You are here

இந்தியா

மதிப்பெண் முறைகேடு: அண்ணா பல்கலையின் பதிவாளர் நீக்கம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளரைப் பதவி நீக்கம் செய்து துணைவேந்தர் நடவடிக்கை எடுத்துள்ளார். அண்மையில் இப்பல்கலைக்கழகத்தில் நடந்த சில முறைகேடுகள் அம்பலமாகின. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

கருணாநிதி நினைவிடத்தில் குவியும் தொண்டர்கள்

சென்னை மெரினா கடற் கரையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட் டுள்ள இடத்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உடல் அடக்கம் செய்யப் பட்ட இடம் நேற்று முன்தினம் பல்வேறு காய்கனிகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் பல்வேறு மலர்களும் இந்த அலங்காரத்தில் இடம்பெற்றிருந்தன. தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் பலர் தினமும் வருவதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

படம்: தமிழக தகவல் ஊடகம்

சட்டவிரோத கும்பலுடன் தொடர்பு என திருமுருகன் காந்தி மீண்டும் கைது

சென்னை: தேசத்துரோக வழக்கில் கைதாகியுள்ள ‘மே 17’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு சட்டவிரோதக் கும்பலுடன் தொடர்பிருப்பதாகப் போலிசார் குற்றம் சாட்டியுள்ளனர். அண்மையில் பெங்களூருவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து சென்னையில் உள்ள நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரைச் சிறைக்கு அனுப்ப முடியாது என நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார். திருமுருகன் கைது தொடர்பாக காவல்துறையிடம் அவர் பல்வேறு கேள்விகளையும் எழுப்பினார். எனினும் மற்றொரு வழக்கு தொடர்பில் போலிசார் மீண்டும் திருமுருகன் காந்தியை கைது செய்துள்ளனர்.

சோகத்தால் அசைவத்தை கைவிட்ட கருணாநிதி

சென்னை: பாசமாக வளர்த்த செல்லப் பிராணி காலமானதை அடுத்து திமுக தலைவர் கருணா நிதி அசைவத்தில் இருந்து சைவ உணவுக்கு மாறிய தகவல் தெரிய வந்துள்ளது. தமது வீட்டில் சில நாய்களை வளர்த்து வந்துள்ளார் கருணாநிதி. அவற்றுள் கருப்பு நிறம் கொண்ட நாய் மீது அதிக பாசமும் வைத்திருந்தார்.

“எதையெல்லாம் அவர் சாப்பிடுகிறாரோ அவற்றை அந்த நாய்க்கும் கொடுப் பார். அந்தச் செல்லப் பிரா ணியும் அவர் மீது துள்ளிக் குதித்து மடியில் ஏறி விளையாடும்.

“அந்த நாய் திடீரென இறந்துவிட்டது. அதன் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த கலைஞர் சோகமடைந்தார்,” என்று கனிமொழி எம்பி., கூறியுள்ளார்.

வீடுகளை இழந்த 54,000 பேர் 500 முகாம்களில் அடைக்கலம்

கொச்சி: கேரளாவின் பெரும் பாலான பகுதிகளிலும் கடந்த ஒரு சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை, நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோர் எண் ணிக்கை 30ஆக அதிகரித்துள் ளது. சுமார் 54,000 பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களில் 15,600 பேருக்கும் மேலானோர் பாதிக்கப்பட்ட பகுதி களில் இருந்து அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர். இவர்கள் மாநிலங்கள் எங்கும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 500 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இரும்புச் சத்து மாத்திரை சாப்பிட்டதால் சிறுமி மரணம்; 161 மாணவர்கள் பாதிப்பு

மும்பை: மும்பை நகராட்சிப் பள்ளி ஒன்றில் வழங்கப்பட்ட இரும்புச்சத்து மாத்திரையைச் சாப்பிட்ட 12 வயது மாணவி சந்தானி முஹம்மது ரசா உயிரி ழந்தார். 161 மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். சிறுமி சந்தானி உயிரிழந்த சம்பவம் மற்ற குழந்தைகளின் பெற்றோர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது மகள் இந்த மருந்தை சாப்பிட்ட மறுநாளான செவ்வாய் அன்று உடல் நலம் பாதிக்கப்பட்ட தாகவும் இதற்கு முன்னால் அவள் நல்ல உடல்நலத்துடன் இருந்ததாகவும் வியாழனன்று ரத்தமாக வாந்தி எடுத்த மகள் இறந்துவிட்டதாக வும் இறந்து போன மாணவியின் பெற்றோர் கூறியதாக போலிசார் கூறினர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: திருவாரூர் தொகுதி காலியானது

சென்னை: திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி காலியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் மறை வையடுத்து அத்தொகுதி தற் போது காலியாக உள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்த லில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கருணாநிதி. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் அவர் காலமானார். இதையடுத்து கருணாநிதியின் மறைவு குறித்த தகவல் சட்டப் பேரவை செயலகத்துக்கு முறைப் படி தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததை அடுத்து திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சபாநாயகர் முறைப்படி அறிவிப் பாணை வெளியிட்டார்.

500 சொகுசு கார்களைத் திருடியவர் கைது

புதுடெல்லி: டெல்லியில் ஆண்டிற்கு 100 சொகுசு வாகனங்களை திருடுவதே தனது இலக்கு என்றும் முடிந்தால் என்னைப் பிடித்துப் பாருங்கள் என்றும் முன்பு ஒருமுறை காவல்துறையினரிடம் தொலை பேசி மூலம் சவால் விட்டு பேசிய ஷஃப்ருதீன் இப்போது போலிஸ் வலையில் சிக்கியுள்ளான். டெல்லியில் கடந்த 5 ஆண்டுகளாக உயர்தர 500 சொகுசுக் கார்களைத் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த ஷஃப்ருதீனை, 29, போலிசார் கைது செய்தனர்.

கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு: 6 தமிழக மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

சென்னை: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 143,000 கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டிருப்பதால் தமிழகத்தில் ஆறு மாவட்டங்களுக்கு வெள்ள ஆபத்து எச்சரிக்கை விடுக்கப் பட்டு உள்ளது. கர்நடாகா, கேரள மாநிலங் களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால், கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து மிக அதிக அளவில் உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. விநாடிக்கு 143,000 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் இரண்டு நாட்களில் மேட்டூருக்கு வரும் என தெரிகிறது.

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரி சிறையில் அடைப்பு

ஸ்ரீமுஷ்ணம்: காட்டுமன்னார்கோவில் அருகே ராஜதுரை, 75, என்ற விவசாயி, தனது நிலத்தை உழுவதற்கு வேளாண் இயந்திரத்தை மானிய விலையில் வாங்க முடிவுசெய்தார். அதன் தொடர்பில் அவர், காட்டுமன்னார்கோவில் வேளாண்துறை அலுவலக உதவி அலுவலர் பாரதிதாசனை, 40, சந்தித்தார். அப்போது ரூ.39,000 கொடுத்தால்தான் உடனே வேளாண் இயந்திரம் வழங்கப்படும் என்று பாரதிதாசன் தெரிவித்ததை அடுத்து அவரிடம் முதலில் ரூ 24,000 கொடுத்துவிட்டு பிறகு அது பற்றி கடலூர் லஞ்ச ஒழிப்பு போலிசில் ராஜதுரை புகார் செய்தார். அதிகாரிகள் கையும் களவுமாக பாரதிதாசனை மடக்கினர். பிறகு அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Pages