You are here

இந்தியா

தினகரன்: அமைச்சர்கள் சிறைக்குச் செல்வது உறுதி

மன்னார்குடி: தமிழகத்தில் தற்போதுள்ள ஆட்சி மத்திய அரசுக்கு சலாம் போடும் அடிமை அதிமுக ஆட்சியாக உள்ளது என அமமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதா இந்தியாவி லேயே முன்மாதிரி மாநில மாகத் தமிழகத்தை உரு வாக்கி வைத்திருந்தார் என மன்னார்குடியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங் கும் நிகழ்வில் பேசியபோது அவர் குறிப்பிட்டார். “18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியா கும். அதன் பிறகு அவர் கள் மீண்டும் சட்டப்பேர வைக்குச் செல்வார்கள்.

கருணாநிதி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ள தாக அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. கருணா நிதியின் உடல்நிலை மோசம் அடைந்ததாக பரவிய தகவலை யடுத்து நேற்று மாலை மருத்துவ மனை முன்பு ஏராளமான திமுக வினர் கூடினர். கருணாநிதி உடல் நிலை மீண்டும் மோசமடைந்ததாக தமிழகக் காங்கிரஸ் தலைவர் திரு நாவுக்கரசர் நேற்று தெரிவித்ததை யடுத்து, திமுகவினர் பதற்றம் அடைந்தனர். நேற்று மாலை மு.க. ஸ்டாலின், அழகிரி, ஆ. ராசா, தயாளு அம்மாள் உள்ளிட்ட பலரும் அடுத்தடுத்து மருத்துவ மனைக்கு வந்து சேர்ந்தனர்.

சிங்கப்பூரிலிருந்து தங்கம் கடத்தியதாக சந்தேகம்: 19 பேர் கைது

திருச்சி: சிங்கப்பூரில் இருந்து பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வந்திருக்கலாம் என்ற சந்தேகத் தின் பேரில் திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கை காரணமாகப் பெரும் பரபரப்பு நிலவியது. பல மணி நேரம் நீடித்த சோதனை, விசாரணையின் முடி வில் சுங்கத்துறை அதிகாரிகள் 6 பேர் உட்பட 19 பேர் கைதாகினர். ஞாயிற்றுக் கிழமையன்று சிங்கப் பூரில் இருந்து திருச்சி வந்தடைந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணி கள் பலர் தங்கம் கடத்தி வருவ தாக சிபிஐக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்துக்கு விரைந்த சிபிஐ குழு ஒன்று பயணிகளிடம் உடன டியாக விசாரணை மேற்கொண்டது.

அண்ணா பல்கலை ஊழல்: பெண் அதிகாரி மீது புதுப் புகார்

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியான உமா மீது புது குற்றச்சாட்டு எழுந் துள்ளது. பல்கலைக்கழகத்துக்கு சான் றிதழ்களை அச்சடிக்க சில விதி களை மீறி அவர் ஒப்பந்தம் போட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே விடைத்தாள் மறு கூட்டலில் சில பேராசிரியர்களுடன் இணைந்து அவர் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து உமாவும் இரு பேராசிரியர்களும் பணியிடை நீக் கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் பல்கலைக்கழகத்துக்கு சான்றிதழ் களை அச்சடித்துத் தரும் ஒப் பந்தப் பணியைப் பல்வேறு விதி முறைகளை மீறி குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு உமா அளித்த தாகக் கூறப்படுகிறது.

கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை என தகவல்: திமுகவினர் கவலை

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு உள்ளதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் திமுகவினரும் கருணா நிதி ஆதரவாளர்களும் மீண்டும் கவலையில் மூழ்கியுள்ளனர். கடந்த சில தினங்களாக உடல் நலம் குன்றியுள்ள கருணாநிதிக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடையில் அவரது உடல்நிலை யில் திடீர் பின்னடைவு ஏற்பட்ட தாகவும், எனினும் சிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலை சீரடைந்த தாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனால் திமுகவினர் நிம்மதி அடைந்தனர்.

பங்ளாதே‌ஷியரை வெளியேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

இந்தியாவுக்குள் குடியேறியுள்ள பங்ளாதே‌ஷியரையும் ரோகிங்யா அகதிகளையும் நாட்டைவிட்டு வெளியேற்றக் கோரி ஐக்கிய இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தோர் நேற்று டெல்லியில் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். படம்: ஏஎஃப்பி

இந்தியாவில் 2.4 மி. அரசு வேலைகள் காலி

இந்திய இளையர்களிடையே வேலையின்மை அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் வேளையில், நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு துறைகளில் சுமார் 2.4 மில்லியன் பணியிடங்கள் காலி யாக இருப்பதாகத் தெரியவந்து உள்ளது. நாடாளுமன்றத்தில் கேட்கப் பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்களிலிருந்து இந்தத் தரவு தொகுக்கப்பட்டு உள்ளது. தொடக்கப்பள்ளிகள், உயர் நிலைப் பள்ளிகள் போன்றவற்றில் மட்டும் முறையே சுமார் 9 லட்சம், 1.1 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் கூறப் பட்டது.

கணவன்மார்களை காப்பாற்ற அமைப்பு

புதுடெல்லி: மனைவியால் பாதிக் கப்படுவோரின் பிரச்னை களுக்குத் தீர்வுகாண அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி ஹரிநாராயண் ராஜ்பர் கேரிக்கை விடுத்துள்ளார். பெண்களின் பிரச்னை களுக்கு தீர்வு காண பல்வேறு அமைப்புகளை அரசு ஏற்படுத் தியுள்ளதாகவும் ஆனால் ஆண்களின் நலனுக்காக எந்த அமைப்பும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் அவர் பேசினார். மனைவிகளால் கணவர்கள் கெடுமைப்படுத்தப்படுவது அதி கரித்து வருவதாகவும் பெய்ப் புகார்கள் காரணமாக ஏராளமான கணவர்கள் சிறைகளில் அடைக் கப்பட்டுள்ளதாகவும் பாஜக எம்பி தெரிவித்தார்.

பாஜக ஊழல்களை பிரசாரம் செய்ய காங்கிரஸ் முடிவு

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் நான்காண்டு கால ஆட்சியில் அரங்கேறிய ஊழல் களை நாட்டு மக்களிடம் அம் பலப்படுத்தப்போவதாக காங் கிரஸ் தெரிவித்துள்ளது. இதற்காக தேசிய அள விலான பிரசாரத்தை மேற் கொள்ளப்போவதாகவும் அக் கட்சி கூறியுள்ளது. குறிப்பாக வங்கி மோசடிகள், ரஃபேல் போர் விமான ஒப்பந் தம், பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பிரச்சினைகளை மக்களிடத்தில் விரிவாக எடுத் துரைக்க காங்கிரஸ் தலைவர் கள் திட்டமிட்டுள்ளனர்.

குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாதோரிடம் வங்கிகள் ரூ.5,000 கோடி வசூல்

மும்பை: கடந்த 2017-18ஆம் நிதி யாண்டில் வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாததால் வாடிக்கையாளர்க ளிடம் இருந்து ரூ.5,000 கோடி வரை வங்கிகள் அபராதமாக வசூ லித்துள்ளன. பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் ஏழை எளிய மக் களுக்கு 30.8 கோடி அடிப்படை வங்கிக் கணக்குகள் திறக்கப்பட் டதைத் தொடர்ந்து அபராதம் மூல மான வங்கிகளின் வருமானம் அதிகரித்துவிட்டது. காரணம் இந்தக் கணக்குகளின் வாடிக்கை யாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்கும் அளவுக்கு வசதியற்றவர்கள். இருந்தபோதி லும் அவர்களிடமும் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

Pages