You are here

இந்தியா

பாலியல் தொழில்: கைதான அமைச்சரின் உதவியாளர்

பெங்களூரு: பாலியல் தொழில் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் தமிழக கால்நடைத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி யின் உதவியாளர் சத்யா என்ப வரைப் பெங்களூரு போலிசார் கைது செய்துள்ளனர். அவருடன் மேலும் பத்துப் பேர் கைதாகியுள்ளனர் என்றும் அழகு நிலையம் என்ற பெயரில் இவர்கள் பல பெண்களைப் பாலி யல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபட வைத்துள்ளனர் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.

லாரி-வேன் மோதலில் நால்வர் பலி

வேலூர்: லாரி மீது வேன் மோதிய கோர விபத்தில் நான்கு பேர் பரிதாபமாகப் பலியாகினர். இச்சம்பவம் அருப்புக்கோட்டை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த 58 வயதான செல்வம், தனது உறவினர்களுடன் குலசேகரபட்டினத்தில் நடைபெறும் தசரா விழாவில் பங்கேற்க வேனில் சென்றார்.

வெள்ளிக்கிழமை காலை அருப்புக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக முன்னே சென்ற லாரி மீது வேன் மோதி கவிழ்ந்தது. இதில் அவரது உறவினர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விஷம் கலந்த மது: ஓசியில் வாங்கி குடித்த இருவர் உயிர் ஊசலாட்டம்

வேலூர்: மதுவில் விஷம் கலந்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றவரிடம் ஓசியில் மது வாங்கிக் குடித்தவர்களின் உயிர் ஊசலாடுகிறது. வேலூரைச் சேர்ந்த 23 வயதான சரத்குமார் குடும்பப் பிரச்சினை காரணமாக உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்தார். இதற்காக வெள்ளிக்கிழமை மதுபான மையம் சென்ற அவர், அங்கு வாங்கிய மதுவில் விஷம் கலந்து குடித்தார். அப்போது அங்கு வந்த அவரது நண்பர்கள் தங்களுக்கும் மது வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.

ஆசிரியரால் மாணவன் கண் பாதிப்பு

நெல்லை: ஆசிரியர் தூக்கி வீசிய புத்தகம் தாக்கியதில் மாணவ னின் கண்ணில் காயம் ஏற்பட்டது. கடையம் பகுதியைச் சேர்ந்த முகம்மது (14 வயது) உள்ளூர் தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கிறான். நேற்று முன்தினம் வீட்டுப் பாடம் செய்யா ததால் பள்ளியில் கணித ஆசிரியர் கண்டித்துள்ளார். மேலும் முகம்மதை அடித்த அவர், கோபத்தில் அவனது கணக்குப் புத்தகத்தையும் தூக்கி வீசியதாகத் தெரிகிறது. அப்போது அந்தப் புத்தகம் முகம்மதுவின் கண்ணைப் பதம் பார்த்தது. கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதா என்பது ஒரு வாரத்துக்குப் பிறகே தெரியவரும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இடைத்தேர்தலில் சசிகலா உறவினர்கள்

சென்னை: சட்டப்பேரவை இடைத் தேர்தலில் சசிகலா வின் உறவினர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் அரவக் குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றுக்கு நவம்பர் மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் கள்தான் மீண்டும் களமிறக் கப்படுவர் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், எந்தத் தொகுதியில் வேண்டு மானாலும் சசிகலாவின் உறவினர்கள் களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நெரிசலில் சிக்கி பக்தர்கள் மயக்கம்

நெரிசலில் சிக்கி பக்தர்கள் மயக்கம்

திருமலை: திருப்பதி கோயில் பிரம்மோற்சவத்தின் முக்கிய அங்கமான கருட சேவை நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால் நெரி சலில் சிக்கி பலருக்கு மயக்கம் ஏற்பட்டது. வெள்ளிக் கிழமை காலையில் இருந்தே பக்தர்கள் வருகை அதிகரித்தது. இதனால் கோயில் பகுதிக்குச் செல்லும் முக்கிய பாதைகளில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்துக் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர். அன்று மாலையே ராம்பகிஜா விடுதி, வராகசாமி விடுதி, அன்னதானக் கூடம் ஆகியவை அடுத்துள்ள வழிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சசிகலா புஷ்பாவிடம் மதுரை காவல்துறை கிடுக்கிப்பிடி விசாரணை

மதுரை காவல்துறையின் விசாரணைக்காக கோ.புதூர் காவல் நிலையத்தில் நேரில் முன்னிலையான சசிகலா புஷ்பாவிடம் 150 கேள்விகள் கேட்கப்பட்டன. படம்: தகவல் ஊடகம்

மதுரை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவிடம் மதுரை காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி உள்ளனர். சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற விசாரணையின்போது அவரிடம் 150 கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை உயர் நீதிமன்ற கிளையில் போலி வக்காலத்துத் தாக்கல் செய்த வழக்கு தொடர் பாகவே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சசிகலா புஷ்பா வீட்டில் பணிப்பெண்களாகப் பணியாற்றிய 2 இளம்பெண்கள் அவர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளனர்.

மீனவர்கள் பிரச்சினை: தீர்வுகாண தமிழக காங்கிரஸ் வலியுறுத்து

சென்னை: தமிழக மீனவர்கள் பிரச்சினை என்பது நீண்டகாலமாக நீடித்து வருவதாகவும் அதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலை வர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்கு தலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்தியில் கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், தமிழக மீனவர்களை விடுதலை செய்தபோது அவர்களின் படகு களையும் சேர்த்து இலங்கை அரசு விடுவிப்பது வழக்கமாக இருந்த தாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

காவல்துறை வெளியிட்ட புகைப்படத்தால் குழப்பம்: போலிசிடம் கதறிய இருவர்

கோவை: கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளை அடையாளம் காணும் பொருட்டு போலிசார் வெளியிட்ட புகைப்படங் களில் தங்களது படமும் தவறாக இடம்பெற்று இருப்பதாக காவல் துறையில் இருவர் முறை யிட்டுள்ளனர். அண்மையில் கோவையைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மர்ம நபர்களால் படு கொலை செய்யப்பட்டார். இதைய டுத்து கோவையில் கலவரம் வெடித்தது. அதன் தொடர்ச்சியாக ஏறத்தாழ 500 பேர் கைதாகினர். சசிகுமார் கொலை செய்யப்பட்ட அன்றே அவர் சென்று வந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலிசார் தீவிரமாக ஆராய்ந்தனர். இதன் மூலம் 4 பேர் சந்தேக வளை யத்துக்குள் கொண்டு வரப்பட்ட னர்.

ஐஎஸ் பயங்கரவாதிகள் நடமாட்டம்: புகார் எழுப்பும் தமிழிசை

விருத்தாச்சலம்: தென் மாவட்டங் களில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் நடமாட்டம் காணப்படுவதாக தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித் துள்ளார். மதுரையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழகத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை முடிவுக்கு கொண்டு வர காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தி னார். “டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கச் சென்ற அதிமுக நாடா ளுமன்ற உறுப்பினர்களை அவர் புறக்கணித்ததாகக் கூறப்படுவது சரியல்ல. பிரதமரைச் சந்திக்க அதிமுகவினர் முன்கூட்டியே அனுமதி பெறவில்லை.

Pages