You are here

சிங்க‌ப்பூர்

ஹோட்டல் ஊழியர்களுக்கு புதிய பயிற்சித் திட்டங்கள்

மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே.  படம்: எஸ்பிஎச்

ஊழி­யர் பற்­றாக்­குறையை எதிர்­நோக்­கும் ஹோட்டல் துறை பணி­களுக்கு ஊழி­யர்­களை ஈர்க்­கும் வகை­யில் இரண்டு புதிய திட்­டங்கள் தொடங்கப்­பட்­டுள்­ளன. அவற்­றுள் புதிய திறன் கட்­டமைப்­புப் பணி பயிற்சி மூலம் ஊழி­யர்­களுக்­குத் தேவை­யான பயிற்­சியை வழங்­கு­வ­தும் அடங்­கும். மனி­த­வள அமைச்­சர் லிம் சுவீ சே நேற்று சன்டெக் சிட்டி மாநாடு, கண்காட்சி நிலையத்தில் நடந்த ஹோட்டல் துறைக்கான வேலைக் கண்­காட்சி ஒன்­றில் இந்த இரண்டு புதிய திட்­டங்களைத் தொடங்கி வைத்­துப் பேசினார். “எதிர்­கா­லத்­தில் நமது ஹோட்­டல்­கள் விருந்­தி­னர்­களுக்கு மட்­டும் புதிய, சிறந்த சேவை­களை அளிப்­ப­தாக இருக்­கமாட்டா.

சாலைத் தடுப்பை மோதித் தள்ளி பேருந்தில் மோதிய வாகனம்

சாலைத் தடுப்பை மோதித் தள்ளி பேருந்தில் மோதிய வாகனம்

சாலைத் தடுப்பை இடித்துத் தள்ளி விட்டு நான்கு தடங்களைத் தாண்டி, எதிரே பய­ணி­களு­டன் வந்­து­கொண்­டி­ருந்த பொதுப் பேருந்து மீது மோதி பின் சாலைக்கு வெளி­யில் பாய்ந்தது ஒரு வாக­னம். நேற்­றுக் காலை­யில் யூனோஸ் லிங்க் சாலை­யில் இந்தச் சம்ப­வம் நிகழ்ந்தது. நல்லவேளையாக இந்த விபத்தில் யாருக்­கும் காய­மில்லை.

சைக்கிளோட்டப் பாதை மேம்படுகிறது

டெம்ப­­­னிஸ், பாசிர் ரிஸ், யீ‌ஷுன், செம்ப­­­வாங், தாமான் ஜூரோங் ஆகிய ஐந்து பேட்டை­­­களில் சைக்­­­கிள் புழக்­­­கத்தை எளி­­­தாக்­­­கும் வகை­­­யில் அதற்­­­கான பாதைக் கட்­­­டமைப்பை வச­­­தி­­­களு­­­டன் கூடிய புதிய முறை­­­யில் உரு­­­வாக்­­­கு­­­வ­­­தற்கு நிலப் போக்­­­கு­­­வ­­­ரத்து வாரி­­­யம் குத்­­­தகை­­­யா­­­ளர்­­­களுக்கு அழைப்பு விடுத்­­­துள்­­­ளது.

நுகர்வோருக்கான உரிமை பற்றி இலவச உரை

நுகர்­வோர் தங்கள் உரிமை­களைப் பற்றி அறிந்­து­கொள்­ளும் வகை­யில் இல­வச உரை­ நிகழ்த்த சிங்கப்­பூர் நுகர்­வோர் சங்க­மும் சமூக மேம்பாட்டு மன்றங்களும் புரிந்­து­ணர்வு ஒப்­பந்தத்­தில் நேற்று கையெ­ழுத்­திட்­டுள்­ளன. இதன்­படி ஆண்­டுக்கு 10 இல­வச உரை வீதம் அடுத்த மூன்று ஆண்­டு­களுக்கு நுகர்­வோர் உரிமை பற்றி இல­வச உரை நிகழ்த்­தப்­படும். நியா­ய­மற்ற வர்த்­தக முறை­களைக் கையா­ளும் கதவைத் தட்­டும் சில்லறை வர்த்­த­கர்­களுக்கு எதி­ராக கடுமை­யான சட்டம் அமுல்­படுத்­தப்­பட்ட ஒரு வாரத்­தில் இந்த ஒப்­பந்தம் கையெ­ழுத்­தா­கி­யுள்­ளது என்றார் தென்மேற்கு வட்டார மேயர் குமாரி லோ யென் லிங்.

பணத்தைத் தவறாகக் கையாண்ட நிர்வாகிக்கு சிறை

மசெக சமூக அற­நி­று­வ­னத்­தின் கிளை ஒன்­றின் முன்னாள் நிர்­வாகி, சுமார் இரண்டு ஆண்டு கால­மாக அற­நி­று­வ­னத்­தின் $25,912 பணத்தைத் தவ­றா­கக் கையாண்ட­தற்­காக நேற்று நீதி­மன்றம் நான்கு மாதச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்­ப­ளித்­தது. பிசி­எ­ஃப் தாம்­சன் - தோ பாயோ கிளை­யில் பணி­பு­ரிந்த­போது இமெல்டா வேணி அந்­தோணி என்ற 33 வயது பெண், 2012 முதல் 2014ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்தக் குற்­றத்தைப் புரிந்­துள்­ளார். இப்­போது மேக்­ட­லின்’ஸ் கின்­டர்­கார்­டன் என்­னும் பாலர் பள்­ளி­யின் முதல்­வ­ரா­க இவர் பணி­யாற்­று­கிறார்.

தேசிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடவடிக்கை

 ஸ்டோம்ப் இணையத் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட படம் இது. கோப்புப்படம்

முதலாம் ஆண்டு மாணவர் களுக்கான முகாம்களில் முறையற்ற நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ததற்காகச் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குறைந்தது 14 மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டது என தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு எச்சரிக்கை முதற்கொண்டு கட்டாய சமூக சேவை உட்பட்ட தண்டனைகள் கொடுக்கப்பட்டன என்று தகவல்கள் தெரிவித்ததாக அந்த நாளிதழில் குறிப்பிடப்பட்டது.

‘என்யுஎஸ்’ வளாகத்தில் செல்லும் துணை பேருந்துகளில் இணைய வசதி

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக வளாகத்தை சுற்றி வரும் எல்லா துணை பேருந்துகளில் இனி ‘வைஃபய்’ இணையச் சேவையை மாணவர்களும் பணியாளர்களும் பயன்படுத்தலாம் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. வாகனங்களுக்கு இடையே நிலவும் கம்பியில்லா இணைய இணைப்பு (mesh platform) எனும் புதிய இணைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தச் சேவை வழங்கப்படுகிறது. சிங்கப்பூரில் முதல் முறையாக இந்தச் சேவை அறிமுகம் கண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்தச் சேவை மூலமாக வளாகத்தை இயக்கும் முறை, சேவைகள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் வழங்கப்படுகின்றன.

மலேசிய குடிநுழைவு அதிகாரியைத் தாக்கிய சிங்கப்பூரருக்கு சிறை

தனது கடவுச்சீட்டின் (பாஸ்போர்ட்) வெற்றுப் பக்கத்தில் குடிநுழைவுச் முத்திரை குத்தப்படவில்லை எனும் காரணத்துக்காக மலேசிய குடி நுழைவு அதிகாரியைத் தாக்கிய சிங்கப்பூருக்கு மலேசிய மாவட்ட நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த 31 வயது தாதி திரு முகம்மது ருஸாய்னி ஜொஹாரி, மலேசியாவின் ஜோகூரில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் குடிநுழைவுச் சோதனைச் சாவடியில் இம்மாதம் 2ஆம் தேதி இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக தி ஸ்டார் மலேசியாவின் செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஜொகாரிக்கு $2,300 (7,000 ரிங்கிட்) அபராதமும் விதிக்கப் பட்டது. நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஜொஹாரி ஒப்புக் கொண்டார்.

யோகா கற்க வந்த பெண்ணை மானபங்கம் செய்ததாக பயிற்றுவிப்பாளர் மீது குற்றச்சாட்டு

மானபங்க குற்றச்சாட்டை எதிர்நோக்கும் ராக்கேஷ் குமார் பிரசாத். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தம்மிடம் யோகாசனம் கற்க வந்த பெண்ணை மானபங்கம் செய்த தாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 24 வயது ராக்கேஷ் குமார் பிரசாத் நேற்று நீதிமன்றம் முன் நிறுத்தப் பட்டார். மானபங்கம் செய்தல், பலவந்தப் படுத்துதல் ஆகிய குற்றங்களின் பேரில் தலா ஒரு குற்றச்சாட்டை அவர் எதிர்நோக்குகிறார். யோகாசனப் பயிற்று விப்பாளரான ராக்கேஷ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதியன்று தெம்பனிஸ் வட்டாரத் தில் உள்ள ரியல் யோகா ஸ்டூடியோவில் அந்தப் பெண் ணுக்கு யோகாசனம் கற்பித்துக் கொண்டிருந்தபோது அவரை மூன்று முறை மானபங்கம் செய்தார் என்று கூறப்படுகிறது.

திருடப்பட்ட சைக்கிள்களை வாங்கியவருக்குச் சிறை

திருடப்பட்ட சைக்கிள்களைப் பெற்றுக்கொண்ட குற்றத்துக்காகப் பழைய பொருட்கள் வாங்குபவர் ஒருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்தனர். கடந்த மாதம் மேல்முறையீட்டுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து 68 வயது டான் சூன் ஹுயிவுக்கு நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Pages