இந்தியா

திருவனந்தபுரம்: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவால் கேரளாவில் வெல்ல முடியாது என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: கேரளா உள்ளிட்ட சில இந்திய மாநிலங்களில் வரும் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், கேரளாவில் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமான ‘இன்டர்குளோப் என்டர்பிரைசஸ்’ நிறுவனம் இந்தியாவில் வான்வழி டாக்சி சேவையை 2026ல் பயன்பாட்டுக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.
சண்டிகர்: காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானது. கர்னால், மணாலி உள்ளிட்ட சில இடங்களில் கொட்டிய கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
புதுடெல்லி: மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி பிரமுகர்களின் இல்லங்கள், தொழிற்கூடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தி நன்கொடை வசூலிக்கக் கற்றுத்தரும் ஊழல் பள்ளியை பிரதமர் மோடி நடத்தி வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

ஆளும் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதையும் பாஜகவின் வெற்றி வாய்ப்பை சரிப்பதையும் இலக்காகக் கொண்டு தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடியையும் பாஜகவையும் கடுமையாகக் குறைகூறியுள்ளார்.

“பிரதமர் மோடி இந்தியாவில் ஊழல் பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறார். எதிர்க்கட்சியினர் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது ஏன்? மத்திய விசாரணை முகவர்கள் துணையோடு ‘பிணை- சிறை’ விளையாட்டு எவ்வாறு விளையாடப்படுகிறது?” என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார் ராகுல்.

”இந்தியா கூட்டணி தலைமையிலான அரசு அமைந்ததும் பாஜகவின் ஊழல் பள்ளிக்கு பூட்டு போடப்பட்டு மூடும்படி செய்யப்படும்,” எனவும் அவர் உறுதி அளித்திருந்தார்.