You are here

இந்தியா

மதுரையில் கைதான நால்வரும் இன்று பெங்களூருவில் முன்னிலை

மதுரை: மதுரையில் கைதான நான்கு பயங்கரவாதிகளையும் மேல் விசாரணைக்காக இன்று டிசம்பர் ஒன்றாம் தேதியன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி அனுமதி வழங்கினார். மதுரையில் அப்பாஸ் அலி, சம்சும் கரீம் ராஜா, முகம்மது அயூப் அலி, சம்சுதீன் என்ற கரு வாயன் ஆகிய நான்கு பயங் கரவாதிகளும் தேசியப் புலனாய்வு அமைப்பினரால் ஞாயிறன்று கைது செய்யப்பட்டனர்.

நாடா புயல் எதிரொலி: 5 மாவட்ட பள்ளிகளுக்கு இருநாள் விடுமுறை

சென்னை: நாடா புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளிப்பதாகப் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. சென்னை அருகே மையம் கொண்டுள்ள நாடா புயல் நாளை கரையைக் கடக்கிறது. இந்தப் புயல் காரணமாக சென்னை, தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை அதிகாலை முதல் மழை பெய்யத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடா புயல் உருவாகியுள்ளதால் நாகை, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மீண்டும் பெண் பிள்ளை பெற்றவரை மொட்டையடித்து சித்திரவதை

இரண்டாவது பெண் குழந்தையை ஈன்றெடுத்த பெண்ணை அவரது கணவரே மொட்டையடித்து துன் புறுத்திய சம்பவம் உத்தரப் பிரதேசத் தில் நிகழ்ந்துள்ளது. ஆக்ரா அருகே மால்புரா என்னும் கிராமத்தைச் சேர்ந்த நன்னு என்னும் பெயர் கொண்ட அப்பெண்ணுக்கும் ர‌ஷித் என்பவருக்கும் மணமாகி ஏழாண்டு கள் ஆகின்றன. ஏற்கெனவே நான்கு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் இரு வாரங்களுக்கு முன்பு அந்தப் பெண் பிரசவித்தார். அதுவும் பெண் குழந்தையாகப் பிறந்தது.

காலணியின்றி 350 கி-.மீ. ஓடி சாதித்த நீலிமா

ஹைதராபாத்: ஆந்திராவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த நீலிமா புடோட்டா என்பவர் புடவை அணிந்தவாறு விஜயவாடா முதல் விசாகப்பட்டினம் வரை 350 கி.மீ. தூரம் காலணியின்றி ஓடி சாதனை படைத்துள்ளார். இவர் பெண்கள் உடல்நல விழிப்புணர் வுக்காக இந்த ஓட்டம் நிகழ்த் தியதாகக் கூறினார். இதற்கு முன்னர் அவர், இமயமலை ஏறிய அனுபவம் பெற்றவர்.

வாரத்திற்கு ரூ. 24,000 என்ற வரம்பு தளர்கிறது

மும்பை: ரூ.500, ரூ.1000 நோட்டு கள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து வங்கிகளில் வாடிக்கை யாளர்கள் பணம் எடுப்பதற்கு இந் திய அரசு உச்ச வரம்பு விதித்திருந் தது. அதன்படி வாரத்திற்கு வங்கிக் கணக்குகளில் இருந்து வாடிக்கையாளர்கள் அதிகபட்ச மாக ரூ.24,000 வரை எடுக்க அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் அத்தொகையைப் பல தடவைகளில் பிரித்து எடுக்கு மாறு வாடிக்கையாளர்களுக்கு அறி வுறுத்தப்பட்டது. மத்திய அரசின் இந்த நட வடிக்கை காரணமாகப் பொதுமக் களில் பலர் தங்கள் கைவசம் உள்ள பணத்தை வங்கிகளில் செலுத் தத் தயங்கினர்.

டாக்சியோட்டியின் வங்கிக் கணக்கில் ரூ.98 பில்லியன்

தமது வங்கிக் கணக்கில் இம்மாதம் 4ஆம் தேதி திடீ ரென்று கோடானு கோடி பணம் வந்து சேர்ந்ததை அறிந்ததும் திக்குமுக்காடிப் போனார் பல்வீர்ந்தர் சிங். பஞ்சாப் மாநிலம் அமிர்த சரசைச் சேர்ந்த அவர் இவ் வளவு பணமும் எப்படி வந் தது? என்று அறியும் முன் னரே மகிழ்ச்சியில் திளைத் தார். பிரதமரின் ஜன் தன் திட் டத்தின் கீழ் சில மாதங் களுக்கு முன்புதான் அந்த வங்கிக் கணக்கை அவர் தொடங்கி இருந்தார்.

காய்கறி விற்பனையில் நீடிக்கும் சரிவு

சென்னையில் சில்லறை ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருவதால் காய்கறிகள் விற்பனை குறைந்துள்ளது. இதனால் சில்லறை காய்கறி வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோயம்பேடு சந்தையில் தினமும் ரூ.5 கோடி அளவில் காய்கறிகள் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை சுமார் 2,000க்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகள் வாங்கிச் செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படம்: தகவல் ஊடகம்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுந்து நிற்க தொடர் பயிற்சி

சென்னை: மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்குத் தற்போது படுக்கையில் இருந்து எழுந்து நிற்க பயிற்சி அளிக்கப் படுவதாகக் கூறப்படுகிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த பிசியோதெரபி நிபுணர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதாகவும், மேலும் சில தினங்கள் இச்சிகிச்சையும் பயிற்சியும் நீடிக்கும் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கிடையே முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டி மருத்துவமனை முன்பு தினமும் சிறப்பு பூசைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மோடியைக் கொல்ல திட்டம்: 3 பேர் கைது

மதுரை: பிரதமர் மோடியை கொலை செய்ய பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருந்தது தெரியவந் துள்ளது. இதையடுத்து இந்தச் சதிச்செயலுக்கு திட்டமிட்ட மூன்று பேரை மதுரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அல் காய்தா அடிப்படை இயக் கம் என்ற பெயரில் மதுரையில் சிலர் இயங்கி வந்துள்ளனர். இது குறித்து கிடைத்த ரகசியத் தகவ லின் பேரில் போலிசார் அந்த அமைப்பினரைக் கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டனர்.

குற்றப் பின்னணி உடையவர்கள்: நீதிமன்றம் கறார் உத்தரவு

சென்னை: எதிர்வரும் உள்ளாட்சித் தேர்லில் குற்றப் பின்னணி உடையவர்களை முன்னிறுத்தக் கூடாது என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சுற்றிக்கை அனுப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தின் பரிந்துரைகளுடன் இத்தேர்தலை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வாய்ப்பு குறைவு என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Pages