடி

சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் இயூவின் வாரிசு களான டாக்டர் லீ வெய் லிங், திரு லீ சியன் யாங் ஆகிய திரு லீயின் இளைய பிள்ளைகள் இருவர் அரசாங்கத்திற்கு எதிராக செய்திருந்த மனுவை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துவிட்டது. கடந்த 1980 காலகட்டத்தில் பதிவான திரு லீ குவான் இயூவின் வாய்மொழி வரலாற்றுப் பதிவுகளின் நகல்களைப் பயன்படுத்தவும் அவற்றைப் பெறவும் தங்களுக்கு உரிமை இருப்பதாக அந்த வாரிசுகள் கோரியிருந்தனர். அவற்றைப் பெறவும் நகல் எடுக்கவும் பயன்படுத்தவும் அனுமதி கொடுக்க லீ குவான் இயூவிற்கு உரிமை உண்டு என்ற அரசாங்கத்தின் வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

வலைப்பதிவாளருக்கு சிறை, அபராதம்

சமய உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக பதின்ம வயது வலைப்பதிவாளர் ஏமஸ் யீக்கு ஆறு வாரச் சிறைத் தண்டனையும் $2,000 அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. இதே குற்றச்செயலுக்காக அவருக்கு 15 மாதங்களுக்கு முன்பாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த 17 வயது இளைஞர் எட்டு குற்றச்சாட்டுகளின் பேரில் இப்போது தண்டனை பெற்றிருக்கிறார்.

உலக வரிசையில் முதல் பத்தில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், டைம்ஸ் உலக உயர்கல்வி நிலையங்கள் பட்டியலில் தலைசிறந்த 10 இடங்களில் ஒன்றாக வலுவான இடத்தைப் பிடித்திருக்கிறது. பட்டியலிடப்பட்ட எட்டு ஏட்டுக்கல்விப் பாடங்களில் இரண்டில் அது இந்த இடத்தைப் பிடித்திருக்கிறது. பொறியியல் தொழில்நுட்பத் துறையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம், லண்டன் இம்பீரியல் கல்லூரியுடன் சேர்ந்து ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

“சிங்கப்பூரும் ஜப்பானும் புத்தாக்கத்தில் ஒன்றுக்கொன்று பலனடையும்”

வர்த்­த­கம், தொழில்­துறைக்­கான மூத்த துணை அமைச்­சர் சிம் ஆன்

ஜப்­பா­னிய நிறு­வ­னங்கள் சிங்கப்­பூரை இந்த வட்­டா­ரத்­தின் வலு­வான விற்­பனைத் தள­மா­கப் பயன்­படுத்­திக்­கொள்­ள­லாம் என்று வர்த்­த­கம், தொழில்­துறைக்­கான மூத்த துணை அமைச்­சர் சிம் ஆன் தெரி­வித்­திருக்கிறார். புத்­தாக்­க உருவாக்கத்தில் வலு­வான நிலை­யில் உள்ள இந்த இரு நாடு­களும் ஒன்­றுக்­கொன்று பல­னடைந்து கொள்­ள­லாம். புத்­தாக்­கங்களை உரு­வாக்­கும் நோக்­கில் ஜப்­பா­னிய நிறு­வ­னங்களு­டன் ஒருங்­கிணைந்து செயல்­படும் வகை­யில் தொழில் பங்கா­ளி­களை இணைக்­கும் சூழலை சிங்கப்­பூர் கொண்­டுள்­ளது.

வலைப்பதிவாளர் ஏமஸ் யீ எஞ்சிய மூன்று குற்றங்களையும் ஒப்புக்கொண்டார்

வலைப்­ப­தி­வா­ளர் ஏமஸ் யீ

இளம் வலைப்­ப­தி­வா­ளர் ஏமஸ் யீ, மதரீதி­யான உணர்­வு­களைக் காயப்­படுத்­தி­ய­தாக தம் மீது சுமத்­தப்­பட்ட எஞ்­சிய மூன்று குற்­றச்சாட்டுகளையும் நேற்று நீதிமன்றத்தில் ஒப்­புக்கொண்டார்.
முஸ்­லிம் மத உணர்­வு­களைக் காயப்­படுத்­தும் நோக்­கில் ஒரு புகைப்­ப­டத்தை­யும் இரண்டு காணொ­ளி­களை­யும் ஏப்­ரல் 17ஆம் தேதிக்­கும் மே 19ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் வலைத் தளத்­தில் பதிவு செய்த குற்­றத்தை நேற்று நீதி­மன்றத்­தில் 17 வயது ஏமஸ் யீ ஒப்­புக்­கொண்டார்.

$500,000 செலுத்தத் தவறிய அறுவை சிகிச்சை மருத்துவருக்கு ஒரு வாரச் சிறை

 டாக்­டர் பாங் ஆ சான்

நீதி­மன்ற ஆணையை அவ­ம­தித்த குற்­றத்­திற்­காக அறுவை சிகிச்சை மருத்­து­வர் ஒரு­வ­ருக்கு நீதி­மன்றம் நேற்று ஒரு வார காலம் சிறைத்­தண்டனை விதித்து தீர்ப் ­ப­ளித்­தது. சிங்கப்­பூர் மருத்­து­வ­ மன்றத்­திற்­கு இழப்பீடாகச் செலுத்தும்படி நீதி­மன்றம் பிறப்­பித்த ஆணையை அவ­ம­திக்­கும் வகை­யில் அந்தத் தொகை­யான $500,000ஐ செலுத்­தத் தவ­றிய மருத்­து­வர் ஒரு­வ­ருக்கு நீதி­மன்றம் நேற்று இந்தத் தண்டனையை விதித்து தீர்ப்­ப­ளித்­தது. டாக்­டர் பாங் ஆ சான் (படம்) என்ற அந்த மருத்துவர், ஒரு தனி­யார் பொது அறுவை சிகிச்சை மருத்­து­வ­ர்.

ஜாலான் டுசுனில் ஆயுதம் தாங்கி கொள்ளை; 27 வயது ஆடவர் கைது

பாலஸ்டியர் சாலை அருகேயுள்ள ஜாலான் டுசுன் என்னுமிடத்தில் ஆயுதம் தாங்கிய கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் 27 வயது ஆடவர் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள் ளார். ஆகஸ்ட் 24ஆம் தேதி மாலை 5 மணியளவில் 28 வயது பெண்மணி ஒருவர் போலிசில் புகார் ஒன்று அளித்தார். அந்தப் புகாரில், ஜாலான் டுசுன் பகுதியில் தம்மிடம் இருந்து 1,500 வெள்ளிப் பணமும் 1,000 யுவானும் ஆயுதம் தாங்கிய கொள்ளையன் ஒருவனால் கொள்ளை யடிக்கப்பட்டு விட்டது என்று கூறியிருந்தார்.

Pages