You are here

சிங்க‌ப்பூர்

பசுமைக் கட்டடங்கள் முக்கியம்

பொதுமக்கள் நீடித்து நிலைக்கக் கூடிய கட்டடங்களின் முக்கியத் துவத்தை அறிந்துகொள்ள சிங்கப்பூர் பசுமைக் கட்டட மன்றம் நேற்று ‘Live.Work.Play. Green’ என்ற இரு மாத இயக்கத்தைத் தொடக்கி வைத்தது. மெல்பர்ன் நகருக்கு இரண்டு பேர் சென்று வர இலவசப் பயணம், மரினா பே சேண்ட்ஸ், ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா விடுதிகளில் தங்குவது போன்ற கவர்ச்சியான பரிசுகளை வெல்லப் பொதுமக்கள் முதலில் இணையம் வாயிலாகப் புதிர்க் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

ஜூரோங் வெஸ்ட்டில் கூகலின் மூன்றாவது தரவு மையம்

சிங்கப்பூரில் மூன்றாவது தரவு மையத்தை அமைக்க இருப்பதாக கூகல் நேற்று அறிவித்தது. இந்த வட்டாரத்தில் வேகமாக அதி கரித்து வரும் தேவைகளைப் பூர்த்திசெய்யும் விதத்தில் இந்த மையம் நிறுவப்படுவதாக அமெரிக்க இணைய நிறுவனமான கூகல் தெரிவித்தது. இந்தப் புதிய முதலீட்டை அடுத்து சிங்கப்பூரில் கூகல் தரவு மையங்களின் மொத்த முதலீடு 850 மில்லியன் அமெரிக்க டாலர்களாக (S$1.157 பில்லியன்) உயர்கிறது.

சாலையின் நடுவில் தடுப்புச் சுவரில் மோதி ஆடவர் பலி

தெம்பனிசில் சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதிய மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்டு மாண்டு போனார். தெம்பனிஸ் அவென்யூ 9க்குச் செல்லும் வழியில் தெம்பனிஸ் அவென்யூ 2ல் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து நேற்று முன்தினம் காலை 9.09 மணிக்கு போலி சாருக்கு தகவல் கிடைத்தது. புளோக் 208க்கு அருகில் விபத்து நடந்த இடத்துக்கு அவசர மருத்துவ உதவி வாகனத்தை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அனுப்பிவைத்தது. சுயநினை வற்ற நிலையில் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் மாண்டு போனார்.

சமூக நிறுவனங்களுக்கு எஸ்பிஎச் $350,000 நன்கொடை

‘சேஜ்’ எனும் சமூக சேவை நிறுவனம், கடந்த இருபது ஆண்டுகளாக முதியோர்கள் மற்றும் அவர்களுடைய அன்புக் குரியவர்களின் பிரச்சினைகளை அக்கறையுடன் செவிமடுத்து தகுந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறது. முதியோர்களும் தங்க ளுடைய உடல்நிலை, மனநிலை, தனிமை, குடும்ப உறுப்பினர் களுடனான உறவில் உள்ள சவால்களை அதனுடன் பகிர்ந்து வருகின்றனர். முதியோர்கள் தொடர்பு கொள்ள நேரடி தொலைபேசி வசதிகளையும் ‘சேஜ்’ செய்துள் ளது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி யில் சிங்கப்பூர் பிரஸ் ஹோல் டிங்சும் அதன் அறநிறுவனமான எஸ்பிஎச் ஃபவுண்டேஷனும் ‘சேஜ்’ உட்பட இருபது சமூக சேவை நிறுவனங்களுக்கு 350,000 வெள்ளி நன்கொடை வழங்கியது.

ஐந்து துறைகளில் கவனம் செலுத்தும் என்டியுசி

ஊழியர்களுக்கு உதவ ஐந்து துறைகளில் தொழிலாளர் இயக்கம் கவனம் செலுத்தவிருக் கிறது. சிறந்த சம்பளமும் இவற் றில் ஒன்று என்று நேற்று பேசிய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தலைவரான இங் சீ மெங் தெரி வித்தார். என்டியுசியின் தலைமை செயலாளர் என்ற பொறுப்பில் முதல் முறையாக அவர் தமது தேசிய நாள் செய்தியை வெளி யிட்டார். இவ்வாண்டு சிங்கப்பூரின் வளர்ச்சி நிலையாக இருந்து வருவதை சுட்டிக்காட்டிய திரு இங் சீ மெங், நமது வெற்றியின் முக்கிய கூறு ஊழியர்கள் என்று வருணித்தார்.

நிலத்தின் பயன்பாட்டை அதிகரிக்க $61 மி. ஆய்வு

நிலத்தின் பயன்பாட்டை அதி கரிக்கும் வழிகளை கண்டறியவும் பசுமையான சூழலை உருவாக் கவும் 61 மில்லியன் வெள்ளி செலவில் புதிய சோதனைச் சாலை அமைக்கப்படுகிறது. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் சுர்பானா ஜூரோங் ஆலோசனை நிறு வனம், என்டியுவைத் தளமாகக் கொண்ட சோதனைச் சாலை ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் அமையும் சோதனைச் சாலையில் 11 சுற்றுப்புறத் திட்டங்கள் குறித்து ஆராயப்படும். இதன் மூலம் காணப்படும் தீர்வு, நிறுவனங் களுடனும் அரசாங்க அமைப்பு களுடனும் பகிர்ந்து கொள்ளப் படும். குளிரூட்டும் மேற்கூரை தகடுகள் குறித்து ஆராய்வதும் திட்டங்களில் ஒன்று.

1.76 பி. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் 1.76 பில்லியன் நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்கள் பயன்படுத்தப்படுவ தாகவும் அதில் 20 விழுக்காட்டுக் கும் குறைவாகவே மறுபயனீடு செய்யப்படுவதாகவும் சிங்கப்பூர் சுற்றுச்சூழல் மன்றம் நேற்று வெளியிட்ட கருத்தாய்வு முடிவு தெரிவிக்கிறது. அதன்படி கிட்டத்தட்ட ஒருவர் தினமும் ஒரு பிளாஸ்டிக் என்ற வீதத்தில் நெகிழி பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நிர்வாக முறை குறித்து கடைக்காரர்கள் அதிருப்தி

தரமில்லா நிர்வாகம் குறித்து பாசிர் ரிஸ் சென்ட்ரல் உணவு அங்காடி நிலையத்தின் கடைக் காரர்கள் பலர் குறை கூறியுள்ளனர். இந்த நிலையம் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இயங்கி வரு கிறது. தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) ஃபூட்ஃபேர் அமைப்பு நிர்வகித்து வரும் இந்த நிலையத்தின் அதிகாரபூர்வத் திறப்பு விழா இம்மாதம் 14ஆம் தேதியன்று நடைபெற்றது. இரண்டு மாடி கொண்ட உணவு அங்காடி நிலையத்தில் மொத்தம் 42 கடைகள் உள்ளன. பெயர் வெளியிட விரும்பாத கடைக்காரர்கள் சிலர் உணவு அங்காடி நிலையம் நிர்வகிக்கும் முறை தொடர்பில் தி நியூ பேப்பர் நாளிதழிடம் தங்களுடைய அதிருப்தியைத் தெரிவித்தனர்.

இரட்டை புற்றுநோயையும் கடந்த வாழ்வு

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு முன், குடும்பத்துடன் தென் கொரியாவுக்குச் செல்வதாக இருந்த திரு எழில் மதியன் தமது மலக் கழிவில் ரத்தம் இருந்ததை உணர்ந்தார். விடுமுறைக்குப் பிறகு மருத் துவப் பரிசோதனைக்குச் சென்ற வருக்குப் பெருங்கூடல் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. 52 வயதில் அவருக்கு உலகமே தலைகீழாய் நின்றது. மேற்கொண்டு சிகிச்சையில், ஆண்விதை புற்றுநோயும் தமக்கு இருப்பது தெரிய வந்தது. வாழ்நாள் முழுக்க ‘ஸ்டோமா’ பை உடலில் பொருத்தப்பட வேண்டும் என்பது மூன்றாவது அதிர்ச்சி.

அரசாங்க வாடகை வீடுகளில் ஒற்றையர், சிறிய குடும்பத்தினர்

அரசாங்க வாடகை வீடுகளில் ஒற்றையர்களும் சிறிய குடும்பங்களும் அதிகம் வசிப்பதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் நீண்ட காலத்திற்கு குடியிருக்கிறார்கள் என்றும் பாதி பேர் தங்களுடைய வாடகை வீடுகளில் 10 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலம் இருந்து வந்துள்ளதாகவும் அந்த விவரங்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் 50,000 வாடகை வீடுகள் இருக்கின்றன. அரசாங்க வாடகை வீட்டு விண்ணப்பதாரர்களின் சராசரி வயது 43 ஆண்டுகள்.

Pages