You are here

இந்தியா

தொடர் மழையால் தத்தளிக்கும் மும்பை மக்கள்

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடர் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தொடங்கிய காலத்தில் இருந்து 1,362.8 மி.மீ மழை பதிவாகி உள்ளது. தென்மேற்குப் பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய மழையில் 54 விழுக்காடு தற்போது பெய்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. மும்பைக்குக் குடிநீர் விநி யோகம் செய்யும் துல்சி ஏரி நேற்று காலை முழு கொள்ளளவை எட்டி யது. இதையடுத்து அந்த ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப் படுகிறது.

தொப்பையைக் குறைத்தால் வேலையில் நீடிக்க முடியும்: கர்நாடகா

பெங்களூரூ: தொப்பை போலிஸ் காரர்களுக்கு உடற்தகுதி குறித்த புதுக் கட்டுப்பாட்டை விதித்து உள்ளது கர்நாடக ரிசர்வ் போலிஸ் படை. இதன் கூடுதல் இயக்குநர் பாஸ்கர் ராவ் கடந்த மூன்றாம் தேதி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றில் இந்தக் கட்டுப்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக 12 தொப்பையற்ற காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தொப்பை காவலர் களை சிறந்த உடற்தகுதியுடைய வர்களாக மாற்றும் பணி ஒதுக்கப் பட்டுள்ளது.

தமிழில் ‘நீட்’ எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் மருத்துவக் கல்வி பயிலத் தகுதி பெறுவதற்கான ‘நீட்’ தேர்வில் இவ்வாண்டு தமிழில் கேட்கப்பட்ட 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க் கப்பட்டிருந்ததால் தமிழில் தேர்வு எழுதிய அனைவருக்கும் 196 மதிப்பெண்கள் வழங்குமாறு சிபிஎஸ்இக்கு உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. நீட் தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ புதிய தரவரிசைப்ப பட்டியலை 2 வாரங்களுக்குள் வெளியிட வேண் டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய தரவரிசையின் அடிப் படையில் மருத்துவ மாணவர்க ளின் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும் அதில் குறிப் பிடப்பட்டுள்ளது.

ஒடிசாவில் பிளாஸ்டிக்கிற்குத் தடை

புவனேஸ்வர்: ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்னாயக் அடுத்த 2 ஆண்டுகளில் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக ஒடிசாவை உருவாக்குவதற்காக ஒடிசாவின் பல பகுதிகளில் பிளாஸ்டிக்கை தடை செய்வதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வரும் அக்டோபர் 2 முதல் நடை முறைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், புவனேஸ்வர், கட்டாக், பெர்காம்பூர், சாமல்பூர், ரோர்கெலா, பூரி நகர், மற்றும் நகராட்சிப் பகுதிகளிலும் இந்த உத்தரவு பின்பற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

பேரவை தலைவருக்கு எதிரான வழக்கு; பாஜக பிரமுகருக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: குஜராத் மேலவை உறுப்பினராக தான் தேர்ந் தெடுக்கப்பட்டதை எதிர்த்-துத் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை நேற்று பரிசீலித்த உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டு வழக்கு தொடுத்த பாஜக பிரமுகர் பல்வந்த்சிங் ராஜ்புத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கடந்தாண்டு குஜராத்தில் மேலவை உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் வெற்றி பெற்றார். காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததை அடுத்து இந்த வெற்றி சாத்தியமானது.

முட்டை வடிவில் வெடிகுண்டு என தினகரன் எச்சரிக்கை

தினகரன்

கோவை: தமிழகத்தில் மிக விரைவில் ‘முட்டை’ வடிவில் ஓர் அணுகுண்டு வெடிக்கும் என்றும், அப்போது அதிகாரத்தில் உள்ள வர்கள் சிறைக்குச் செல்வார்கள் என்றும் அமமுக துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் கோவையில் அக்கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய அவர், ஜெயலலிதா வால் கட்டிக் காத்து வளர்க்கப்பட்ட அதிமுகவையும் இரட்டை இலை யையும் மீட்கவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கப் பட்டதாகக் குறிப்பிட்டார். “அதிமுகவின் கோட்டையாக கொங்கு மண்டலம் விளங்குகிறது.

வாசன்: கனிம வளங்கள் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக மக்கள் அச்சம்

சேலம்: விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும்போது அவர்களை அழிக்கும் திட்டம் தேவையா என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பி உள்ளார். பசுமை வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்பதாகத் தமிழக அரசு நாடக மாடி வருகிறது என்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குற்றம் சாட்டினார். “சேது சமுத்திரத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் முடங்கிக் கிடக்கும்போது பசுமை வழிச்சாலைத் திட்டத்தை அவசர அவசரமாகச் செயல்படுத்த நினைப்பது சந்தேகத்தை ஏற்ப டுத்தி உள்ளது.

காவல்துறையின் விழிப்புணர்வுப் பிரசாரம்

படம்: தமிழக ஊடகம்

சென்னையில் உள்ள வீடு, அலுவலகங்களில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்த வலியுறுத்தி காவல்துறை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளது. சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இதில் பங்கேற்று பொதுமக்களிடம் நேற்று முன்தினம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தார். இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களும் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். படம்: தமிழக ஊடகம்

மலேசிய மணல் இறக்குமதி: தமிழக அரசு அனுமதி

சென்னை: மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்ய தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஆறுக ளில் இருந்து முறைகேடாக மணல் அள்ளப்படுவதாக புகார் கள் எழுந்ததை அடுத்து, ஆறு களில் மணல் அள்ள உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், தனியார் நிறு வனம் ஒன்று மலேசியாவிலிருந்து 54 ஆயிரம் டன் மணலை இறக் குமதி செய்தது. இந்த மணல் தற்போது தூத்துக்குடி துறை முகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இறக்குமதி செய்யப்பட்ட மலேசிய மணலைப் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தது. இதனால் அத்தனி யார் நிறுவனம் உச்ச நீதிமன் றத்தை அணுகியது.

சிங்கப்பூரில் தொடங்கிய உலக நகரங்கள் உச்சநிலை மாநாடு

உலக நகரங்கள் உச்சநிலை மாநாடு நேற்று தொடங்கியதில் புத்தாக்கமும் நகர்ப்புற வாழ்க்கைத் திட்டமிடுதலில் ஏற்படும் தடை களும் முக்கிய விவகாரங்களாகப் பேசப்பட்டன. மரினா பே சேண்ட்ஸில் நிகழும் இந்த உலக நகரங்கள் உச்சநிலை மாநாட்டுடன் சிங்கப்பூர் அனைத் துலகத் தண்ணீர் வாரமும் ‘கிளீன்என்வைரோ’ உச்சநிலை மாநாடும் நடைபெறுகின்றன. நிகழ் வுகளில் நூறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 20,000 பேர் கலந்து கொள்வதாக எதிர்பார்க்கப்படு கிறது.

Pages