You are here

இந்தியா

மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதை அடுத்து காவிரிக் கரையோர மக்களுக்குத் தொடர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகா, கேரளா ஆகிய இரு மாநிலங்களில் மழை தற் போது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் தமிழகத்திலும் சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை நீடித்து வருகிறது. இதன் எதிரொலியாகத் தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

உதவிக்காக சமூக ஊடகங்களில் கதறும் கேரள மக்கள்

திருவனந்தபுரம்: கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகத் தொடர்ந்து பெய்துவரும் பெருமழையால் வெள் ளத்தால் சூழ்ந்து கேரள மாநிலம் தனித் தீவாக மாறி இருக்கிறது. வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்கள் சமூக ஊடகங்கள் வழி யாக உதவிக்காகக் கூக்குரலிட்டு வருகின்றனர். தங்களின் இருப்பிடத்தைக் குறிப்பிட்டும் தாங்கள் எப்படிப்பட்ட ஆபத்தில் இருக்கிறோம் என்ப தைக் கூறியும் உதவிக்காக கேரள மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். அதேசமயம் அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் மக்கள், தங் கள் உறவினர்களைக் காப்பாற்றக் கூறி, சமூக ஊடகங்களில் கண் ணீர்மல்க கோரிக்கை விடுத்துள் ளனர்.

300 குழந்தைகள் ரூ.45 லட்சம் வீதம் அமெரிக்காவில் விற்பனை

மும்பை: அனைத்துலக அளவில் குழந்தைகளைக் கடத்தி விற் பனை செய்துவந்த குழந்தை கடத்தல் கும்பல் தலைவனை நேற்று போலிசார் கைது செய்த னர். இவன் குறைந்தது இந்தி யாவைச் சேர்ந்த 300 குழந்தை களைக் கடத்தி அமெரிக்க நாட்டில் விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த ராஜூ பாய் காம்லவாலா என்ற ராஜ்பாய், 2007ஆம் ஆண்டில் இந்தக் கடத்தல் வேலையை ஆரம்பித் துள்ளான். அமெரிக்காவைச் சேர்ந்த வாடிக்கையாளர்களிடம் இவன் ஒரு குழந்தைக்கு ரூ.45 லட்சம் வீதம் பெற்று குழந்தையை விற்றுள்ளான். கடத்தப்பட்ட குழந் தைகளின் நிலைமை என்ன என்று இன்னமும் தெரிய வர வில்லை.

பசுமை வழிச் சாலையை எதிர்த்து கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம்

தி.மலை: சென்னை-சேலம் இடையேயான எட்டுத்தட பசுமை வழிச் சாலைக்கு எதிராக கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் உளவுத் துறை பயிற்சி நிலையம் மீது தாக்குதல்

காபூல்: ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள உளவுத் துறை அதிகாரிகளின் பயிற்சி நிலையம் மீது துப்பாக்கிக் காரர்கள் நேற்று தாக்குதல் நடத்தியதாக அதிகாரி ஒருவர் கூறினார். அத்தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தனர் அல்லது காயம் அடைந்தனர் என்பது பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை.

அங்கன்வாடிகளில் ஆங்கில வழிக்கல்வி: அமைச்சர் தகவல்

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக அத்துறை யின் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், அடுத்த கல்வியாண்டு முதல் அங்கன்வாடி களில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்படும் எனக் குறிப்பிட்டார். “தமிழகம் முழுவதும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் இரண்டாயிரம் அங்கன்வாடிகள் செயல்படுகின்றன. அவற்றில் அடுத்த ஆண்டு முதல் மழலையர் வகுப்புகள் மற்றும் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்படும். “பாலர் வகுப்புகளை முடித்த பிறகு அரசுப் பள்ளிகளில் ஆங் கில வழியில் கல்வி பயில இந்தக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள்.

கத்திமுனையில் பெண்களை சீரழித்த வாடகைக் கார் ஓட்டுநர் அதிரடிக் கைது

சென்னை: கத்திமுனையில் பல பெண்களை மிரட்டிப் பாலியல் வன்புணர்வு செய்த வாடகைக் கார் ஓட்டுநரைப் போலிசார் கைது செய்துள்ளனர். சென்னை கிழக்குக் கடற் கரைச்சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களைக் குறி வைத்து அந்த ஓட்டுநர் இவ்வாறு செய்துள்ளார். இப்பகுதியில் ஒரு கும்பல் பெண்களைக் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்வதாக வும், நகைகளைக் கொள்ளையடிப்ப தாகவும் அண்மையில் தகவல் பரவியது. இதுகுறித்துப் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தான் இவ்வாறு பாதிக்கப்பட்டதாகப் புகார் அளித்தார்.

இந்தியாவின் ஆகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

இந்தியாவின் ஆகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத் - தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம்’ அடுத்த மாதம் 25ஆம் தேதி நடப்புக்கு வரவுள்ளது. வசதிகுறைந்த சுமார் 100 மில்லியன் குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையும். என்றும் குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் என்ற விகிதத்தில் காப்புறுதி வழங்கப்படவுள்ளது. இதற்கு இந்தியா சுமார் 120 பில்லியன் ரூபாயை ஆண்டுதோறும் காப்புறு திக் கட்டணங்களாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

காமராஜருக்கு மெரினாவில் நினைவிடம்

சென்னை: மறைந்த முதல்வர் காம ராஜருக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க வேண்டும் என தக்‌ஷிண மாரா நாடார் சங்கம் வலியறுத்தி உள்ளது. இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சென்னை கடற்கரையில் கலங் கரை விளக்கம் அருகே அமைந் துள்ள காமராஜர் சிலைக்கு அடுத்தபடியாக அவரது நினைவி டம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப் பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி அண்மையில் காலமானார்.

தமிழகத்தின் சிறந்த பேரூராட்சியாக ஜலகண்டபுரம் (சேலம்) தேர்வு

சென்னை: தமிழகத்தின் சிறந்த பேரூராட்சியாக ஜலகண்டபுரம் தேர்வுபெற்றுள்ளது. இது சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இதற்குரிய விருதை முதல்வர் பழனிசாமி வழங்கினார். இதற்கிடையே தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டிப்பளையம் பேரூராட்சி, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன.

Pages