You are here

இந்தியா

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு பெண்கள் வழிபாடு

மும்பை நகரில் பிரசித்தி பெற்ற ஹாஜி அலி தர்காவுக்குள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பெண் கள் நுழைந்துள்ளனர். பல்வேறு போராட்டங்கள், நீதிமன்ற வழக்கு கள் ஆகியவற்றுக்குப் பிறகு நேற்று முன்தினம் பிற்பகலில் இந்த தர் காவுக்குள் பெண்கள் நுழைந் தனர். மும்பைக்குத் தெற்கே வோர்லி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தர்காவுக்குள் இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்த கிட்டத்தட்ட 80 பெண் கள் ஆர்வத்துடன் சென்றனர். 2012 ஜூன் மாதம் பெண்கள் இங்கு செல்லத் தடை விதிக்கப் பட்டது. அந்தத் தடையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் பெண்கள் வழக்குத் தொடுத்தனர்.

செல்லாத நோட்டுகள்; டிசம்பர் 30க்கு மேல் அவகாசம் நீட்டிப்பு இல்லை

புதுடெல்லி: வங்கிகளிலும், ரிசர்வ் வங்கி கிளைகளிலும் செல்லாத ரூபாய் நோட்டுகளை தங்களுடைய வங்கிக் கணக்கில் போடுவதற் கான அவகாசம் டிசம்பர் 30ஆம் தேதிக்குப் பின் நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது. இது தொடர்பாக மேலவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால் எழுத்து மூலமாக விளக்கம் அளித்தார். “வங்கிகள், ரிசர்வ் வங்கியிடம் போதிய ரூபாய் நோட்டுகள் இருப்பு உள்ளன,” என்று அவர் தெரிவித்தார். “நூறு ரூபாய் நோட்டுகளை விநியோகிக்கும் பணிகள் ஏற் கெனவே துவங்கிவிட்டன.

விஷால் தரப்பு மீது சரத்குமார் புகார்

பிளவை உண்டாக்கி நடிகர் சங்க ஒற்றுமையைச் சீர்குலைத்துவிட்டதாக விஷால் தரப்பினர் மீது நடிகர் சரத்குமார் குற்றம்சாட்டி உள்ளார். நடிகர் சங்கம் நன்றாகச் செயல்பட வேண்டும் என்றும் நடிகர் நடிகைகளுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றும் தாம் விரும்புவதாக அவர் கூறியுள்ளார். “சங்கத்தின் பொதுக்குழுவில் கலந்து கொள்வதில் எனக்கு அதிக ஆர்வம் இல்லை.

புதையல் வெள்ளிக் காசுகளை பதுக்கிய எழுவர் மீது வழக்கு

நெமிலி: காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பாலாற் றில் மணல் அள்ளியபோது கிடைத்த புதையல் வெள்ளிக் காசுகளைப் பதுக்கிய எழுவர் மீதும் காவல்துறையினர் வழக் குப் பதிவு செய்தனர். இந்த ஏழு பேரிடமும் மொத்தமாக இருந்த 206 வெள்ளிக் காசு களையும் (படம்) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த வெள்ளிக் காசுகளைத் தாசில்தார் இளஞ் செழியன் வேலூர் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைத்தார். அந்தக் காசுகள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆற்காடு நவாப்புகள் காலத் தைச் சேர்ந்தவை எனத் தெரிய வருகிறது. வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த பூண்டியில் அரசு மணல் குவாரி உள்ளது.

ரூ.10 நாணயம் செல்லாது என வதந்தி

சங்கரன்கோயில்: ரூ.500, 1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வந்தாலும் வந்தது. இப்பொழுது அதைத் தொடர்ந்து நாளும் ஒரு தலைவலி தொடர்வதாக மக்கள் பலரும் புலம்பி வருகின்றனர். நெல்லை மாவட்டம், சங்கரன்கோயிலில் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என வதந்தி பரவியதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்தத் தகவல் காட்டுத் தீ போல் பரவியதால் சிறு, குறு வணிகர்கள், பெட்டிக் கடை உரிமையாளர்கள் என யாருமே பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பேருந்துகளில் அந்த நாணயத்தை வாங்க நடத்துநர்கள் மறுப்பதாகவும் மக்கள் கூறினர்.

மதுரையில் கைதான நால்வரும் இன்று பெங்களூருவில் முன்னிலை

மதுரை: மதுரையில் கைதான நான்கு பயங்கரவாதிகளையும் மேல் விசாரணைக்காக இன்று டிசம்பர் ஒன்றாம் தேதியன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி அனுமதி வழங்கினார். மதுரையில் அப்பாஸ் அலி, சம்சும் கரீம் ராஜா, முகம்மது அயூப் அலி, சம்சுதீன் என்ற கரு வாயன் ஆகிய நான்கு பயங் கரவாதிகளும் தேசியப் புலனாய்வு அமைப்பினரால் ஞாயிறன்று கைது செய்யப்பட்டனர்.

நாடா புயல் எதிரொலி: 5 மாவட்ட பள்ளிகளுக்கு இருநாள் விடுமுறை

சென்னை: நாடா புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளிப்பதாகப் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. சென்னை அருகே மையம் கொண்டுள்ள நாடா புயல் நாளை கரையைக் கடக்கிறது. இந்தப் புயல் காரணமாக சென்னை, தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை அதிகாலை முதல் மழை பெய்யத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடா புயல் உருவாகியுள்ளதால் நாகை, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மீண்டும் பெண் பிள்ளை பெற்றவரை மொட்டையடித்து சித்திரவதை

இரண்டாவது பெண் குழந்தையை ஈன்றெடுத்த பெண்ணை அவரது கணவரே மொட்டையடித்து துன் புறுத்திய சம்பவம் உத்தரப் பிரதேசத் தில் நிகழ்ந்துள்ளது. ஆக்ரா அருகே மால்புரா என்னும் கிராமத்தைச் சேர்ந்த நன்னு என்னும் பெயர் கொண்ட அப்பெண்ணுக்கும் ர‌ஷித் என்பவருக்கும் மணமாகி ஏழாண்டு கள் ஆகின்றன. ஏற்கெனவே நான்கு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் இரு வாரங்களுக்கு முன்பு அந்தப் பெண் பிரசவித்தார். அதுவும் பெண் குழந்தையாகப் பிறந்தது.

காலணியின்றி 350 கி-.மீ. ஓடி சாதித்த நீலிமா

ஹைதராபாத்: ஆந்திராவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த நீலிமா புடோட்டா என்பவர் புடவை அணிந்தவாறு விஜயவாடா முதல் விசாகப்பட்டினம் வரை 350 கி.மீ. தூரம் காலணியின்றி ஓடி சாதனை படைத்துள்ளார். இவர் பெண்கள் உடல்நல விழிப்புணர் வுக்காக இந்த ஓட்டம் நிகழ்த் தியதாகக் கூறினார். இதற்கு முன்னர் அவர், இமயமலை ஏறிய அனுபவம் பெற்றவர்.

வாரத்திற்கு ரூ. 24,000 என்ற வரம்பு தளர்கிறது

மும்பை: ரூ.500, ரூ.1000 நோட்டு கள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து வங்கிகளில் வாடிக்கை யாளர்கள் பணம் எடுப்பதற்கு இந் திய அரசு உச்ச வரம்பு விதித்திருந் தது. அதன்படி வாரத்திற்கு வங்கிக் கணக்குகளில் இருந்து வாடிக்கையாளர்கள் அதிகபட்ச மாக ரூ.24,000 வரை எடுக்க அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் அத்தொகையைப் பல தடவைகளில் பிரித்து எடுக்கு மாறு வாடிக்கையாளர்களுக்கு அறி வுறுத்தப்பட்டது. மத்திய அரசின் இந்த நட வடிக்கை காரணமாகப் பொதுமக் களில் பலர் தங்கள் கைவசம் உள்ள பணத்தை வங்கிகளில் செலுத் தத் தயங்கினர்.

Pages