இந்தியா

வான்கூவர்: கனடாவின் தெற்கு வான்கூவரில் காரிலிருந்த 24 வயது இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக உள்ளூர்க் காவல்துறை தெரிவித்தது.
சுமோகெடிமா (நாகாலாந்து): நாகாலாந்தின் சுமோகெடிமாவில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் ஜேபி நட்டா உரையாற்றினார்.
பஸ்தார்: சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டம் பஸ்தாரில் சனிக்கிழமை நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது, அதிபர் திரெளபதிமுர்மு பழங்குடியினராக இருப்பதால் அயோத்தி பால ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்கவிடாமல் பாஜகவினர் தடுத்ததாக அவர் கூறினார்.
புதுடெல்லி: பாஜக தனது தேர்தல் அறிக்கையை ‘பிரதமர் மோடியின் உத்திரவாதம் 2024’ என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியிட்டது. அந்த அறிக்கையை காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அஸ்ஸாம்: இந்தியாவில் கடந்த 24 ஆண்டுகளில் 23 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அனைத்துலக வன கண்காணிப்பு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் பிற தரவுகள் மூலம் வனப் பரப்பு குறித்த தகவல்களை ‘அனைத்துலக வன கண்காணிப்பு அறிக்கை’ என்ற தலைப்பில் உலக வளங்கள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

அந்த அறிக்கையில், இந்தியாவில் கடந்த 2002-2023 வரையிலான காலகட்டத்தில் 4.14 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட ஈரக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 24 ஆண்டுகளில் 23 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் இடம்பெயா்வது, இயற்கைச் சீற்றம் உள்ளிட்டவை மர அழிப்புக்கு முக்கிய காரணங்களாக கூறப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவில் 2013-2023 வரை 95% வனங்கள் இயற்கைச் சீற்றங்களின் பாதிப்பால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

உணவு, வேளாண் நிறுவனம் (எஃப்ஏஓ) வெளியிட்ட தரவுகளில், “கடந்த 2015 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் ஆண்டுதோறும் 6.68 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் மர அழிப்பில் உலகளவில் இந்தியா இரண்டாமிடத்தை பிடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.