You are here

இந்தியா

கூட்டணி ஆட்சி கவிழாது என குமாரசாமி நம்பிக்கை

பெங்களூரூ: கர்நாடகத்தில் பாஜக எதிர்பார்ப்பது போல காங்கிரஸ்= மஜத கூட்டணி அரசு கவிழாது என கர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரசைச் சேர்ந்த வருமான சித்தராமையா, நேற்று முன்தினம் தான் மீண்டும் முதல்வர் ஆவேன் என்று கூறியது கர்நாடக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் கூட் டணி ஆட்சியில் பிளவு ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, தான் பேசியது அடுத்த தேர்தல் பற்றித் தான் என்று விளக்கமளித்துள்ளார் சித்தராமையா.

கர்நாடக அமைச்சரிடம் சீறிய நிர்மலா

மடிகேரி: கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட பகுதிகளை மத்திய பாது காப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். அதன் பிறகு முன் னாள் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபோது, கர் நாடக மாநில அமைச்சர் சாரா மகே ‌ஷும் உடன் இருந்தார். அப்போது மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள மாநில அரசு அதிகாரிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தலாமா என்று அவர் கேட்டுள்ளார்.

கேரளாவில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

திருவனந்தபுரம்: கனமழையால் பெருந்துயரை எதிர்கொண்ட கேரள மக்களின் ஓணம் பண் டிகை களையிழந்து காணப்பட்ட நிலையில், அம்மாநிலத்திற்கு மீண் டும் கனமழை எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்தாலும் அதன் சுவடு மாறாத நிலையில் கேரள மக்கள் ஓணம் பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாட முடியவில்லை. வெள்ளப்பாதிப்பால் பல இடங்களில் கோயில்களும் வெள்ள நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் மறுசீர மைப்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

காவிரியில் வெள்ள அபாயம்

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக் கப்பட்டு உள்ளதால் காவிரியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்தததால் கபினி, கிருஷ்ண ராஜசாகர் மற்றும் ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் வேகமாக நிரம்பியது. இதைத்தொடர்ந்து தமிழகத் தின் மேட்டூர் அணையும் நிரம்பி யது. எனவே அணையின் பாது காப்புக் கருதி 25 நாட்களுக்கும் மேலாக அதிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டதால் காவிரி ஆறு வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. கரையோரக் கிராமங்கள் வெள்ளத்தில் மிதந்தன.

எப்போதும் பயத்தில் உள்ளார் ஸ்டாலின்: அமைச்சர் கிண்டல்

தி.மலை: மு.க. அழகிரி புதிய கட்சி ஆரம்பித்தால் போணி யாகாது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணனைக் கண்டாலும் பயம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கண்டாலும் பயம் என்றார். “அழகிரிக்கு திமுகவில் இட மில்லை என்று தம்பி மு.க.ஸ்டாலின் ஒதுக்கி வைத்துவிட்டார். ஸ்டா லின் எப்போதும் பயத்திலேயே உள்ளார். அவருக்கு தெரிந்த ஒரே வார்த்தை முதல்வரை பார்த்து பதவி விலகு என்று சொல்வது தான்,” என்றார் உதயகுமார்.

மாட்டு வண்டியில் ஊர்வலமாகச் சென்ற மணமக்கள்

மதுரை: தமிழர்களின் கலாச் சாரத்தைப் பிரதிபலிக்கும் வகை யில் மதுரையில் நடைபெற்ற திரு மண நிகழ்வு பலரையும் வெகு வாகக் கவர்ந்தது. வில்லாபுரத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான விஜயகுமார், காயத்ரி திருமணம் நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்றது. இதையடுத்து மணமக்கள் திரு மண மண்டபத்துக்குக் கிளம்பி னர். அப்போது இருவரும் காளை களைப் பூட்டிய மாட்டுவண்டியில் ஊர்வலமாக வந்தது அனைவரை யும் கவனிக்க வைத்தது.

மேலும் சில மதகுகள் உடையும் அபாயம்

திருச்சி: திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் மேலும் சில மதகுகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் பார்வை யிட்டார். செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “முதற்கட்ட மாக எட்டு நாட்களும் இரண்டாம் கட்டமாக 12 நாட்களும் தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்ட தால் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வரு கின்றன. ஒன்பது மதகுகள் உடைந்த பகுதிகளில் சீரமைப்புப் பணி 4 நாட்களில் நிறைவடையும்,” என்றார்.

திமுகவில் திருப்பம்; கருணாநிதியின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் அமித் ஷா

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு அவரது மூத்த மகன் மு.க. அழகிரி, சென்னையில் அமைதிப் பேரணியை நடத்தி அதன் மூலம் தனது பலத்தை நிரூபிக்கப் போவதாக சூளுரைத்திருந்தார். இந்த நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான நடவடிக்கையில் அதிரடி வியூகம் வகுக்க முன்னாள் மத்திய அமைச் சருமான அழகிரி நேற்று தனது ஆதரவாளர்களுடன் மதுரையில் ஆலோசனை நடத்தினார். திமுக தலைவர் கருணாநிதி மறைந்த 16வது நாள் நிகழ்ச்சிகள் சென்னையில் கோபாலபுரம் வீட்டில் நடந்தன.

‘ரசாயனம் கலந்த விநாயகர் சிலை செய்தால் நடவடிக்கை’

திருவள்ளூர்: அடுத்த மாதம் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளைச் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியின்போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.

நீர் மேலாண்மையில் அரசு தோல்வி கண்டுள்ளது - முத்தரசன்

தஞ்சை: குடிமராமத்து, தூர் வாறும் பணிகளுக்காக அரசு ஒதுக்கிய பணம் சூறையாடப் பட்டுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். காவிரியின் கடைமடைப் பகுதிகளுக்கும் தண்ணீர் வந்து விட்டது என்று முதல்வரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று பட்டுக் கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

Pages