You are here

சிங்க‌ப்பூர்

பீஷானில் 61 வயது ஆடவர் கொலை, மகன் கைது

பீஷான் ஸ்ட்ரீட் 11, புளோக் 152B=யில் உள்ள ஒரு வீட்டில் நேற்றிரவு 61 வயதுடைய தமது தந்தையைக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் அவருடைய 25 வயது மகன் கைது செய்யப் பட்டுள்ளார். இன்று நீதிமன்றத்தில் அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்படும் என்று போலிஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட புளோக்கின் ஐந்தாம் மாடி வீடு ஒன்றில் நடந்த இச்சம்பவம் குறித்து சனிக்கிழமை இரவு 8.20 மணிக்கு போலிசுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

$218,000க்கும் மேல் மதிக்கத்தக்க போதைப்பொருள் பிடிபட்டது

கேலாங்­கி­லி­ருந்து செயல்­பட்ட போதைப்­பொ­ருள் கும்பல் ஒன்றை மத்திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப்­பி­ரிவு முறியடித்திருக்கிறது. அதிகா­ரி­கள் வெள்­ளிக்­கிழமை நடத்­திய சோதனை­யில் $20,000க்கு மேற்­பட்ட ரொக்கம், $218,000க்கும் அதிக மதிப்புள்ள ஒரு கிலோ­வுக்­கும் அதி­க­மான ‘ஐஸ்’, ஒரு கிலோ பெறு­மா­ன­முள்ள ‘கெட்­ட­மின்’, ‘எக்ஸ்டஸி’, ‘எரிமின்-5’ மாத்­திரை­கள் ஆகியவை கைப்­பற்­றப்­பட்­டன. 32 வயது சிங்கப்பூர் ஆட­வரைப் பின்தொடர்ந்த அதி­கா­ரி­கள் அந்த ஆடவர் வசித்த வீட்டின் பின்வாசல் வழியாக இருவர் நுழை­வதைப் பார்த்­த­னர்.

டாக்சி மோதி முதியவர் காயம்

மெரினா பே சாண்ட்சின் பேஃபிரண்ட் அவென்யூவில் நடந்து கொண்டிருந்த 70 வயது முதியவரை வேகமாக வந்த டாக்சி மோதியது. வாகனம் செல்லும் பாதையில் நடந்து கொண்டிருந்த அந்த முதியவர் டாக்சி வேகமாக வருவதைக் கண்டு பின்னோக்கி நடந்தார். ஆனால், வேகமாக வந்த டாக்சி அவர் மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்த முதியவர் சிறிது தூரத்தில் தூக்கி வீசப்பட்டார். நேற்று பிற்பகலில் நடந்த அந்த சம்பவத்தில் முதியவரும் 52 வயது டாக்சி ஓட்டியும் காயம் அடைந்தனர். சுயநினைவோடு இருந்த இருவரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

மலேசிய விரைவுச்சாலையில் சிங்கப்பூரர் மரணம்

வடக்கு தெற்கு விரைவுச் சாலையில் சிரம்பான் அருகே நேற்றுக் காலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிங்கப்பூரர் ஒருவர் மாண்டார். மோட்டார்சைக்கிளில் சிரம்பானிலிருந்து கோலாலம்பூருக்குப் பயணம் செய்து கொண்டிருந்த 26 வயது வோங் சீ வை தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார். அவரின் மோட்டார்சைக்கிள் சறுக்கி அருகிலுள்ள தடத்தில் விழுந்து சாலைத் தடுப்பில் மோதிய பின்னர் தீ பற்றிக் கொண்டது.
சம்பவ இடத்திலேயே வோங் சீ வை மாண்டார். பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் சிரம்பான் துங்கு ஜாஃபார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

சுகாதாரத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர்

சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர்

சுகாதாரத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் உலகளவில் தலை சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூரும் இடம் பிடித்துள்ளது. சுவீடன், ஐஸ்லாந்து ஆகியன அந்தப் பட்டியலின் முதல் இடத்தைப் பிடித்த இதர நாடுகள். லான்செட் மருத்துவ சஞ்சிகை யின் இவ்வாரப் பதிப்பில் இது வெளியாகி உள்ளது. ஐக்கிய நாடுகள் மன்றம் வகுத் துள்ள சுகாதார இலக்குகளைப் பெற்றிருக்கும் நாடுகளின் பட்டி யல் அது. மொத்தம் 188 நாடு களைக் கொண்ட இப்பட்டியலில் மேற்சொன்ன மூன்று நாடுகளே முதல் இடத்தில் உள்ளன.

நீரிழிவு நோய்க்கான தேசிய தகவல் தொகுப்பு

நீரிழிவு நோய்க்கான தேசிய தகவல் தொகுப்பு

சிங்கப்பூர் முழுவதும் பல்வேறு தளங்களில் இடம்பெற்றுள்ள நீரிழிவு நோய் தொடர்பான தகவல் களைத் திரட்டி தேசிய நீரிழிவுத் தகவல் தொகுப்பை சுகாதார அமைச்சு உருவாக்கவிருக்கிறது. இதன் மூலம் நாட்பட்ட நீரிழிவு நோய்க்கு எதிரான போராட்டங் களை வலுப்படுத்த முடியும் என்று அமைச்சு நம்புகிறது. சுகாதார துணை அமைச்சர் சீ ஹொங் டாட் நேற்று இந்த விவரங் களை வெளியிட்டார். சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடை பெற்ற சிங்கப்பூர் சுகாதார, உயிர் மருத்துவ மாநாட்டில் அவர் பேசினார்.

கனடாவில் சிங்கப்பூர் மாணவர் காயம்

விக்னேஷ் சுப்பிரமணியம்

தவறான இடத்தில் தவறான நேரத்தில் இருந்ததால் சிங்கப்பூர் மாணவரைக் காவல் துறையினரின் நாய் கடித்துக் காதை கிழித்து விட்டது. கனடாவில் படித்துவரும் 26 வயது விக்னேஷ் சுப்பிரமணியம் தமக்கு ஒன்றும் தெரியாது என்று பலமுறை அலறி கூச்சலிட்டார். ஆனால் அவரது அலறல் யார் காதிலும் விழவில்லை. கனடாவின் பிரிட்டிஷ் கொலம் பியா நகரில் உள்ள நியூ வெஸ்ட் மின்ஸ்டெரில் திங்கட்கிழமை பிற்பகல் (சிங்கப்பூர் நேரப்படி செவ் வாய்க்கிழமை காலை) காரைத் துரத்தி பல சந்தேக நபர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்துக் கொண்டிருந்தபோது விக் னேஷ் பிரச்சினையில் சிக்கினார்.

அண்டை வீட்டார்களின் சச்சரவுகளில் 70% இரைச்சல் தொடர்பானது

அண்டை வீட்டார்களின் சச்சரவுகளில்  70% இரைச்சல் தொடர்பானது

அரசு நீதிமன்றங்களின் அண்டை வீட்டார் பிரச்சினைகள் போன்ற வற்றுக்கான சமரச மன்றங்கள் அமைக்கப்பட்ட முதல் 10 மாத காலத்தில் அண்டை வீட்டார் பிரச்சினைகள் தொடர்பான 79 வழக்குகள் அங்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை சமூக பிரச்சினைகளுக்கான சமரச மன்றத்துக்கு வந்த இந்த 79 வழக்குகளில் 70 விழுக்காடு அதிக இரைச்சல் தொடர்பானவை. 25 விழுக்காடு வழக்குகள் குப்பை போட்டது, அசையும் பொருட்கள் தொடர்பானவை என்று அரசு நீதி மன்றங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வழக்கிலும் ஒன்றுக்கும் மேலான காரணங்கள் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டது.

Pages