You are here

சிங்க‌ப்பூர்

பூன் லே அடகுக்கடை கொள்ளை முயற்சி: முன்னாள் கட்டுமான ஊழியர் மீது குற்றச்சாட்டு

பூன் லே எம்ஆர்டி நிலையத்திற்கு வெளியே இருக்கும் அடகுக்கடை ஒன்றில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் கட்டுமான ஊழியர் ஒருவர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஷேக் முகம்மது ரசான், 29, என்ற அந்த ஆடவர், கொள்ளையடிக்க முயன்றதாகக் கூறும் குற்றச்சாட் டையும் துப்பாக்கி போன்ற ஒரு பொருளை வைத்துக்கொண்டு அந்தக் குற்றச்செயலை செய்த தாகக் கூறும் வேறு ஒரு குற்றச் சாட்டையும் எதிர்நோக்குகிறார்.

‘பொருளியலுக்கு டிபிஎஸ் தொடர்ந்து முக்கிய பங்காற்றும்’

நிதித்துறை தொழில்நுட்பங்கள் காரணமாக வங்கித் துறை வரும் ஆண்டுகளில் பெரும் மாற்றம் காணும் என்றும் இந்தச் சூழலில் டிபிஎஸ் வங்கி தொடர்ந்து புத்தாக் கத்தோடு திகழ்ந்து எதிர்காலத் திற்கு ஏற்றது போல் உருமாறி வருவது தமக்கு மகிழ்ச்சி அளிப்ப தாகவும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார். இந்தியாவின் கையடக்கச் சாத னங்கள் வழியாக மட்டும் செயல் படக்கூடிய முதலாவது ‘டிஜிபேங்க்’ என்ற மின்னிலக்க வங்கி முறையை வெற்றிகரமான முறை யில் டிபிஎஸ் தொடங்கி இருப்ப தைத் திரு லீ குறிப்பிட்டார்.

துடிப்புமிக்க முதுமைக்காலத்தை ஊக்குவிக்கும் வெகுமதித் திட்டம்

துடிப்பான முதுமைக்காலத்தை ஊக்குவிக்கும் புள்ளிமுறை வெகுமதித் திட்டம் ஒன்று மூத் தோருக்கென அறிமுகம் செய்யப் பட்டது. ஆறு மாதங்கள் கழித்து திட் டத்தில் சேர்ந்த முதியோரின் மன விழிப்புணர்விலும் சமூகத் தொடர்புத் திறனிலும் குறிப்பிடத் தக்க முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. திட்டத்தில் பங்கெடுப்பதற்காக வருகை அளிப்போர் எண்ணிக்கை யும் 20 விழுக்காடு அதிகரித்திருக் கிறது என்று தொண்டூழிய சமூக நல அமைப்பான ‘ஏவா’வின் (AWWA) சுகாதார, மூத்தோர் பரா மரிப்பு இயக்குநர் திரு கீத் லீ கூறினார்.

சீனா-ஆசியான் முதலாவது கடற்பயிற்சி

சீனாவும் ஆசியானின் 10 நாடு களும் சாங்கி கடற்படைத் தளத்தில் ஆர்எஸ்எஸ் சிங்கப்பூரா கப்பலில் வியாழக்கிழமை தங்களு டைய முதலாவது ஆசியான்-சீனா கடற்படை பயிற்சியை நடத்தின. இந்த 11 நாடுகளின் கடற்படை களும் கலந்துகொள்ளும் களப் பயிற்சியை சீனாவில் நடத்த இரு தரப்புகளும் திட்டமிட்டுள்ளன. சாங்கி கடற்படைத் தளத்தில் நடந்த இரண்டு நாள் இணையப் போர் பயிற்சியில் உண்மையான களப் பயிற்சிகள் இடம்பெறவில்லை. இந்த இணையப் போர் பயிற்சியை சிங்கப்பூர் கடற்படை நடத்தியது.

தடை நீக்கம்: அறிவார்ந்த நகர் திட்டங்கள் மீண்டும் தொடக்கம்

சிங்கப்பூர் தன்னுடைய அறிவார்ந்த நகர் திட்டங்களை மீண்டும் வேக மாகத் தொடங்கி இருக்கிறது. பாதுகாப்பு இல்லாத, பணி களுக்குப் பயன்படுத்தும் கணினி முறையுடன் கூடிய இணையத் தொடர்புகளைத் துண்டிக்குமாறு அரசாங்கம் மிக முக்கியமான 11 சேவைத் துறைகளுக்கு உத்தர விட்டுள்ளது. சிங்ஹெல்த் குழுமத்தின் இணையத் தரவு தளம் ஊடு ருவப்பட்டு தகவல்கள் திருடப் பட்டன. அதைத் தொடர்ந்து பெரிய அளவில் இணையப் பாதுகாப்பு பற்றிய மறுபரிசீலனை இடம் பெற்றது. அந்த நடவடிக்கை தற்போது முடிவடைந்துள்ளது. சிங்ஹெல்த் தாக்குதலை யடுத்து புதிய அறிவார்ந்த நகர் திட்டங்கள் சிலவற்றின் தொடக் கத்தை அரசாங்கம் நிறுத்தி வைத் திருந்தது.

பூன் லே அடகுக்கடை கொள்ளை முயற்சி: முன்னாள் கட்டுமான ஊழியர் மீது குற்றச்சாட்டு

பூன் லே எம்ஆர்டி நிலையத்திற்கு வெளியே இருக்கும் அடகுக்கடை ஒன்றில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் கட்டுமான ஊழியர் ஒருவர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஷேக் முகம்மது ரசான், 29, என்ற அந்த ஆடவர், கொள்ளையடிக்க முயன்றதாகக் கூறும் குற்றச்சாட் டையும் துப்பாக்கி போன்ற ஒரு பொருளை வைத்துக்கொண்டு அந்தக் குற்றச்செயலை செய்த தாகக் கூறும் வேறு ஒரு குற்றச் சாட்டையும் எதிர்நோக்குகிறார்.

‘ஸ்கூட்’ விமானக்கட்டணம் உயர்கிறது

மலிவு கட்டண விமானச் சேவையான ‘ஸ்கூட்’ நிறுவனம் அதன் பயணக் கட்டணங்களை செப்டம்பர் முதல் தேதியிலிருந்து 5 வெள்ளிமுதல் 30 வெள்ளி வரை உயர்த்தவுள்ளது. பயணக் கால அளவைப் பொறுத்துக் கட்டண உயர்வு அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மார்ச் 2016ல் ஆறு ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு எரிபொருள் விலை குறைந்திருந்ததால் ஸ்கூட் நிறுவனம் பயணிகள் கட்ட வேண்டிய கட்டணத்திலிருந்து எரிபொருளுக்கான கூடுதல் கட்டணத்தை நீக்கியது.

முன்கூட்டியே கட்டணத்தைக் காட்டும் ‘ரைட்’

‘ரைட்’ எனப்படும் சவாரி சேவை நிறுவனம் இனித் தன் செயலிவழி அழைப்போருக்கு முன்கூட்டியே கட்டணத்தைத் தெரிவிக்கும் வசதியை வழங்க இருப்பதாக நேற்று அறிவித்தது. இதே வசதியை ‘ஜஸ்ட்கிராப்’ என்று சென்ற ஆண்டு கிராப் நிறுவனம் அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து ரைட் நிறுவனமும் அதே பாதையில் செல்ல இருக்கிறது. சுமார் 7,000 டாக்சி ஓட்டு நர்களை இதன்வழி இணைத்துக் கொள்ள முடியும் என்றும் இதனால் தற்போது உள்ள ஐந்து நிமிடங்களிலிருந்து நான்கு நிமிடங்கள்தான் பயணிகள் காத்திருக்க வேண்டும் என்றும் நிறுவனம் கூறியது.

கை, கால், வாய்ப் புண் நோய்: ஜோகூர் செல்ல அஞ்ச வேண்டாம்

பொருள்கள் வாங்கவும் பொழு தைக் கழிக்கவும் அண்டை நாடான மலேசியாவுக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் முன்னெச் சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தங்கள் பிள்ளைகளுக்குக் கை, கால், வாய்ப் புண் நோய் ஏற்படும் அச்சம் இருக்காது என்று ஜோகூர் மாநில சுகாதாரம், சுற்றுப்புறம், உழவுத் துறை நிர்வாகக்குழு தலைவர் டாக்டர் சாருடீன் ஜமால் நேற்று கூறினார். சுகாதாரமான பழக்கங்களைப் பின்பற்றும் குடும்பங்கள் ஜோகூர் பாரு அளிக்கக்கூடிய வசதி களையும் சுற்றுலா இடங்களையும் அனுபவிப்பதில் எந்த ஓர் இடை யூறும் நேராது என்றும் அவர் விவரித்தார்.

கூகலின் வேலை வாய்ப்புச் சேவை

வேலை தேடுவோருக்கு கூகல் நிறுவனம் இணையம்வழி ஒரு புது வேலை தேடும் வசதியைத் தொடங்கியுள்ளது. வேலை வாய்ப்புகள் தொடர்பான பட்டியல், 1,500க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு இணையத் தளங்களிலிருந்து பெறப்பட்டது. வேலை பொறுப்புகள், திறன்கள் குறித்துத் தேடுவோருக்கு உடனே அவை தொடர்பான வேலை வாய்ப்பு பற்றிய தகவல்கள் காண்பிக்கப்படும். பின், வேலை தொடர்பாக முதன்முதலில் விளம்பரம் செய்த இணையத்தளத்தின்வழி அந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

Pages