You are here

இந்தியா

கடத்தலில் திருச்சி விமான நிலையம் நான்காவது இடம்

சென்னை: வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்தி வரப்படும் குற்றம் நிகழ்வதில் திருச்சி விமான நிலை யம் இந்தியாவிலேயே நான்காவது இடத்தில் உள்ளது. புதுடெல்லி, மும்பை, சென்னை அனைத்துலக விமான நிலையங்களுக்கு அடுத்த நிலையில் திருச்சி அனைத்துலக விமான நிலையத்தில் அதிகமான கடத்தல் தங்கம் பிடிபடுவதாக அதி காரிகள் குறிப்பிட்டுள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் வெளிநாடுகளிலி ருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 6.8 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கமும் ரூ.77.3 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள், மின்னணு சாதனங் கள் ஆகியனவும் பறிமுதல் செய் யப்பட்டுள்ளன.

வழிச் சாலை: தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

படம்: தமிழக ஊடகம்

சென்னை: சேலம்-சென்னை எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்திற்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சேலம்=சென்னை எட்டு வழிச் சாலைத் திட்டம் சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வழியாக அமையவுள்ளது. தற்போது நிலம் கையகப்படுத் தும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கு அப்பகுதி விவ சாயிகளும் பொதுமக்களும் கடு மையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

ஒரே நேரத் தேர்தல்: மோடி விருப்பத்துக்கு அதிமுக எதிர்ப்பு

சென்னை: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிமுக எதிர்ப்புத் தெரிவித்து உள்ளது. நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத் தில் தேர்தல் நடத்தவேண்டும் என்ற கருத்து அண்மைக் காலங் களில் வலுப்பெற்று வருகிறது. பிரதமர் மோடியின் விருப்ப மும் அதுதான். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற முழக்கத்தை மோடி பயன்படுத்தி வருகிறார். இவ்வாறு ஒரே தேர்தலாக நடத் துவதன் மூலம் நேரமும் பணமும் மிச்சமாகும் என்ற கருத்து நிலவுகிறது. இதுதொடர்பாக தேசிய சட்ட ஆணையம் நாளை மறுதினம் புதுடெல்லியில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்துகிறது.

தமிழகத்தை சுரண்டுகின்றனர்: தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு

நாமக்கல்: கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழகத்தைப் பலரும் சுரண்டியுள்ளதாக அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அவ்வாறு சுரண்டியவர்களிடம் தற்போது வருமான வரிச்சோதனை நடப்பதாகத் தகவல் வந்துள்ளது என நாமக்கல்லில் செய்தியாளர்க ளிடம் பேசுகையில் அவர் குறிப் பிட்டார். தமிழகத்தில் இரண்டு பக்க மும் கொள்ளையடித்தவர்கள் யார் யார்? என்பது ஊடகங்களுக்கு நன்கு தெரியும் என்று தெரிவித்த அவர், கொள்ளையடித்தவர்களின் பினாமிகளிடம் தான் சோதனை நடந்து வருகிறது என்றார். “2019ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்.

தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சென்னை: முன்னாள் மாவட்ட ஆட்சியர் தொடுத்த வழக்கு தொடர்பில் தமிழக அரசின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் முன்னி லையாக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த கண்ணுச்சாமி என்பவர் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை நீண்ட காலம் நீடித்ததால் அவருக்கு வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற கண்ணுச் சாமி தமக்குப் பதவி உயர்வு வழங்காததை எதிர்த்து உயர் நீதி மன்றத்தை அணுகினார்.

ரயில்வே இணையதளங்களில் இந்தி மொழி திணிப்பு

சென்னை: ரயில்வே, சுற்றுலா ஆகிய துறைகளின் (IRCTC) இணையத் தளங்களில் இந்தி மொழி திணிக் கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சுக்கு கன்னியாகுமரி மாவட்ட இரயில் பயணியர் சங் கம் அனுப்பியுள்ள கடிதத்தில், நுகர்வோர் உரிமைகள் பாதுகாக் கப்பட வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது. ஐஆர்சிடிசி எனப்படும் இந் திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையத் தளம் மூலம் இரயில் பயணச் சீட்டுகளைப் பதிவுசெய்ய முடி யும். இந்த இணையத் தளத்தில் ஆங்கிலமும் இந்தியும் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

ரூ.4 ஆயிரம் கோடியில் புதிய தொழிற்சாலை

சென்னை: தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம் படுத்த பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருவ தாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழில் முனைவோர் மற்றும் பெரும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழகம் எப்போதும் முன்னிலை வகித்து வருவ தாக அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலிஸ் உடையில் வந்து ஆள் கடத்தல்

சென்னை: காவல்துறை உடையில் வந்து லாரி உரிமையாளரை சிலர் கடத்திச் சென்ற சம்பவம் சென்னையை அடுத்த செங்குன் றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் கடத்தல் நிகழ்ந்த 12 மணி நேரத்தில் போலிசார் குற்ற வாளிகளை மடக்கிப் பிடித்தனர். செங்குன்றத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் கணேசன், அண்மையில் நடந்த அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு வீட்டில் ஓய் வெடுத்து வருகிறார். இந்நிலை யில் செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணி அளவில் போலிசார் உடையில் நுழைந்த சிலர், தங்களுக்குக் கிடைத்த புகாரின் பேரில் கணேசனை விசாரிக்க வேண்டும் என்று கூறி அவரை வலுக்கட்டாயமாகக் காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

உச்ச நீதிமன்றம்: டெல்லி சூழ்நிலை வேறு, புதுச்சேரி விவகாரம் வேறு என விளக்கம்

புதுச்சேரி: டெல்லி துணைநிலை ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை என்று உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப் பித்துள்ளதை அடுத்து தனது மாநிலத்திலும் நீண்ட நாளாக நீடித்து வரும் தலைவலி நீங்கி விடும் என்று கணக்கு போட்டார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. ஆனால் அந்தக் கணக்கு தப்புக் கணக்காகப் போனதாக ஊடகங் கள் தெரிவித்துள்ளன.

விவசாயக் கடன்களை ரத்து செய்தது கர்நாடகா

பெங்களூரு: கர்நாடகாவில் இரண்டு லட்ச ரூபாய் வரை விவசாயிகள் வாங்கியுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்து பேசிய முதல்வர் குமாரசாமி(படத்தில் பெட்டியுடன்) கூறினார். “இரண்டு லட்ச ரூபாய்க்குள் வாங்கப்பட்ட விவசாயக் கடன்கள் இந்த அறிவிப்பு மூலம் ரத்து செய்யப்படும். இதனால் அரசுக்கு 34,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். எந்தெந்த விவசாயிகள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தினார்களோ, அந்தத் தொகை திரும்ப அவர்களுக்கே கொடுக்கப்படும். அதிகபட்சம் ரூ.25,000 வரை இதன்படி திரும்பக் கொடுக்கப்படும்,” என்று தெரிவித்தார்.

Pages