You are here

இந்தியா

முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் மேலும் சில மதகுகளில் விரிசல்

திருச்சி: முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் மேலும் சில மதகு களில் விரிசல் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மதகுகளைச் சீரமைக்கும் பணியை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ள னர். நேற்று முன்தினம் மேலணை யின் அடித்தளத்தில் நீரில் மூழ்கி ஆய்வு செய்யும் நீச்சல் வீரர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 22ஆம் தேதி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் 9 மதகுகள் உடைந்தன. இதை யடுத்து மதகுகளைச் சீரமைக்க இரண்டரை லட்சம் மணல் நிரம்பிய சாக்கு மூட்டைகள் தயார் செய்யப் பட்டன. அணையின் முதலாவது மதகு முதல் 17ஆவது மதகு வரை சுமார் 220 மீட்டர் தூரத்துக்கு மணல் மூட்டைகளை அடுக்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின்: நெஞ்சு பொறுக்குதில்லையே!

சென்னை: தமிழகத்தின் இன்றைய ஆட்சியாளர்கள் குறித்து நினைக் கும்போது நெஞ்சு பொறுக்குதில் லையே என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டலின் தெரிவித் துள்ளார். நேற்று முன்தினம் அக்கட்சி யின் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் பொதுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், திமுக எனும் 70 ஆண்டு வர லாற்றை நெஞ்சில் சுமந்து கொண்டு, முற்றிலும் புதிய எதிர் காலத்தை நோக்கி கட்சியையும் தமிழினத்தையும் அழைத்துச் செல்ல விரும்புவதாகக் குறிப்பிட் டார்.

சாதி, சமய அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு இடமில்லை: நடிகர் ரஜினிகாந்த்

விரைவில் அரசியலில் களமிறங்க ஆயத்தமாகி வரும் நடிகர் ரஜினி காந்த், சாதி, சமய அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு ‘ரஜினி மக்கள் மன்றத்தில்’ இடமில்லை என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். மக்கள் மன்ற அமைப்பை வலுப் படுத்துவதற்கும் அன்றாடச் செயல் பாடுகளை நெறிப்படுத்துவதற்காக வும் மன்றத்தின் நிர்வாக விதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில விதிமுறை களுக்கு உட்பட்டால் மட்டுமே மன்றத்திலும் மகளிர் அணி, இளையர் அணி, விவசாயிகள் அணி, நெசவாளர்கள் அணி, மீனவர்கள் அணி என அதன் வெவ்வேறு பிரிவுகளிலும் உறுப் பினராகச் சேர முடியும்.

பட்டுத் துணியில் பகவத் கீதை

இந்துக்களின் புனித நூலாகக் கருதப் படும் பகவத் கீதையை முழுவதுமாகப் பட்டுத் துணியில் நெய்து வியப்பை அளித்துள்ளார் இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹேமபிரபா சூத்தியா எனும் 62 வயதுப் பெண்மணி. திப்ருகர் மாவட்டம், மோரன் நகரைச் சேர்ந்த திருவாட்டி ஹேமபிரபா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி இந்த அரிய கலைப்படைப்பை உருவாக் கும் பணியைத் தொடங்கினார். 20 மாத கால கடும் உழைப்பிற்குப் பிறகு கடந்த ஞாயிறன்று அவரது அந்த அரும்பணி நிறைவு பெற்றது.

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வு

திமுகவின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் நேற்று ஒருமன தாகத் தேர்வு செய்யப்பட்டார். ஐம்பது ஆண்டுகாலம் திமுக தலைவராக இருந்த மு.கருணா நிதியின் மறைவையடுத்து புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க திமுக பொதுக்குழு அண்ணா அறிவால யத்தில் நேற்று கூடியது. கூட்டத்திற்குச் செல்லுமுன் கோபாலபுரம் வீட்டிற்குச் சென்று தம் தாயார் தயாளு அம்மாளிடம் ஸ்டாலின் ஆசி பெற்றார். பொதுக்குழு உறுப்பினர்கள் 2,500 பேர், செயற்குழு உறுப்பினர் கள் 700 பேர், சிறப்பு அழைப்பாளர் கள் என கிட்டத்தட்ட 5,000 பேர் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற் றனர்.

ஊழியர்களைத் தாக்கிய இரட்டை சகோதரிகளுக்கு அபராதம்

சீமெய் கிரீன் கண்டோமினிய கட்டடம் ஒன்றின் பணியாளர் களைக் கடந்த 2015ல் தாக்கிய குற்றத்திற்காக இரட்டைச் சகோ தரிகள் இருவருக்கு நேற்று அபராதம் விதிக்கப்பட்டது. சீன நாட்டவர்களான டாங் பெய், டாங் லெய் அப்போது வன்செயலில் ஈடுபட்ட காட்சி காணொளியில் பதிவாகி பின்னர் இணையத்தில் பரவியது. இப் போது அவர்கள் இருவருக்கும் 50 வயதாகிறது. அந்த கண்டோமினிய வளாகத் தைவிட்டு வெளியேறுவதற்காக வெளிவாயிலில் மற்ற குடியிருப் பாளர்களைப் பின்தொடர்ந்ததற் காக டாங் பெய் முன்னதாக பிடி பட்டார். அங்குள்ள கண்டோமினிய வீடு ஒன்றில் அவர் வாடகைதாரராக இருந்த போதிலும் அவரிடம் குடியிருப்பாளர் அனுமதி அட்டை எதுவும் இல்லை.

திருமாவளவன், முதல்வர் பழனிசாமி திடீர் சந்திப்பு

சென்னை: முதல்வர் பழனிசாமியைச் சந்தித்துப் பேசியதற்கு அரசியல் ரீதி யான காரணம் ஏதுமில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சென்னையில் உள்ள முதல்வரின் இல்லத்துக்குத் திடீரென சென்றார் திருமாவளவன். அப்போது 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் கரைகளில் பனை விதைகளை நட வேண்டும் என முதல் வரிடம் கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்தார். “எனது கோரிக்கையைப் பரிசீலிப்பதாக முதல்வர் கூறினார். இந்தச் சந்திப்பு அரசியல் ரீதியானதல்ல,” என்றார் திருமாவளவன்.

காவிரி ஆற்றில் நீடிக்கும் மணல் கொள்ளை

சென்னை: காவிரி ஆற்றில் தற்போது இரவு பகலாக மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள் ளனர். முன்பு இரவு நேரத்தில் மட்டுமே நடந்து வந்த மணல் திருட்டு கடந்த சில தினங்களாக பகல் நேரத்திலும் நடப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் சமூக ஆர்வ லர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குமாரப்பளையம் அருகே காவிரி ஆற்றில் சிலர் தொடர்ந்து மணல் அள்ளி வருகின்றனர். காவிரி வெள்ளத்தில் அடித்து வரப்படும் மணல் கரையோரப் பகுதிகளில் குவிந்துள்ளது.

சென்னை அடையாற்று ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அரசு நோட்டீஸ்

சென்னை: அடையாற்றை ஆக்கிர மித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகளை உடனடியாகக் காலி செய்ய வேண்டும் என அரசு உத்தர விட்டுள்ளது. ஐநூறுக்கும் மேற் பட்ட வீடுகளின் உரிமையாளர்க ளுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளப் பேர ழிவிற்கு அடையாற்றை ஆக்கிர மித்துக் கட்டப்பட்ட கட்டடங்களே காரணம் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்புக் கட்டடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டன. அந்த அடிப்படையில் அடையாற்றில் உள்ள வீடுகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 4 மாடி அரசு கட்டடம் இடிந்தது; 10 பேர் பலி என அச்சம்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் ஞாயிறு பின்னேரத் தில் நான்கு மாடி கட்டடம் ஒன்று இடிந்து விட்டது. குறைந்தபட்சம் 10 பேர் இடிபாடு களில் சிக்கி இருக்கிறார்கள் என்று அஞ்சப்படுகிறது. ஒருவர் மாண்டுவிட்ட தாக அதிகாரிகள் தெரிவித்தனர். இடிந்து விழுந்த கட்டடம் அரசாங் கத்திற்குச் சொந்தமானது. ஆதவ் என்ற பகுதியில் அது இருந்தது. மிகவும் மோச மான நிலையில் இருந்த அந்தக் கட்ட டத்தில் பலர் வசித்துவந்தனர். இடிபாடுகளிலிருந்து நான்கு பேர் காப்பாற்றப்பட்டுவிட்டதாக நேற்று தகவல் கள் தெரிவித்தன. மீட்புப்பணிகளில் ஏராளமான தீயணைப்பாளர்களும் தேசிய பேரிடர் நிவாரணப் பணி வீரர்களும் ஈடு பட்டுள்ளனர்.

Pages