You are here

இந்தியா

நடிகர் கருணாஸ் கார், விஷால் அலுவலகம் மீது தாக்குதல்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க பொதுக் குழு கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதல், ரகளை காரணமாக பெரும் பரபரப்பு நிலவியது. கூட்டம் தொடங்குவ தற்கு முன்பு, நடிகர் கருணாசின் கார், விஷாலின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. முதலில் தனியார் கல்லூரியில் இக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அக் கல்லூரிக்கு விடுக்கப்பட்ட வெடி குண்டு மிரட்டல் காரணமாக சங்கத்துக்கு சொந்தமான இடத்தி லேயே கூட்டம் நடந்தது.

ராமதாஸ்: ஜெயாவுக்காக மக்கள் அவதிப்படுவதை ஏற்க முடியாது

சென்னை: மக்களுக்காக கட்டி முடிக்கப்பட்ட பாலங்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்காகத் திறக்கப் படாமல் இருப்பது கண்டனத்துக்கு ரியது என பாமக நிறுவனர் ராம தாஸ் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளி யிட்ட அறிக்கை ஒன்றில், ஜெய லலிதா எப்போது மருத்துவமனை யில் இருந்து வீடு திரும்புவார் என்பது யாருக்கும் தெரியாத நிலையில், அவருக்காக அனைத்து மக்களும் அவதிப்பட வேண்டும் என்பதை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

புது ரூபாயை வரதட்சணையாக தராததால் நின்றுபோன திருமணம்

முசாபர்நகர்: புது ரூபாய் நோட்டை வரதட்சணையாக தர முடியாததால் ஒரு பெண்ணின் திருமணமே நின்று போன சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் நகரில் ஒரு ஜோடிக்குத் திருமணம் நடைபெற இருந்துள்ளது. திருமணத் திற்கு வரதட்சணையாக காரும் புது ரூபாய் நோட்டுகளும் மணமகன் சார்பில் பெண் வீட்டாரிம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் திருமணத்திற்கு முந்தைய நாள் வரை மணமகன் கேட்ட வரதட்சணையை மணமகள் வீட்டார் கொடுக்க வில்லை. இதனால் கோபம் கொண்ட மணமகன் திருமணத்தை நிறுத்திவிட்டார்.

21 வங்கிகளில் பயன்படுத்த பொது அட்டை அறிமுகம்

விசாகப்பட்டினம்: மத்திய அரசாங் கம் விரைவில் ஒரு பொதுவான அட்டையை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஒரே அட்டை மூலம் 21 வங்கிகளின் சேவை களை வாடிக்கையாளர்கள் விரை வில் பெற்று பயன் அடையலாம். இந்த அட்டை தொடர்பிலான வழி காட்டி வரைமுறைகளைச் செயல் படுத்த பணியாற்றி வருகிறோம். ஆனால் அந்த அட்டைக்கு இன் னும் பெயர் வைக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் வெங் கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

ரூ.2000 அச்சடிப்பு; ஆறு பேர் கைது

ஐதராபாத்: மத்திய அரசு, அண்மையில் வெளியிட்ட புதிய 2000 ரூபாய் நோட்டை போல அச் சடித்து கள்ளநோட்டுகள் தயாரித்த ஆறு பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இது குறித்து விவரங்களை காவல்துறையினர் நேற்று வெளி யிட்டனர். “ஐதராபாத் அருகே ராக் கொண்டா காவல்துறை வட்டாரத் துக்கு உட்பட்ட இப்ராகிம் பட்டனம் பகுதியில் சிலர் கள்ள ரூபாய் நோட்டுத் தயாரிப்பதாக தகவல் கிடைத்தது.

பகலில் ஆட்டோ ஓட்டுவார்... இரவில் திருடுவார்

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளையடித்த புகாரின் பேரில் அண்ணாமலை, 45, (படம்) என் னும் ஆட்டோ ஓட்டுநர் கடந்த வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். அவரிடம் போலிசார் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாயின. அய்யப்பன்தாங்கல் பகுதியில் வசித்து வரும் அண்ணாமலை இதற்கு முன்பு எம்ஜிஆர் நகரில் குடி இருந்தார். அப்போது வசதிபடைத்த பல்வேறு வீடுகள், கடைகள் மீது இவர் ஒரு கண் வைத்திருந்தார்.

50% வரி, 4 ஆண்டு முடக்கம்: சட்டத்தைத் திருத்துகிறது இந்திய அரசு

கறுப்புப்பண ஒழிப்பில் அடுத்த அதிரடியாக இந்திய நாடாளு மன்றத்தில் வருமான வரிச் சட் டத்தில் திருத்தம் கொண்டுவரப் பட உள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று இம்மாதம் 8ஆம் தேதி பிரதமர் மோடி அறி வித்த பின்னர் வங்கிக் கணக்கு களில் இரண்டரை லட்ச ரூபாய்க்கு மேல் பணம் செலுத் தியவர்களைப் பாதிக்கும் வித மாக அந்தச் சட்டத்திருத்தம் இருக்கும் என்று மத்திய அரசின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வங்கிக் கணக்குகளில் டிசம் பர் 30ஆம் தேதி வரை பழைய நோட்டுகளைச் செலுத்தலாம்.

பணத்தை திரும்ப வாங்கும் அதிமுக

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்தது. எதிர்பார்த்தது போலவே மூன்று தொகுதிகளி லும் அதிமுக வெற்றி பெற்ற போதிலும் அக்கட்சிக்கு முழு திருப்தி கிட்டவில்லை. மூன்று தொகுதிகளில் திருப் பரங்குன்றத்தை ஒரு சவாலாக எடுத்து தேர்தலைச் சந்தித்தது அதிமுக. காரணம், திமுக சார் பில் நிறுத்தப்பட்ட சரவணன் தொகுதியில் நன்கு அறிமுகம் இல்லாதவர். மேலும், பணபலம் குன்றியவர். ஆனால், அவரை எதிர்த்து அதிமுக களம் இறக்கிய ஏ.கே. போஸ் ஏற்கெனவே இத்தொகுதி யில் வென்றவர்.

புதிய ரூ.500க்கு தட்டுப்பாடு

சென்னை: ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு புதிய ரூ. 2000, ரூ. 500 நோட்டுகள் வெளியிடப் பட்டன. இதில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் சில நாட்களுக்கு முன்புதான் தமிழகத்துக்கு வந்து சேர்ந்தன. ஆனால் இந்தப் புதிய 500 ரூபாய் நோட்டுக்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் காரணங்களால் புதிய 500 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் விநியோகிக்க காலதாமதம் ஏற் பட்டது. இதனால் 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே விநி யோகிக்கப்பட்டன. ஆனால் 100 ரூபாய் நோட்டுகளும் தீர்ந்து விட் டதால் பல ஏடிஎம் இயந்திரங்கள் செயல்படவில்லை.

முல்லை ராசபாண்டியன்: 41 தமிழ் இலக்கியங்கள் செம்பதிப்பாக வெளியீடு

சென்னை: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் 41 தமிழ் இலக்கியங்கள் செம்பதிப்பாக வெளியிடப்பட உள்ளது. மேலும், திருக்குறளை இருபது மொழிக ளில் மொழிபெயர்க்கும் பணியும் நடைபெற்று வருவதாக அந்நிறுவ னத்தின் பதிவாளர் முகிலை ராச பாண்டியன் தெரிவித்துள்ளார். செம்மொழி தமிழாய்வு நிறுவன மானது மத்திய மனிதவள மேம் பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனம் ஆகும். தமி ழில் உள்ள செம்மொழி இலக்கியங் களை உலகம் முழுவதும் பரப்பும் பணியை இந்நிறுவனம் மேற் கொண்டுள்ளது.

Pages