You are here

இந்தியா

ஹஜ் பயணத்துக்கு ரூ.6 கோடி மானியம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: ஹஜ் பயணத்துக்குத் தமிழக அரசு ஆண்டுதோறும் ரூபாய் 6 கோடி மானியம் அளிக்கும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று விதி எண் 110இன் கீழ் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டார். “அரசின் இந்த அறிவிப்பு மூலம் 2018-19ஆம் ஆண்டில் 3,828 ஹஜ் பயணிகள் பயனடைவர்,” என்றார் முதல்வர்.

மேலும் செய்திகள்

போலிக் கடப்பிதழ் மூலம் கனடா செல்ல முயற்சி: 19 பேர் கைது

சென்னை: போலிக் கடப்பிதழைப் பயன்படுத்தி சென்னையில் இருந்து கனடா செல்ல முயன்ற 19 பேர் கைதாகினர். நேற்று முன்தினம் குஜராத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 19 பேர் ஒரே குழுவாக கனடா செல்லும் பொருட்டு சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர். அவர்களுடைய கடப்பிதழ் மற்றும் விசாக்களை ஆய்வு செய்தபோது அனைத்தும் போலியானவை என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து 19 பேரின் பயணம் ரத்தானது. பின்னர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கனடா செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

மாடுகளை வைத்து நூதனப் போராட்டம்

பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம், குள்ளம்பட்டி கிராம விவசாயிகள் கால் நடைகளுடன் அம்மன் கோவிலுக்குச் சென்று நூதனப் போராட்டத் தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. மாடுகளின் கொம்பின் அடிப்பகுதியில் கறுப்பு துணியைச் சுற்றி, அதன்மீது ‘எட்டு வழிச்சாலை திட்டம் வேண்டாம்’ என்ற அட்டைகளைத் தொங்க விட்டிருந்த னர். அம்மனுக்கு பூசை செய்த பின் மாடுகளு டன் ஊர்வலம் சென்றனர். படம்: தகவல் ஊடகம்

தமிழகத்துக்கு 31 டிஎம்சி தண்ணீர்: காவிரி மேலாண்மை ஆணையம் முதல் உத்தரவு

புதுடெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கட்டம் டெல்லியில் நேற்று காலை நடை பெற்றது. அப்போது தமிழகத்துக்கு 31 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை அண்மையில் அமைத்தது மத்திய அரசு. இதில் மத்திய அரசு, தமிழக, கர்நாடக மாநில அரசுகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சார்பில் ஆணைய உறுப்பி னராக இடம்பெற்றுள்ள தமிழகப் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் எஸ்.கே. பிரபாகரன் பங்கேற்றார்.

அணு உலையை மூட உத்தரவிட இயலாது: உச்சநீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அணு உலையை மூட உத்தர விட முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. கூடங்குளம் அணு உலை அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கு இன்றிச் செயல்படுவதாகவும், இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும் உச்சநீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் அணு உலையை மூடவேண்டும் என இவ்வழக்கைத் தொடுத்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்தி இருந்தது.

தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேசுவரம்: இலங்கைக் கடற்படையினர் நடுக்கடலில் விரட்டி அடித்ததால் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்காமல் கரை திரும்பி உள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு ராமேசுவரத்தில் இருந்து 750 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென 5 படகுகளில் அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் தங்களை விரட்டி அடித்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கைது நடவடிக்கைக்கு பயந்து மீன்பிடிக்காமலேயே கரை திரும்பியதாகவும், இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.

விடிய விடிய மழை: சேலத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்

சேலம்: விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக சேலத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். நேற்று முன்தினம் இரவு சேலத்தில் தொடர்ந்து மூன்று மணி நேரம் மழை வெளுத்துக் கட்டியது. இதனால் அம்மாபேட்டை, கிச்சிபாளையம் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்துவிட்டதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். வீட்டுக்குள் புகுந்த மழைநீரில் மூழ்கி சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்த புஷ்பா என்ற பெண்மணி உயிரிழந்தார்.

திடீரென மூண்ட காட்டுத்தீ: அரிய வகை மரங்கள் தீக்கிரை

திருவில்லிபுத்தூர்: திடீரென மூண்ட காட்டுத்தீ காரணமாக திருவில்லிபுத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அரிய வகை மரங்கள் தீயில் கருகி நாசமாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் காட்டுத்தீ பற்றி மளமளவென பரவியது. இதையடுத்து திருவில்லிபுத்தூர் வனத்துறையினர், வேட்டை தடுப்புக் காவலர்கள், மலைவாழ் மக்கள், தீத்தடுப்பு குழுவினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் பல அரியவகை மரங்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது.

அணு உலையை மூட உத்தரவிட இயலாது: உச்சநீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அணு உலையை மூட உத்தர விட முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. கூடங்குளம் அணு உலை அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கு இன்றிச் செயல்படுவதாகவும், இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும் உச்சநீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் அணு உலையை மூடவேண்டும் என இவ்வழக்கைத் தொடுத்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்தி இருந்தது. இந்த வழக்கு நேற்று விசா ரணைக்கு வந்தது.

‘இந்தியாவில் தமிழ்நாட்டு மருத்துவ முறையே தலைசிறந்தது, முன்மாதிரி’

இந்தியாவில் நோயைக் கண்டறிந்து அதைக் குணப்படுத்த சரியான சிகிச்சை அளிப்பதில் தமிழ்நாடுதான் நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது என்று அந்த மாநிலத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மருத்துவர்கள் மன்றம் சார்பில் நடந்த ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், பொது சுகாதார சட்டத்தை இயற் றிய முதல் மாநிலம் தமிழ்நாடுதான் என் றும் குறிப்பிட்டார்.

Pages