You are here

சிங்க‌ப்பூர்

கனரக வாகன உரிமையாளர்கள் பொறுப்புடன் நடக்க வலியுறுத்து

சரியாகப் பராமரிக்கப்படாத கன ரக வாகனங்களால் விபத்து ஏற் டுபவதைத் தவிர்க்க அதன் உரிமையாளர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் ஒத்திவைப்புத் தீர்மானத்தைத் தாக்கல் செய்து பேசிய புக்கிட் பாத்தோக் தொகுதி உறுப்பினர் முரளிபிள்ளை இதனை வலியுறுத் தினார். கடந்த மார்ச் மாதம் இழுவை லாரி ஒன்றிலிருந்து கழன்று ஓடிய சக்கரம் மோட்டார் சைக்கிளோட்டி மீது மோதியதில் அவர் மாண்டார். அதேபோல கடந்த மாதம் தனியார் பேருந்தின் நிறுத்துவிசை பழுதானதால் சைக்கிளோட்டிமீது அப்பேருந்து மோதியதில் அவர் மாண்டார்.

$5.2 மில்லியன் கையாடல்: ஏழாண்டுக்கு மேல் சிறை

தன் வாடிக்கையாளர்களிடமிருந்து சுமார் 5.2 மில்லியன் வெள்ளியைக் கையாடிய 46 வயது ஜேக்கஸ் சாய் மெங் கியோங், நேற்று ஏழு ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றார். தற்கொலை முயற்சிக்காகவும் சட்டவிரோத நம்பிக்கை மோசடிக் காகவும் விசாரணையில் இருந்த போது, இவர் தன் நண்பரின் தென் கொரிய கடப்பிதழைப் பயன்படுத்தி சிங்கப்பூரிலிருந்து வெளியேறவும் முயன்றதாக அறியப்படுகிறது. வேறொருவரின் கடப்பிதழைப் பயன்படுத்திய குற்றத்தையும் மேலும் நான்கு நம்பிக்கை மோசடிக் குற்றங்களையும் சாய் ஒப்புக் கொண்டார்.

சிறுமி பாலியல் பலாத்காரம்: ஆடவருக்கு 18 ஆண்டு சிறை, 24 பிரம்படிகள்

தான் வாடகைக்குத் தங்கியிருந்த வீட்டு உரிமையாளர் மகளை 45 வயது அர்ஷாத் துல்லா மூன்று மாதங்களாகப் பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். கடந்த ஆண்டு மே 6ஆம் தேதியன்று அர்ஷாத் துக்குத் தன்னை மிகவும் பிடிக்கும் எனச் சிறுமி தன் தாயாரிடம் கூறியபோது ஆடவர் செய்த குற் றங்கள் யாவும் வெட்டவெளிச் சமாகின.

கூடுதல் வருமானத்திற்காக சிறுமியின் பெற்றோர் தங்கள் நான்கறை வீட்டிலுள்ள இரு அறை களை வாடகைக்கு விட்டிருந்தனர். 2012இலிருந்து அர்ஷாத் தங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்து வந்ததால் நீண்ட நாள் பழக்கம் காரணமாக சிறுமியின் குடும்பத் தினர் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தனர்.

விளையாட்டு வார நிகழ்வில் 800,000 பேர் பங்கேற்பு

‘கெட் ஆக்டிவ்! சிங்கப்பூர்’ என் னும் வருடாந்திர தேசிய விளை யாட்டு வாரத்தில் இவ்வாண்டு பங்கேற்றோர் எண்ணிக்கை அதிக ரித்துள்ளது. தேசிய தினத்தை யொட்டி நடத்தப்படும் இந்நிகழ் வில் கடந்த 11 நாட்களாக கிட்டத் தட்ட 800,000 பேர் பங்கேற்றனர். கடந்த ஆண்டு இந்த எண் ணிக்கை 680,000 ஆக இருந்தது. தேசிய விளையாட்டு வாரம் என் னும் இந்தத் துடிப்பான நிகழ்வு கடந்த 2016ஆம் ஆண்டு அறி முகம் கண்டது. மூன்றாவது ஆண்டாக இப் போது நடைபெற்ற விளையாட்டு வாரத்தில் சுமார் 300 நடவடிக் கைகளும் 12 விளையாட்டு விழாக் களும் இடம்பெற்றன.

சீனா-ஆசியான் முதலாவது கடற்பயிற்சி

சீனாவும் ஆசியானின் 10 நாடு களும் சாங்கி கடற்படைத் தளத்தில் ஆர்எஸ்எஸ் சிங்கப்பூரா கப்பலில் வியாழக்கிழமை தங்களு டைய முதலாவது ஆசியான்-சீனா கடற்படை பயிற்சியை நடத்தின. இந்த 11 நாடுகளின் கடற்படை களும் கலந்துகொள்ளும் களப் பயிற்சியை சீனாவில் நடத்த இரு தரப்புகளும் திட்டமிட்டுள்ளன. சாங்கி கடற்படைத் தளத்தில் நடந்த இரண்டு நாள் இணையப் போர் பயிற்சியில் உண்மையான களப் பயிற்சிகள் இடம்பெறவில்லை. இந்த இணையப் போர் பயிற்சியை சிங்கப்பூர் கடற்படை நடத்தியது.

நிலநடுக்கத்தின் உக்கிரத்தை அமைச்சர் சண்முகம் விவரித்தார்

இந்தோனீசியாவின் லொம்போக் தீவில் நிகழ்ந்த சக்கிவாய்ந்த நில நடுக்கத்தின் தாக்கங்கள் குறித்து தாம் கண்டவற்றை சிங்கப்பூரின் சட்ட, வெளியுறவு அமைச்சர் கா. சண்முகம் தமது ஃபேஸ்புக் பதிவில் விவரித்துள்ளார். 6.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து லொம்போக்கிலிருந்து வெளியேறி சிங்கப்பூர் செல்லும் விமானத்திற்காகக் காத்திருப்ப தாக நேற்றுக் காலை அவர் அந்தப் பதிவில் கூறினார். சிங்கப்பூருக்குப் பத்திரமாக வந்திறங்கிய பின்னர் நேற்று பிற்பகலில் செய்தியாளர்களிடமும் நிலநடுக்க அனுபவங்களை திரு சண்முகம் பகிர்ந்துகொண்டார்.

நாடாளுமன்றத்தில் இணையத் தாக்குதல், தேசிய தினத்தை முன்னிட்டு தேசிய சேவையாளர் மரணம் விவகாரங்கள்

நாடாளுமன்றம் திங்கட்கிழமை கூடும்போது சிங்ஹெல்த் இணை யத் தாக்குதல் பற்றிய அமைச்சர் நிலை அறிக்கை தாக்கலாகும். அண்மையில் பயிற்சியின் போது ஒரு தேசிய சேவையாளர் மரணமடைந்தது தொடர்பான விவரங்களும் மன்றத்தில் தாக்க லாகும். சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் இருவரும் இணையத் தாக்குதல் பிரச்சினை பற்றிப் பேசுவர். இந்தத் தாக்குதல் தொடர்பில் இந்த இரு அமைச்சர்களிடத்தி லும் சுமார் 20 கேள்விகள் கேட் கப்பட்டு இருக்கின்றன.

பிரதமர் லீ: வெற்றிகரமான அரசாங்க நிறுவனம் கெப்பல்

கெப்பல் கார்ப்பரேஷன் அரசாங்கம் தொடர்புடைய, முற்றிலும் வர்த்தக ரீதியில் செயல்படுகின்ற வெற்றிகர மான நிறுவனத்திற்கு அருமையான ஓர் எடுத்துக்காட்டு என்று திரு லீ தெரிவித்து இருக்கிறார். அந்த நிறுவனத்தின் 50வது ஆண்டுவிழா விருந்தில் நேற்று சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய திரு லீ, பாதகங் களைச் சாதகங்களாக மாற்றிக் கொண்ட பெரிய உள்ளூர் நிறுவனம் என்று கெப்பல் நிறுவ னத்தை வர்ணித்தார். புதுப்புது முயற்சிகளை எடுக்க அந்த நிறுவனம் தயங்கியதில்லை என்றார் அவர். “சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்கு கெப்பல் நிறுவனம் உதவி இருக்கிறது.

ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய தலைவர் நீக்கம்

சிராங்கூன் ரோட்டிலுள்ள ஸ்ரீ வீர மாகாளியம்மன் ஆலயத்தின் நிர் வாகத் தலைவர் பதவியில் இருந்து திரு சிவகடாட்சத்தை உடனடியாக நீக்க அறநிறுவன ஆணையர் உத் தரவிட்டுள்ளார். சிங்கப்பூரின் ஆகப் பழமையான இந்து ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தில் கடுமையான நிர்வாகச் சீர்கேடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. வருங்காலத்தில் எந்தவொரு நிர்வாக வாரியத்தின் உறுப்பின ராகவோ அறக்கட்டளையின் முக் கிய அதிகாரியாகவோ அல்லது அறங்காவலராகவோ சிவகடாட்சம் செயல்படுவதற்கு தடையும் விதிக் கப்பட்டுள்ளது.

தரவுகளை பாதுகாக்க பல்வேறு ஏற்பாடுகள் நடப்பில் உள்ளன

சிங்ஹெல்த் மீது மேற்கொள் ளப்பட்ட இணையத் தாக்குதல் மூலம் 1.5 மில்லியன் நோயாளி களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டதைத் தொடர்ந்து அது குறித்த கவலைகள் நில வும் வேளையில் அத்தரவு களும் அடையாளங்களும் தவ றாகப் பயன்படுத்தப்படாமல் தடுக்க ஏராளமான பாதுகாப்பு நடைமுறைகள் நடப்பில் உள்ள தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் நேற்று நாடாளு மன்றத்தில் இதற்கான உறு தியை அளித்தார். கவலைகள் நிலவுவதை ஒப்புக்கொண்ட அமைச்சர், “ஆபத்துகளைக் குறைப்பதற்குப் போதுமான பல்வேறு பாதுகாப்பு நடைமுறை கள் நடப்பில் உள்ளன.

Pages