You are here

சிங்க‌ப்பூர்

அமைச்சர் லிம்: தேர்ச்சி, உறுதி, இதயம் காரணமாக வேலை, நல்ல சம்பளம்

மக்களின் தேர்ச்சி, உறுதி, இதயம் ஆகியவை காரணமாக சிங்கப் பூரில் வேலையின்மை விகிதம் குறைவாக இருக்கிறது என்றும் கட்டிக்காக்கக்கூடிய சம்பளம் நடப்பில் உள்ளது என்றும் மனித வள அமைச்சர் லிம் சுவீ சே தெரிவித்துள்ளார். மாணவர்கள் இதே உணர்வைக் கைக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத் தினார். தெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியின் 26வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், வேலை, தேர்ச்சி, வேலை நியமனம் ஆகியவற்றை உள்ளடக்கிய உலக அணி ஒன்று இருக்குமானால் சிங்கப்பூர் அதில் முன்னணியில் இருக்கும் என்றார்.

சிங்கப்பூர்- ஆஸ்திரேலியா: அதிக பட்டப்படிப்புக்கு அங்கீகாரம்

சிங்கப்பூர்- ஆஸ்திரேலியா இரு நாடுகளுக்கு இடையில் புதிய உடன்பாடு கையெழுத்தாகி இருக்கிறது. இதன் பலனாக இரு நாடுகளின் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த அதிக பட்டப்படிப்புகள் அங்கீகரிக்கப் படும். இவற்றில் முக்கியமாக ஆஸ்திரேலியாவின் பத்து பல்கலைக்கழகங்கள் அளிக்கும் ஜூரிஸ் டாக்டர் (JD) பட்டங்கள் அடங்கும். இதேபோல் சிங்கப்பூர் பல் கலைக்கழகங்களைச் சேர்ந்த இளநிலை பட்டப்படிப்புகளையும் ஜூரிஸ் டாக்டர் சட்டப் பட்டப் படிப்புகளையும் ஆஸ்திரேலியா அங்கீகரிக்கும்.

புதிய ‘மைஇன்ஃபோ’ சேவை

புதிய ‘மைஇன்ஃபோ’ சேவை

அரசாங்க அமைப்புகளின் இணை யச் சேவைகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு இனி கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதுதான் நேற்று அறிமுகம் கண்ட ‘மைஇன்ஃபோ’ சேவை. இதன் மூலம் அரசாங்க அமைப்புகளின் சேவைகளுக்கான இணையப் படிவத்தை மக்கள் சிர மம் இல்லாமல் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

தர்மன்: மக்கள் நலனுக்காகப் பாடுபடும் செயல் வீரர் முரளிதரன்

திரு முரளிதரன் பிள்ளையை நேற்றுக் காலை நேருக்கு நேர் சந்தித்த குடியிருப்பாளர் ஒருவர் அவரைக் கட்டி அணைத்து தமது ஆதரவைத் தெரிவித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த ஒன்பது நாட்களாக புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர்களை இத்தொகுதியின் பல்வேறு இடங் களிலும் அவர்களின் வீடுகளிலும் சந்தித்துப் பேசி, அவர்களின் பொதுவான பிரச்சினைகள் என்ன என்பதை அறிந்து கொண்டுள் ளேன் என்று கூறினார் புக்கிட் பாத்தோக் தொகுதி இடைத் தேர் தலில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர் திரு முரளிதரன் பிள்ளை.

டாக்டர் சீ: முழு மனதுடன் உங்களுக்காக முழுநேர எம்.பி. ஆக செயல்படுவேன்

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலை மைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான்

புக்கிட் பாத்தோக் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் முழுநேர பணியில் ஈடுபடுவார் என்றும் வீடமைப்பும், சமூக திட்டங்கள் எனக் குடியிருப்பாளர்களுக்கான தேவைகளைப் பூர்த்திச் செய்ய முயல்வார் என்றும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலை மைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான் கூறினார்.

138 ஆசிரியர்களுக்கு பயிற்சி மேம்பாடு

பாலர்பள்ளி ஆசி­ரி­யர்­களின் தொழில் முன்­னேற்­றத்­துக்­கா­க­வும் அவர்கள் பெரிய பொறுப்­பு­களை வகிக்­க­வும் வழி செய்­யக்­கூ­டிய விதத்­தில் கடந்த ஆண்டு அறி­ மு­கம் கண்ட புதிய திட்­டத்­தில் பங்­கேற்­க­வி­ருக்­கும் முதல் குழுவைச் சேர்ந்த 138 ஆசி­ரி­யர்­கள் நேற்று நிய­ம­னம் பெற்­ற­னர். இந்த நிபு­ணத்­துவ மேம்பாட்­டுத் திட்­டத்­தில் பங்­கேற்­க­ இ­ருக்­கும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் இந்தத் திட்டத்தில் ஈடுபடும் மூன்றாண்டுகளில் $12,000 வரை ரொக்கம் வழங்­கு­வற்­காக ஆரம்ப­கால குழந்தைப்­ ப­ருவ மேம்பாட்டு வாரியம் $1.7 மில்­லி­யனை ஒதுக்­கி­யுள்­ளது.

கடையில் கன்னமிட்டு திருட்டு; சந்தேகப்பேர்வழி கைது

டெக் வை லேனில் இருக்கும் ஒரு கடையில் கன்னமிட்டு செல்பேசிகள், மின்னேற்றிச் சாதனங்கள் ஆகியவற்றைத் திருடியதாகக் கூறப்பட்டதன் தொடர்பில் போலிஸ் 37 வயது ஆடவர் ஒருவரைக் கைதுசெய்துள்ளது. அந்தக் கடைக்காரர் கடந்த சனிக்கிழமையன்று அதிகாலை 4.30 மணிக்குத் தன்னுடைய கடையில் கன்னமிடப்பட்டு திருட்டு நடந்து இருப்பதாகவும் செல்பேசிகள், மின்னேற்றிச் சாதனங்கள் திருடப்பட்டு இருப்பதாகவும் போலிசிடம் புகார் தெரிவித்தார். ஜூரோங் பிரிவு போலிஸ் புலன்விசாரணை நடத்தியது. சந்தேகப்பேர்வழியை அடையாளம் கண்டு அவரைச் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 6 மணிக்கு டெக் வை லேனியில் போலிஸ் கைதுசெய்தது.

வீட்டு உடைமை மாற்றம்: கடுமையான விதிகள் அமல்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், வீட்டு உடைமையை மாற்றுவதன் தொடர்பிலான விதிகளைக் கடுமையாக்குகிறது. வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் வீட்டு உரிமையாளர்கள் வீட்டு உடைமையைக் குடும்ப உறுப்பினருக்கு மாற்ற விரும்பினால் அவர்கள் இனிமேல் புதிய சட்டதிட்டங் களுக்கு உட்பட்டு நடக்கவேண்டி இருக்கும். அவர்கள் மணவிலக்கு, நிதி நெருக்கடி உள்ளிட்ட ஆறு சிறப்புச் சூழ்நிலைகளில் மட்டுமே வீட்டு உடைமையை மாற்ற அனுமதிக்கப்படுவார்கள். இதுவரையில் அவர்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.

கடன்முதலை காரியம்: சந்தேகப்பேர்வழி கைது

கடன்முதலை காரியங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக் கப்படும் 19 வயது பையன் ஒருவன் கைதானதாகச் சிங்கப்பூர் போலிஸ் தெரிவித்துள்ளது. ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 32ல் இருக்கும் வீடு ஒன்றின் உரிமையாளர் தன்னுடைய வீட்டுக் கதவில் வண்ணம் ஊற்றப்பட்டு, கதவு சைக்கிள் சங்கிலியால் பூட்டப்பட்டு, கடல்முதலை செய்கைபோல் வீட்டில் கிறுக்கப்பட்டு இருப்பதாக போலிசிடம் புகார் தெரிவித்தார். போலிஸ் படச்சாதனம் மூலமாகவும் விசாரணையின் பலனாகவும் சந்தேகப்பேர்வழியை அடையாளம் கண்டது. அவரை கிளமெண்டி பிரிவு போலிஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சுங்கை கெடோங் ரோட்டில் கைது செய்தனர்.

பட்டத்தொழிலர் தேர்ச்சிகளை மேம்படுத்த புதிதாக எட்டு செயல்திட்டங்கள்

சிங்கப்பூர் ஊழியர் அணி மேம் பாட்டு வாரியம், புதிதாக எட்டு நிபுணத்துவப் பயிற்சி செயல்திட் டங்களைத் தொடங்கும். மறுதேர்ச்சி பெற, மேம்பட, வேலை மாறிக்கொள்ள, தகவல் தொடர்புத் தொழில்நுட்பத் துறை யில் வேலைக்கு மாறிக்கொள்ள விரும்பும் பட்டத்தொழிலர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள், தொழில்நுட்பர்கள் ஆகியோர் புதிய செயல்திட்டங்கள் மூலம் பலன்பெறலாம். மூன்று முதல் ஒன்பது மாதங் கள் வரை நீடிக்கும் இத்திட்டங் கள், இணையப் பாதுகாப்பு, மென் பொருள் உருவாக்கம் போன்ற வற்றை உள்ளடக்கும். இப்புதிய திட்டங்களையும் சேர்த்தால் மொத்தம் 10 பயிற்சித் திட்டங்கள் நடப்பில் இருக்கும்.

Pages