You are here

இந்தியா

100 டாலருக்கு ஐஎஸ்சில் போர் புரிந்த தமிழக இளையர்

ஐஎஸ் அமைப்­பு­டன் தொடர்புடைய வர் என்ற சந்­தே­கத்­தின் அடிப்­படை­யில் கடை­ய­நல்­லூ­ரில் கைது செய்­யப்­பட்ட சுபுஹானி காஜா முகைதீன் ஈராக்­கில் ஐஎஸ் இயக்­கத்­து­டன் இணைந்து போர் புரிந்த­தாக வாக்­கு­மூ­லம் அளித்­துள்ளார். கேரள மாநி­லத்­தில் கடந்த 2ஆம் தேதி ஐஎஸ் பயங்க­ர­வாத அமைப்­பு­டன் தொடர்­புடை­ய­வர்­கள் என நம்பப்­படும் அறுவர் கைது செய்­யப்­பட்டு விசா­ரணை செய்யப்பட்டு வரு­கின்ற­னர்.

ஜெயலலிதாவைப் பார்க்க முடியவில்லை - சொந்த அண்ணன் ஜெயகுமாரின் மகள் கண்ணீர்

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் தீபா

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க முடியவில்லை என்று அவரது சொந்த அண் ணனின் மகள் கண்ணீருடன் கூறியிருக்கிறார். அப்போலோ மருத்துவ மனைக்குச் சென்ற ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் தீபாவுக்கு ஜெயலலிதாவைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட வில்லை. இதனால் அவர் ஏமாற்றத்துடன் திரும்பினார். கடந்த 22ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக அப் போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த இரண்டு வார காலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

‘ஜெயலலிதாவைச் சந்திப்பேன்’

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா குணமடைந்ததும் நேரில் சந்திக்கப்போவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி யாளர்களிடம் பேசிய அவர், “முதல்வர் ஜெயலலிதா விரை வில் குணமடைந்து வழக்க மான பணிகளை மேற் கொள்ள வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக் கிறேன்,” என்றார். “முதல்வரிடம் உடல்நலம் குறித்து விசாரிக்க அப்போலோ மருத்துவ மனைக்குச் சென்றவர்கள் யாரும் அவரை நேரில் பார்த்ததாகவோ நேரில் நலம் விசாரித்ததாகவோ சொல்ல வில்லை. இந்நிலையில் நானும் மருத்துவமனைக்குச் சென்று அவருக்குத் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை.

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை நீடிக்கும்

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தல் தடை செய்யப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்றுத் தெரிவித்தது. தமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதி பதிகள், உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்குத் தடை விதிக்க முடியாது என்று கூறினர். முன்னதாக உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறையாகப் பின் பற்றப்படவில்லை என்று கூறி திமுக தொடர்ந்த வழக்கில் உள் ளாட்சித் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

7 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது; நால்வர் பலி

பெங்களூரு: பெங்களூருவில் 7 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. பெங்களூரு, பெல்லந்தூர் கேட் பகுதியில் புதிதாக அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடம் கட்டப்பட்டு வரு கிறது. வினய்குமார் என்பவருக்குச் சொந்தமான இந்தக் கட்டடத்தில் கட்டுமானப் பணியில் 10க்கும் அதிகமானோர் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் பிற்பகல் 1.45 மணியளவில் குடியிருப்புக் கட்டடம் சரிந்து விழுந்ததில் அங்கு பணி புரிந்துகொண்டிருந்த தொழி லாளர்கள் இடிபாடுகளுக் கிடையே சிக்கிக்கொண்டனர். தீயணைப்புப் படையினர், பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

உச்ச நீதிமன்றம்: நோய்கள் பரவ அரசின் அலட்சியமே காரணம்

புதுடெல்லி: சிக்குன்குனியா, டெங் கிக் காய்ச்சல் போன்ற நோய்களால் டெல்லி மக்கள் பாதிக்கப்படு வதற்கு அரசு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரி வால் ஆட்சி புரிந்து வரும் டெல்லி யில் சிக்குன்குனியா, டெங்கிக் காய்ச்சலால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த வழக்கு டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

‘ஜிசாட்- 18’ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

புதுடெல்லி: இந்தியாவின் ‘ஜிசாட்- 18’ துணைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து “இது நமது விண் வெளித் திட்டத்தில் மேலும் ஒரு மைல்கல். இதற்காக விஞ்ஞானி களைப் பாராட்டுகிறேன்” என்று பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தகவல் தொடர்புச் சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்திய விஞ்ஞானிகள் அதிநவீன ‘ஜிசாட்-18’ எனும் துணைக்கோளை ரூ.1,000 கோடி செலவில் தயாரித் துள்ளனர். நேற்று வியாழன் அதி காலை 2 மணி அளவில் இந்தத் துணைக்கோள் பிரெஞ்சு கயானா தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இது இந்தியாவின் 20-வது துணைக்கோள்.

மருத்துவ மாணவியின் கோரிக்கை

ஈரோடு: மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் படிக்க முடியாமல் ஏழை மாணவி ஒருவர் திண்டாடுகிறார். கல்லூரியில் சேர்ந்து படிக்க கல்லூரி கட்டணம், இதர கட்டணம் என ஆறு லட்ச ரூபாய் அவருக்குத் தேவைப்படுவதால் உதவி செய்யும்படி அந்த மாணவி மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈரோடு அருகே உள்ள வெள்ளோட்டை அடுத்த மைலாடி ஊரைச் சேர்ந்த சின்னசாமி என்ற விவசாய கூலி தொழிலாளியின் மகள் பிரித்தி, 18, கோபியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து +2வில் 1088 மதிப்பெண்கள் பெற்றார். இந்த நிலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ ஆராய்ச்சிக் கல்லூரியில் அவருக்கு எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தது.

ராணுவ உடையில் வந்த மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

வடக்கு காஷ்மீரில் அமைந்துள்ள லங்கட்டே ராணுவ முகாம் மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மூவர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல் லப்பட்டனர். எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி யையொட்டி பயங்கரவாதிகளின் மூன்று ஊடுருவல் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. அதிகாலை 5 மணியளவில் ராணுவ முகாமை நோக்கி பயங்கர வாதிகள் சுட்டதாகவும் அதை அடுத்து உடனடியாக இந்திய ராணுவப் படையினர் பதில் தாக்கு தலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக் கப்பட்டது. இந்தத் தாக்குதலின்போது இந்திய ராணுவ வீரர்கள் இருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. வேறு பயங்கரவாதிகள் யாரும் பதுங்கியுள்ளனரா எனத் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

கள்ளப் பணமாகக் கொட்டிய ஏடிஎம்... எல்லாமே 500 ரூபாய் நோட்டுகள்

பேங்க் ஆஃப் பரோடா ஏடிஎம் கூடம். படம்: தமிழக ஊடகம்

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பேங்க் ஆஃப் பரோடா ஏடிஎம் எந்திரத்தில் கள்ள நோட்டுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டைச் சேர்ந்தவர் தமிழரசு. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கூட்டுறவு பண்டக சாலையில் ஊழியராகப் பணி யாற்றி வரும் அவர் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து வீட்டுக்குப் புறப்பட்டார். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க சென்ட்ரல் ரயில் நிலைய வாசலில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கி யின் ஏடிஎம்மில் தனது அட்டையைப் பயன்படுத்தி 14,000 ரூபாய் ரொக்கம் எடுத்துள்ளார்.

Pages