You are here

இந்தியா

நீலகிரி கூடலூரில் வெள்ளம் பெருக்கெடுப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் வெள்ளம் கரைபுரண்டு பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளநீரில் மான்கள் கூட்டம் கூட்டமாக அடித்துச் செல்லப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக உதகை மற்றும் கூடலூரில் இருந்து கேரளா மாநிலம் கோழிக் கோடு செல்லும் சாலையிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். உதகை, கூடலூரில் இருந்து நாடுகாணி வழியாக கேரளா கோழிக்கோடு, மஞ்சேரி, மலப்புரம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் சாலையில் கனமழை காரணமாக மரங்கள் விழுந்தன.

‘திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது’

சென்னை: தேச விரோத செயலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று நீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது. ஜெனீவா நகரில் அண்மையில் நடந்த ஐநா மனித உரிமை மன்றக் கூட்டத்தில் பங்கேற்று பேசியபோது, திருமுருகன் காந்தி அரசுக்கு எதிராக பேசியதாக உறுதிபட தெரியவந்தது. அதையடுத்து போலிஸ் வழக்குப் பதிந்தது. ஜெனீவாவில் இருந்து திருமுருகன் காந்தி இந்தியாவுக்கு திரும்பியபோது பெங்களூருவில் கைதாகி பிறகு சென்னை கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

தலைவராகப் பொறுப்பு ஏற்கிறார் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுகவின் அடுத்த தலைவராக மு.க. ஸ்டாலின் விரை வில் பொறுப்பேற்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. ஸ்டாலினை உடனடியாகத் தலைவர் பதவியில் அமர்த்த வேண்டும் என அவரது ஆதர வாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதையடுத்து கட்சிப் பொதுக்குழு வின் மூலம் அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கை கள் துவங்கி உள்ளதாகக் கூறப் படுகிறது. திமுக பொதுக்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் தேதி சென்னை யில் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலை யில் அக்கட்சித் தலைவர் கருணா நிதி காலமானார்.

பாய்ந்தது தேசத் துரோக வழக்கு: திருமுருகன் காந்தி அதிரடி கைது

பெங்களூரு: மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கின் கீழ் இந்நட வடிக்கை எடுக்கப்பட்டதாக காவல் துறை தரப்பு தெரிவிக்கிறது. ஜெர்மனியில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் உரை நிகழ்த்திவிட்டு நேற்று அதி காலை பெங்களூரு வந்தடைந்தார் திருமுருகன் காந்தி. இந்நிலையில் விமான நிலையத்தில் வைத்து அவரைப் போலிசார் கைது செய்தனர். “எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் எங்கள் இயக்கத் தின் சார்பில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கவே திருமுருகன் காந்தி பெங்களூரு வந்தடைந்தார்.

போலிச் சான்றிதழ்: சிக்கலில் 22 மாணவர்கள்

கோவை: போலிச் சான்றிதழ் களை அளித்து ஆஸ்திரே லியா சென்ற மாணவர்கள் 22 பேரின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைய டுத்து கேரளா, தமிழகத் தைச் சேர்ந்த அம்மாணவர் கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் அளித்தி ருந்த சான்றிதழ்களை ஆய்வு செய்தபோது அவை போலியானவை என ஆஸ்திரேலிய அதிகாரிகள் கண்டறிந்தனர். இதைய டுத்து விசாவை ரத்து செய்துள்ளனர்.

கருணாநிதி இறுதி ஊர்வலம்: 3 லட்சம் பேர் பங்கேற்றதாக மதிப்பீடு

சென்னை: கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் ஏறத்தாழ 3 லட்சம் பேர் திரண்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற தொண்டர்கள் முழுமையாகக் கலைந்து செல்ல 5 மணி நேரமானது. இந்த ஊர்வலத்தில் 3 லட்சம் பேர் பங்கேற்றதாகக் காவல்துறை தரப்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில் 5 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாக திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

கலைஞர் கருணாநிதி நல்லுடல் மெரினா கடற்கரையில் நல்லடக்கம்

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் நல்லுடல் அவர் விரும்பியபடியே மெரினா கடற் கரையில் அண்ணாதுரை சமாதி அருகே நேற்றிரவு பல்லாயிரக் கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த பல நாட்களாக உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த மு. கருணாநிதி நேற்று முன்தினம் காலமானார். நேற்று அதிகாலை முதல் ராஜாஜி ஹாலில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டிருந்த கலைஞரின் உடலுக்கு தேசிய கொடியை ராணுவ அதிகாரி கள் போர்த்தினர்.

அண்ணா அருகே கருணாநிதி

சென்னை: சென்னை கடற்கரையில் அண்ணா நினைவாலயம் அருகே கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கு இடம் ஒதுக்கக் கோரிய வழக்கு விசாரணை முடிவடைந்து கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக் கம் செய்ய உயர் நீதிமன்றம் நேற்று உத்தர விட்டது. திமுக தலைவர் கருணாநிதி உடலை அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதி கோரி திமுக தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தமிழக அரசு நிராகரித்தது. சென்னை காந்தி மண்டபம் அருகே இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கத் தயாராக இருப்பதாக வும் அரசு தெரிவித்தது. இதனையடுத்து இந்த விவகாரம் நீதிமன் றம் சென்றது. இந்த வழக்கு விசாரணை உடனடியாக செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணிக்குத் தொடங்கியது.

பிரதமர் மோடி அஞ்சலி

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததை அடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத் தில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர் மற் றும் திமுக தொண்டர்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி நேற்றுக் காலை 10.20 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள கடற்படைத் தளத்திற்குச் சென் றார். அங்கிருந்து கார் மூலம் ராஜாஜி அரங்கம் சென்ற அவர், கருணாநிதியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மு.க.

புதுவையில் வெண்கலச் சிலை அமைகிறது

புதுச்சேரி: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் காரைக்காலில் புதிய மேற்குப் புறவழிச் சாலைக்கு அவருடைய பெயர் வைக்கப்படும். புதுச்சேரியில் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கலச் சிலை வைக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி அறிவித்தார். திரு கருணாநிதியின் மறைவை யொட்டி புதுச்சேரியில் பொது விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக் கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

Pages