You are here

சிங்க‌ப்பூர்

முதல் ‘லிப்போசக்‌ஷன்’ மரணம்: மருத்துவருக்கு கூடுதல் தண்டனை வழங்க மேல்முறையீடு

‘லிப்போசக்‌ஷன்’ எனப்படும் கொழுப்பை உறிஞ்சி எடுக்கும் அறுவை சிகிச்சையைப் பெற்ற நோயாளி ஒருவர், சிகிச்சையின் போது கொடுக்கப்பட்ட மயக்க மருந்தினால் உயிர் இழந்துள்ளார். அதைத்தொடர்ந்து, சிகிச்சை அளித்த மருத்துவருக்கு அதிக பட்ச தண்டனையாக மூன்றாண்டு தற்காலிகப் பணிநீக்கம் விதிக்கு மாறு சிங்கப்பூர் மருத்துவ மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

தியோங் பாரு வீட்டில் தீ, மருத்துவமனையில் மூவர்

தியோங் பாரு வட்டாரம், இண்டஸ் சாலையிலுள்ள வீவக அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் 15வது மாடி வீட்டில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9.30 மணிக்கு பெருந்தீ மூண்டதில் புகையை உள்ளிழுத்த மூவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வீட்டின் வரவேற்பறை, சமையலறை, ஒரு படுக்கையறை ஆகியவை முற்றாகத் தீக்கு இரையாகிவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. தீச்சம்பவத்தின்போது வீட்டில் எவருமில்லை என்று அறியப்படுகிறது.

வாகன விபத்து: மோட்டார்சைக்கிள் ஓட்டிமீது ஏறிச் சென்ற கார்

ஆயர் ராஜா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரை வுச்சாலையில் நேற்று காலை 9.56 மணிக்கு ஒரு காருக்கும் ஒரு மோட்டார்சைக்கிளுக்கும் இடையே நிகழ்ந்த விபத்து ஒன்றில் காயம் அடைந்த 22 வயது மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் சுயநினை வுடன் டான் டோக் செங் மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லப்பட் டார்.

பொதுச் சேவை வாகனங்களில் புகைபிடிக்கும் போக்கு அதிகரிப்பு

கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து பேருந்துகளிலும் டாக்சி களிலும் புகைபிடித்ததாகக் கூறி கிட்டத்தட்ட 500 பேர் பிடிபட்டனர். புகைபிடித்தல் (தடை விதிக்கப் பட்ட இடங்கள்) சட்டத்தின்கீழ், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் அல்லது வாகனங்களில் புகைபிடித் தால் $1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்து உள்ளது. புகைபிடித்தல் தொடர்பான அனைத்து குற்றங்களுக்கும் கடந்த ஆண்டில் 22,000 அழைப் பாணைகள் விடுக்கப்பட்டன. ஒப்புநோக்க, பொதுச் சேவை வாக னங்களில் புகை பிடித்து சிக்கியோ ரின் எண்ணிக் கை குறைவுதான் என்றாலும் அண்மைய ஆண்டு களாக இந்தப் போக்கு அதிகரித்து வருகிறது.

பொய்ச் செய்தி, இணைய மோசடியை எதிர்கொள்ள மாணவர்களுக்கான பயிலரங்கு

பொய்யான செய்தி, இணைய மோசடி தொடர்பில் மாணவர் களிடையே விழிப்புணர்வை அதி கரிக்க ‘மீடியா லிட்டரசி கவுன்சில்’ நேற்று பயிலரங்கு ஒன்றை ஏற்று நடத்தியது. போன விஸ்தாவில் அமைந்து உள்ள பிக்சல் கட்டடத்தில் ஐந்து உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 13 மாணவர்கள் பங்கேற்ற இந்தப் பயிலரங்கில் பொய்ச் செய்தி களையும் பொதுவான இணைய மோசடிகளையும் அடையாளம் காண்பதுடன் இணையம் வழி கிண்டல் சம்பவங்களைக் கையாள வும் அவர்கள் கற்றுக்கொண்ட னர். இணையத்தில் வலம்வரும் செய்தியின் தலைப்பு மிகைப்படுத் தப் பட்டுள்ளதா, அதே செய்தி பல்வே று நம்பகமான ஊடகங்களில் வெளிவந்துள்ளதா என்பதை சரி பார்க்க மாணவர்கள் ஆலோசனை பெற்றனர்.

ரயில், பேருந்து கட்டணம் 4.3% வரை உயரலாம்

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு பேருந்து, ரயில் கட்டணம் 4.3% வரை அதிகரிக் கக்கூடும். பொதுப் போக்குவரத்துக் கட்டண வழிமுறையை மறுபரிசீலனை செய்வதில் இடம்பெறும் ஒரு புதிய அம்சம் காரணமாக இந்த உயர்வு சாத் தியமாகிறது. பொதுப் போக்குவரத்து மன்றம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 2018 போக்குவரத்துக் கட்டண மறு பரிசீலனையில் பொதுப் போக்குவரத்து கட்டமைப்புக் கொள்ளளவு அம்சமும் கருத்தில் கொள்ளப்படும் என்று மன்றம் தெரிவித்துள்ளது. இந்த மன்றம் தொடங்கியிருக்கும் 2018 கட்டண மறுபரிசீலனை, ஒரு புதிய வழிமுறையின் அடிப்படையில் இடம்பெறுகிறது.

குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் நிகழ்வில் அதிபர் ஹலிமா

சாஃப்ராவின் புரவலரான அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று பொங்கோல் சாப்ராவில் நடைபெற்ற ‘மை ஃபேமிலி ஃபியெஸ்டா’ நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் (வலமிருந்து இரண்டாவது). குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியாக பொங்கோல் சாஃப்ராவுடன் திருமணம், பிள்ளைப்பேற்றை ஊக்குவிக்கும் ‘ஹே பேபி’ சமூக இயக்கமும் இணைந்து 12,000 போர்க்கால படைவீரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

‘கேலோங்’ வீட்டு வடிவமைப்புக்கு விருது

வடிவமைப்பு, கட்டுமானம், பொறியியல் சாதனைகளுக்கு முன்னுதாரணமாய் விளங்கும் 31 கட்டடங்களின் பெயர்கள் நேற்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தால் அறிவிக்கப்பட்டன. அவற்றுள் மாறுபட்ட கட்டடக் கலை அம்சங்கள் கொண்ட பொங்கோல் வாட்டர்வே வியூவில் அமைந்த பிடிஓ வீடுகளுக்குச் சிறந்த வடிவமைப்பு விருது கிடைத்தது. பொங்கோல் வட்டாரம் அதன் தொடக்கக் காலத்தில் ‘கேலோங்’ எனப்படும் மீன்பிடி கிராமமாக இருந்ததை நினைவூட்டும் வகை யில் அங்குக் கட்டப்பட்டிருக்கும் பத்து கட்டடங்களின் நிறம் மரத்தாலானது போன்றும் மரக்கம் பங்களுக்கு ஒத்த தூண்கள் கட்டடங்களின் வெளிப்புறத் தளங் களிலும் அமைந்துள்ளன.

‘உற்பத்தித்திறன் உயர மின்னிலக்கமயம் முக்கியம்’

லிட்டில் இந்தியாவில் செயல்படும் வர்த்தகங்களின் உற்பத்தித் திற னை மேம்படுத்துவதிலும் தொழில் நடத்துவதற்கான செல வினத்தைக் குறைத்து, புதிய வாய்ப்புகளைக் கைப்பற்றுவதிலும் மின்னிலக்கமயமாதல் ஒரு முக் கிய அம்சமாக விளங்குவதாக வர்த்தக, தொழில்; கல்வி மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார். உதாரணத்திற்கு, மின் வணி கம் மூலம் வர்த்தகங்கள் சிங்கப்பூ ரின் பரவலான சந்தையைச் சென்றடைய முடியும் என்றார் அவர். இதற்கு, கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ‘Daily Everything Indian’ (dei.com.sg) எனப்ப டும் இணையத்தளத்தைச் சுட்டி னார் திரு சீ.

Pages