இந்தியா

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஊசி மூலம் இன்சுலின் செலுத்தப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குத் தொடர்பில் முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நீரிழிவு நோயாளியான கெஜ்ரிவால், சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

குறிப்பாக அவருக்கு இன்சுலின் ஊசி, வீட்டில் சமைத்த உணவு போன்றவற்றை வழங்க சிறை நிர்வாகம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கெஜ்ரிவாலை சிறையில் கொலை செய்ய சதி நடப்பதாக ஆம் ஆத்மி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், இதை சிறை நிர்வாகம் மறுத்து உள்ளது.

இதனிடையே, தனது உடல்நிலை தொடர்பாக ஆலோசனை பெற தனது மருத்துவருடன் காணொளி சந்திப்பின்மூலம் பேசுவதற்கு அனுமதி கோரி டெல்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி காவேரி பவேஜா, கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

அதேநேரம் கெஜ்ரிவாலுக்கு ரத்தத்தில் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க இன்சுலின் ஊசி அவசியமா என்பதை ஆய்வு செய்யவும்அவரது பிற உடல்நல பிரச்சினைகளை பரிசோதிக்கவும் மருத்துவக்குழு ஒன்றை அமைக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
லக்னோ: திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற மாநில அமைச்சர் சஞ்சய் நிஷாத் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் கடந்த 19ஆம் தேதி 102 தொகுதிகளில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவின்போது சராசரியாக 66 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகின. 2019 தேர்தலுடன் ஒப்பிடும்போது இது சற்று குறைந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளில் மேற்கல்வியைத் தொடர விரும்பும் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் அதை மேற்கொள்ள விருப்பம் கொண்டுள்ளனர். குறிப்பிடும்படியாக, மாணவர்களில் 69 விழுக்காட்டினர் அமெரிக்காவில் படிக்க ஆர்வம் கொண்டுள்ளனர்.
புதுடெல்லி: பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) முஸ்லிம்களுக்கு எதிராக ஊடுருவியவர்கள் என்ற கருத்தை முன்வைத்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.