You are here

சிங்க‌ப்பூர்

டாக்டர் விவியன்: சிங்கப்பூர், மலேசியா உறவு பலமடையும்

சிங்கப்பூரும் மலேசியாவும் அணுக்கமாகச் சேர்ந்து செயல் பட்டு இருதரப்பு உறவையும் வட் டார ஒத்துழைப்பையும் பலப்படுத்த முடியும் என்று தான் நம்புவதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். டாக்டர் விவியன் நேற்று சிங்கப்பூரில் மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல் லாவைச் சந்தித்தார். அதற்குப் பிறகு அவர் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்தார். புதிதாக பதவி ஏற்றுக் கொண்டுள்ள மலேசிய அமைச்சர் இரண்டு நாள் அறிமுக பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வந் திருக்கிறார். இங்கு நடைபெறும் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத் திலும் அதன் தொடர்பான இதர கூட்டங்களிலும் அவர் கலந்து கொள்கிறார்.

விளையாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்

குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் 20 ஜோடி விளையாட்டுத் துப்பாக்கிகளையும் (Airsoft guns) அவை தொடர்பான பொருட்களையும் இம்மாதம் 24ஆம் தேதி கைப்பற்றியது. சாங்கி விமான சரக்கு மையத்தில் சரக்குகளைச் சோதனையிட்டபோது அதிகாரி ஒருவர் அவற்றைப் பார்த்ததாக ஃபேஸ்புக்கில் ஆணையம் தெரிவித்தது. இத்தகைய துப்பாக்கிகள், ஆயுதம் மற்றும் வெடிமருந்துகள் சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட ஆயுதங்களாகும். போலிஸ் விசாரணை நடக்கிறது.

ஆணையம் கைப்பற்றிய துப்பாக்கிகளும் அதன் தொடர்பான பொருட்களும். படம்: ஃபேஸ்புக்/ குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம்

நகைச்சுவை, கேளிக்கை உணர்வுகளுக்கு முக்கியத்துவம்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பை விட சிங்கப்பூரர்கள் தற்போது நகைச்சுவை, கேளிக்கை உணர்வு களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக தேசிய பண்பு நெறிகள் மதிப்பீட்டு ஆய்வில் தெரிய வந்துள்ளது. மூன்றாவது முறையாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டிலும் 2015ஆம் ஆண்டிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டபோது நகைச்சுவை, கேளிக்கை உணர்வுகள் முதல் பத்து இடங்களைப் பிடிக்க வில்லை. ஆய்வின் கண்டுபிடிப்புகள் கொள்கை ஆய்வுக் கழக வட்ட மேசைக் கலந்துரையாடலில் தெரி விக்கப்பட்டது.

‘நூல் வாசிப்பு சிங்கப்பூரரின் வழக்கமாக இருக்கவேண்டும்’

ப. பாலசுப்பிரமணியம்

கூட்டாகச் சேர்ந்து நூல்களை வாசிக்கும்போது சமுதாயத்தின் வெவ்வேறு பின்னணியிலிருந்தும் வருபவர்கள் ஒன்றிணைகின்றனர் என்றும் நூல் வாசிப்புப் பழக்கம் சிங்கப்பூரர்கள் நடைமுறை வாழ்க் கையில் ஒன்றாகவேண்டும் என் றும் வர்த்தக தொழில்; கல்வி மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்தார். சிற்பிகள் வாசிப்பு மன்றத்தின் 10வது ஆண்டு நிறைவையும் தேசிய நூலக வாரியத்தின் தேசிய வாசிப்பு தினத்தையும் முன்னிட்டு ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்தில் நேற்று காலையில் நடந்த கூட்டு புத்தக வாசிப்பு நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

ஆசியான் சட்ட சங்கத்துக்கு தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைவர்

சிங்கப்பூரின் தலைமை நீதிபதி திரு சுந்தரேஷ் மேனன், ஆசியான் சட்ட சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தச் சங்கத்தின் 13வது பொதுப் பேரவை கூட்டம் சனிக்கிழமை நடந் தது. அதில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு சுந்தரேஷ் மேனன், மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பதவியை வகிப்பார்.

மறுமேம்பாடு காணும் பழைய அப்பர் தாம்சன் ரோடு

மூன்று கிலோமீட்டர் நீளமுடைய பழைய அப்பர் தாம்சன் ரோடு 1960களிலும் 1970களிலும் புகழ் பெற்ற கார் பந்தயங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. அதைப் பொழுதுபோக்கு நடவ டிக்கைகளுக்கான இடமாக மாற் றும் திட்டத்தின்கீழ் அதற்கான பணிகள் முன்னரே அறிவிக்கப் பட்டிருந்தன. சற்று தாமதமாக இப்போது அந்தப் பணிகள் தொடங்கியுள் ளன. இருவழிச் சாலையாக இருந்த இந்தப் பாதையை இப்போது ஒரு வழிச் சாலையாக, புதுப் பூங்கா இணைப்பாக மாற்றியமைக்கும் திட்டத்தைத் தேசிய பூங்காக் கழகம் தொடங்கியுள்ளது. இதற்கான வேலைகள் சென்ற ஆண்டு இறுதியில் தொடங்கப் பட்டு அடுத்த ஆண்டு முற்பகுதிக் குள் முடிவுற திட்டமிடப்பட்டிருந்தன.

சிங்கப்பூர் கடற்துறையில் அதிகமான வேலை வாய்ப்புகள்

புத்தாக்கத்தையும் தொழில்நுட் பத்தையும் நோக்கிக் கடல்துறை செல்வதாக இளையர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள் ளார்கள். சிங்கப்பூர் கடல்துறை, துறை முக ஆணையம் ஏற்பாடு செய்தி ருந்த ‘சிங்கப்பூர் கடல்துறை உரையாடல்’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இவ்வருடாந்தர நிகழ்ச்சியில் இதுவரை கண்டிராத வகையில் மொத்தம் 400 உயர்கல்வி மாணவர்கள் கலந்துகொண்டார்கள். சிங்கப்பூர் கடல்துறை, துறை முக ஆணையம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர் களுடன் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது இதுவே முதல் முறை. ‘வருங்காலத்துக்கு ஏற்ற சிங்கப்பூர் கடல்துறையை உருவாக்கலாம்’ என்பதே இவ் வாண்டுக் கருத்தரங்கின் கருப்பொருள்.

இளையர்கள்: அனைவரையும் உள்ளடக்குவது சவாலானது

தேசிய இளையர் மன்றத்தின் தலைமையில் தொடர்ந்து நடை பெறும் உரையாடல் ஒன்றில் அனைவரையும் உள்ளடக்குவது தான் தாங்கள் முக்கியப் பிரச்சினை எனக் கருதுவதாக சிங்கப்பூர் இளையர்கள் தெரிவித்துள்ளனர். இளையர்களை நாடு தொடர் பான பிரச்சினைகளைப் பற்றி கலந்தாலோசிப்பதில் ஈடுபடுத் தும் முயற்சியில் இவ்வுரையாடல் நிகழ்ந்து வருகிறது. இனம், சமூகப் பிரிவு என ஒருவரை அடையாளம் காண்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பல்வேறு பார்வையில் வாய்ப்பு தரும் சமுதாயத்தை இளையர்கள் விரும்புவதாகவும் அறிக்கை தெரிவித்தது.

மின்னணு சாதனங்களைத் தினமும் 6.5 மணி நேரம் பயன்படுத்தும் 12 வயதினர்

தங்களின் 12 வயது பிள்ளை தினமும் ஆறு மணி நேரம் தொலைக்காட்சி பார்ப்பதை அறிந்து அதனால் அதிருப்தி அடையும் பெற்றோர் ஏராளம். இருப்பினும், மின்னணு சாதனங்களை அதே அளவு நேரத்தை பிள்ளைகள் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர். ‘டிகியூ இன்ஸ்டிடியூட்’ எனும் ஆய்வுக் குழுவும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் வெளிவந்ததைத் தொடர்ந்து இது கவலைக்குரிய ஒன்று என நிபுணர்கள் கூறு கின்றனர்.

Pages