You are here

இந்தியா

‘சோ’ காலமானார்

தமிழகத்தின் மூத்த பத்திரிகை யாளரும் ‘துக்ளக்’ சஞ்சிகையின் ஆசிரியருமான ‘சோ’ ராமசாமி (படம்) காலமானார். அவருக்கு வயது 82. கடந்த திங்கட்கிழமை உயிரி ழந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பராகவும் அரசியல் ஆலோசகரா கவும் திகழ்ந்தார் திரு சோ. உடல்நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அதே அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்ட தாகவும் அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணியளவில் இவரது உயிர் பிரிந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் அஞ்சலி

புதுடெல்லி: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் நேற்று மௌன அஞ்சலி செலுத்தினர். அத்துடன், அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மேலவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா 1984 - 89ல் மேலவை உறுப்பினராக இருந்துள்ளார். மேலவையில் பேசிய தலைவர் ஹமீது அன்சாரி: “ஜெயலலிதாவின் மறைவால் நாடு மிகவும் முக்கியமான தலை வரை, மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரை, தேர்ந்த நிர்வாகியை இழந்துள்ளது.

கேரளாவில் அரசு விடுமுறை: 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

திருவனந்தபுரம்: முதல்வர் ஜெய லலிதா மறைவை ஒட்டி கேரளாவில் ஒருநாள் அரசு விடுமுறை அறிவிக் கப்பட்டது. நேற்று முன்தினம் அந்த மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி கள், நீதிமன்றங்கள் செயல்பட வில்லை. பள்ளி, கல்லூரிகளின் தேர்வுகளும் தள்ளி வைக்கப் பட்டன. முதல்வர் ஜெயலலிதா வுக்காக கேரள அரசு சார்பில் 3 நாட்கள் துக்கமும் அனுசரிக்கப் படுகிறது. கேரள அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றபோது முதல்வர் ஜெய லலிதாவுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் நேற்று கண்ணீர் அஞ்சலி செலுத் தினர். அவரது முகத்தை ஒரு முறையேனும் காண வேண்டும் என்பதற்காக பல்வேறு மாவட்டங் களில் இருந்தும் ஆயிரக்கணக் கானோர் சென்னைக்குத் திரண்டு வந்தனர். சென்னை நோக்கி நூற்றுக் கணக்கான வாகனங்கள் வந்த தால் ஆங்காங்கே போக்குவரத்து நிலை குத்தியது. ஜெயலலிதாவின் மறைவையொட்டி தமிழகம் முழுவ தும் சிறு கடைகள், வணிக வளா கங்கள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன.

ஆவேசமடைந்த தொண்டர்கள், பொதுமக்களால் பரபரப்பு

ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டு இருந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த தொண்டர்களை அனுமதிக்காததால் அங்கிருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு நூற்றுக்கணக்கானோர் அதற்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த போது ஆயிரக்கணக் கான தொண்டர்கள் அவரைப் பார்க்க அப்போலோ வாசலில் கால் கடுக்க நின்றனர். ஆனால் பெரிய தலைவர்களாலேயே ஜெயலலிதாவை நேரில் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது.

கதறி அழுதபடி அஞ்சலி செலுத்திய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: நேற்று முன்தினம் காலமான அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத் தியபோது தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கதறி அழுதார். அதைக் கண்டு அதிமுக நிர்வாகிகளும் கண்ணீர் விட்டனர். நேற்று காலை ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் பன்னீர்செல்வம். அப்போது உணர்ச்சி மிகுதியால், துக்கம் தாளாமல் அவர் கதறி அழுதார். அவரைத் தொடர்ந்து, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.

50 விமானங்களில் விருந்தினர்கள் வருகை; தடபுடல் திருமண சர்ச்சைக்கு கட்காரி மறுப்பு

நாக்பூர்: கர்நாடகாவின் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி மக ளின் ரூ.650 கோடி செலவிலான ஆடம்பரத் திருமணத்தைப் போல் இப்போது மற்றொரு திருமணமும் நடந்துள்ளது.

இந்தத் திருமணத் திற்கு 50 தனி விமானங்களில் மிகமிக முக்கிய நபர்கள் அழைத்து வரப்பட்டதாக வெளியான தகவல் சில்லறைப் பணத் தட்டுப்பாட்டால் அவதிப்படும் மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.13,000 கோடி வருமானம் காட்டியவர் விடுவிப்பு

அகமதாபாத்: அகமதாபாத்தில் ரூ.13,000 கோடி வருமானம் காட் டியவர் விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநில சொத்துச் சந்தை அதிபரான மகேஷ் ஷா, 67, தனக்கு ரூ.13,860 கோடி வருமானம் இருப்பதாக வருமான வரி அலுவலகத்தில் கணக்குத் தாக்கல் செய்தார்.

அகமதாபாத்தை சேர்ந்த மகேஷ் ஷா, முதல் தவணையாக ரூ.1,560 கோடி வரி கட்ட வேண்டும் என கூறப்பட தலைமறைவானார்.

3 கிலோவுக்கு மேல் மாடுகள் சாணம் போடக்கூடாது என்ற உத்தரவு ரத்து

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு நகராட்சி நிர்வாகம் பசு, எருமை போன்ற கால்நடைகள் சாணம் போடும் இடத்தையும் அளவையும் குறிப்பிட்டு உத்தர விட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், அம்ரேலி நகராட்சி நிர்வாகம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் கீழ் செயல்பட்டு வருகிறது.

பிச்சைக்காரர்களும் ஸ்வைப் இயந்திரமும்: பிரதமர் மோடியின் நகைச்சுவை பேச்சு

மொரதாபாத்: நாட்டு மக்கள் அனைவரும் ரொக்கப் பணமில்லா கொடுக்கல், வாங்கல் முறைக்கு மாற வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், மொர தாபாத்தில் நடந்த பாஜக கூட்டத் தில் பங்கேற்றுப் பேசிய அவர், ‘வாட்ஸ் ஆப்’பில் பிச்சைக்காரர்களே ‘ஸ்வைப் இயந்திரம்’ வைத்துக் கொள்கிற நிலை உருவாகி இருப்ப தாக நகைச்சுவையுடன் குறிப்பிட் டார். வாட்ஸ் ஆப்பில் பிச்சைக்காரர்கள் ஸ்வைப் இயந்திரங்கள் பயன்படுத்து வதைப் போல் சித்திரிக்கும் காணொளி ஒன்று பரவி வருகிறது. இதைக் குறிப்பிட்டே மோடி மேற்கண்டவாறு கூறினார். “இது எந்தளவு உண்மை என்று எனக்குத் தெரியவில்லை.

Pages