You are here

சிங்க‌ப்பூர்

அதிவேக ரயில் திட்டத்துக்கு இதுவரை $250 மி. செலவு

 படம்: ஃபெரெல்ஸ்

கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதி வேக ரயில் திட்டத்தின் தொடர்பில் சிங்கப்பூர் இதுவரை $250 மில்லிய னைச் செலவு செய்துள்ளது என் றும் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மேலும் சுமார் $40 மில்லியன் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படு கிறது என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதிவேக ரயில் திட்டம் பற்றிய நிலவரம் குறித்து மன்ற உறுப்பினர் கள் சிலர் எழுப்பிய கேள்விகளுக் குப் பதிலளித்த திரு கோ, “இப் போதைக்கு திட்டத்துக்கான செல வுகள் $250 மில்லியனைத் தாண்டி விட்டது.

‘தீர்வு காண்பது உலக சமுதாயத்தின் பொறுப்பு’

வளரும் நாடுகள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவற்றுக்குத் தீர்வு காண உதவுவது உலகச் சமூகத்தின் பொறுப்பு என்றும் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

ஏழை நாடுகளில் வேலை தேடும் இளையர்களின் எண் ணிக்கை வெகுவாக உயர்ந்து வருவதாக அவர் கூறினார். இருக்கும் சவால்களிலேயே ஆகக் கடுமையான சவால்களை ஏழை நாடுகள் எதிர்கொள்ளக்கூடும் என்றார் திரு தர்மன்.

1962 நீர் உடன்பாட்டை சிங்கப்பூர் மதித்து நடக்கும்

மலேசியாவுடன் கூடிய 1962 தண்ணீர் உடன்பாட்டின் நிபந் தனைகளை சிங்கப்பூர் முற்றிலும் கடைப்பிடிக்கும் என்று வெளி யுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்று நாடாளு மன்றத்தில் அறிவித்தார். மலேசியாவும் அந்த உடன் பாட்டை கடைப்பிடித்து நடக்கும் என்று சிங்கப்பூர் எதிர்பார்ப்பதாக வும் அவர் கூறினார். அந்த உடன்பாட்டு நிபந்தனைகளில் தண்ணீர் விலையும் உள்ளடங் கும் என்றார் அவர். மலேசியாவுடன் கூடிய இரு தரப்பு உறவு தொடர்பான நாடாளு மன்ற உறுப்பினரின் கேள்விக்குப் பதிலளித்து பேசிய அமைச்சர், அந்த 1962 உடன்பாடு, சாதாரண ஓர் உடன்பாடு அல்ல என்றார்.

தில்லுமுல்லு கடப்பிதழ்கள்: இலங்கையர்களுக்குச் சிறை

படம்: குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம்

போலியான பிரிட்டிஷ் கடப்பிதழ்களை (பாஸ்போர்ட்) பயன்படுத்தியதற்காக இலங்கையைச் சேர்ந்த இரண்டு ஆடவர்களுக்கு இம்மாதம் 5ஆம் தேதி எட்டு மாதம் சிறைத்தண் டனை விதிக்கப்பட்டது. நாகமணி கங்காதரன், 46, கந்தசாமி நித்யானந்தன், 27, என்ற அந்த இரண்டு இலங்கை நபர்களையும் சாங்கி விமான நிலைய முனையம் 3ல் இடைவழிப் பயணிகள் பகுதியில் ஜூன் மாதம் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் பிடித்தனர். இந்த ஆணையம் இந்த விவரங்களை நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது. நாகமணியும் கந்த சாமியும் இலங்கைக்கு வெளியே வேலை தேடினார்கள்.

அவசரநிலை அழைப்பு அதிகாரிகளுக்கு உதவும் செயற்கை நுண்ணறிவு

சிங்கப்பூரில் ஓராண்டுக்கு ஏறத்தாழ 200,000 அவசரநிலை அழைப்புகள் பதிவாகின்றன. இதைக் கருத்தில் கொண்டு அவசரநிலை அழைப்புகளை ஏற்று தேவையான உதவிகளை அனுப்பி வைக்கும் அதிகாரிகளின் வேலைப் பளுவைக் குறைக்க சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் மேலும் நான்கு அரசாங்க அமைப்புகளும் செயற்கை நுண்ணறிவை நாடுகின்றன.

அழைப்பவர்கள் சிங்லி‌ஷில் பேசினாலும் அதை அடையாளம் காணும் முறை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது ஆங்கிலம், சீனம், சிறிதளவு ஹொக்கியன், மலாய் ஆகிய மொழிகள் மட்டும் அடையாளம் காணப்படுகின்றன.

டிபிஇ-பிஐஇ மேம்பாலச் சாலைக்கான கட்டுமான ஒப்பந்தம் ரத்து

தெம்பனிஸ் விரைவுச்சாலை-தீவு விரைவுச்சாலை மேம்பாலச் சாலைக்கான கட்டுமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய நிலப் போக்குவரத்து ஆணையமும் உள்ளூர் கட்டுமான நிறுவனமான ஓர் கிம் பியாவ்வும் இணங்கியுள்ளன.

மேம்பாலச் சாலைக்கான கட்டுமானப் பணியை ஏற்று நடத்த ஓர் கிம் பியாவ் நிறுவனத்துக்குப் பதிலாக வேறொரு நிறுவனத்தை தேர்ந்தெடுக்க இம்மாதம் ஏலக் குத்தகை நடத்தப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

முழுமையாக கட்டி முடிக்கப்படாத நிலையில் அந்த மேம்பாலச் சாலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் இடிந்து விழுந்தது. அந்த விபத்தின் காரணமாகக் கட்டுமான ஊழியர் ஒருவர் மரணம் அடைந்தார். பத்து பேர் காயமுற்றனர்.

சட்டவிரோத புகைபிடித்தலை கண்டுபிடிக்க தீவெங்கும் கேமராக்கள்

தடை செய்யப்பட்ட இடங்களில் புகைபிடிப்போரைக் கண்டுபிடிக்க தீவெங்கும் கேமராக்களைப் பொருத்த தேசிய சுற்றுப்புற வாரியம் திட்டமிட்டுள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களும் குப்பை வீசுபவர்களும் இந்தத் திட்டம் வாயிலாக அதிகாரிகளிடம் சிக்குவர்.

சுற்றுப்புறச் சேவைத் துறைக்கான திட்டத்தில் 11 அமைப்புகள்

கிளீன்என்வைரோ உச்சநிலை மாநாட்டில் சுற்றுப்புறச் சேவைத் துறையை நவீனப்படுத்துவதற்கான பங்காளித்துவத் திட்டத்தில் புதிதாக 11 அமைப்புகள் இணைந்துள்ளன. அவற்றில் மரினா பே சேண்ட்ஸ், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் ஆகியவை அடங்கும்.

புத்தாக்கம், தொழில்நுட்பப் பயன்பாடு, திறன் மேம்பாடு, உற்பத்தித் திறன் அதிகரிப்பு போன்வற்றை மேம்படுத்த இந்த திட்டம் இலக்கு கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாது வெளிநாடுகளில் உள்ள வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வது திட்டத்தின் நோக்கம்.

லிட்டில் இந்தியா வீட்டில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை புதிய தகவல்

லிட்டில் இந்தியா பகுதியிலுள்ள 8 சிங் அவென்யூ வீடு ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீப்பிடித்ததற்கு மின்சாரத்தால் இயங்கும் சைக்கிளுக்கு மின் னூட்டியதே காரணம் என சிங் கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தன் முதல்கட்ட விசாரணைக்குப் பின் ஃபேஸ்புக் வழி தெரி வித்துள்ளது. யாருக்கும் காயங்கள் ஏற்படாத அத்தீச்சம்பவத்தில் தீயை அணைக்கச் சுமார் இரண்டு மணி நேரமானது. தீயைக் கட்டுக்குள் கொண்டு வர ஏழு நீர்ப்பாய்ச்சு குழாய்கள் வீரர்களால் பயன்படுத் தப்பட்டன.

அமைச்சர்: வர்த்தகப் போர் மிரட்டல் காரணமாக சிங்கப்பூர் பெரும் கவலை

படம்: சாவ் பாவ்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடைப் பட்ட வர்த்தகப் போர் காரணமாக உலகப் பொருளியல் கணிசமாகப் பாதிக்கப்படும். நிதிச் சந்தைகள் நிலையில்லாமல் போகும் என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்து இருக்கிறார். அந்த நிலவரத்தைப் பெரும் கவலை யுடன் சிங்கப்பூர் கண்காணித்து வர வேண்டிய சூழல் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். வர்த்தகம் தொடர்பான முரண்பாடு களுக்குத் தீர்வுகாண உலக வர்த்தக நிறுவனத்தின்கீழ் வழிமுறைகள் இருக் கின்றன என்பதைச் சுட்டிய அவர், இத் தகைய பிரச்சினைகள் வலுவடையக் கூடாது என்று தெரிவித்தார்.

Pages