You are here

தலையங்கம்

மு.கருணாநிதி -ஒரு சகாப்தம்

இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழ் நாடு, அந்த மாநிலத்துக்கே தனித்தன்மை வாய்ந்த அரசியலின் அடையாளமாகத் திகழ்ந்துவந்த ஓர் அரிய தலைவரான மு. கருணாநிதியை இழந்துவிட்டது. எழுத்தாளர், கவிஞர், செய்தித்துறையாளர், மேடைப் பேச்சாளர், நாடகக் கலைஞர், திரைப் படக் கலைஞர், அரசியல் கட்சித் தலைவர் என்று பல திறன்கொண்ட திரு கருணாநிதி, தனது எல்லாத் திறமைகளையும் அரசியலுக்கே அர்ப்பணித்து ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக ஆட்சிபுரிந்தவர்.

சமரசம்: அனைத்துலக அளவில் உன்னத நிலையில் சிங்கப்பூர்

ஐக்கிய நாடுகள் அமைப்பில், அனைத்துலக வர்த்தகச் சட்ட ஆணையம் என்ற ஒரு பிரிவு இருக்கிறது. உலக வர்த்தகத்தில் நிறுவனங் களுக்கு இடையிலான பிரச்சினைகள் காரண மாக ஏற்படக்கூடிய செலவு, காலவிரயம், உற் பத்தித்திறன் குறைவு போன்ற பாதிப்புகளைத் தவிர்ப்பது இந்த ஆணையத்தின் நோக்கம்.

தாக்குதலின் பின்னணியில் மறைந்திருப்பவர்களைக் கையாளுதல்

சிங்கப்பூரின் ஆகப்பெரிய இணையத் தாக்குத லில் பிரதமர் லீ சியன் லூங் உட்பட 1.5 மில்லியன் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெரிய அளவிலான பதில் நடவடிக்கை மேற்கொள் ளப்படுவது அவசியம்.

வெற்றிக்குப் பல பாதைகள் உண்டு

இந்திராணி ராஜா

ஜூலை மாதத்தில் நடைபெறவிருக் கும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, கல்வி தொடர்பான தீர்மா னத்தை விவாதிக்கவிருக்கிறோம். ஒவ்வொரு பெற்றோருக்கும் முக்கி யமானதொரு தலைப்பு கல்வி. நம் பிள்ளைகள் சிறந்த கல்வி பெற்று, நல்ல வேலைகளில் சேரவேண்டும் என நாம் விரும்புவோம். அதே சமயத் தில், போட்டித்தன்மை, தேர்வால் ஏற் படும் மன உளைச்சல், நம் பிள்ளை களால் இளம்பிராயத்தையும் இளமைப் பருவத்தையும் மகிழ்ச்சியாக அனுப விக்க முடியுமா போன்ற அக்கறைகள் பல பெற்றோர்களுக்கு உள்ளது.

இனிப்பை குறைத்து நீரிழிவை தடுப்போம்

இலவச குடிநீர் வசதி, அத்துடன் சீனிக்கு புதிய வரி என ஒருபக்கம் சீனி பயன்பாட்டைக் குறைக்க ஊக்கம், மறுபக்கம் சீனிக்கு அதிக விலை என நீரிழிவுக்கு எதிரான போரில் இருமுனை உத்தி கடந்த இரண்டு ஆண்டு களாகவே சிங்கப்பூரில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் இலக்கு தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது - தற்போதைய நிலையில் சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 400,000 பேரையும் 2050ஆம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் பேரையும் பாதிக்கக்கூடிய நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடி வெற்றி கொள்வது. பார்க்கப்போனால் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் பலனைத் தரத் தொடங்கி யுள்ளன.

சந்திப்பு முடிந்தது; சிரமமான பணி இனி தொடங்கும்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் ஒருவருக்கு ஒருவர் வசைபாடி, தங்கள் நாடுகளிடம் உள்ள அணுவாயுதங்களின் அளவு குறித்து பெருமையுடன் பேசி சில மாதங்களே ஆன நிலையில் அவ்விருவரும், அமைதிக்காகக் கைகோத்து, வாய்நிறைய வாழ்த்துகள் கூறி, நூறாண்டு காணாத அதிசயமாக வரலாற்றுச் சிறப்புமிக்க உச்ச நிலைச் சந்திப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். அந்தக் கண்கொள்ளாக் காட் சியைக் கண்டு உலகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது ஒருபக்கம், வியப்பில் ஆழ்ந்தது மறு பக்கம்.

இளையரையும் முதியோரையும் ஒன்றுசேர்க்கும் முயற்சி

முரசொலி - ஞாயிறு 27.5.2018

சிங்கப்பூர் மக்கள்தொகை மூப்படைந்துவரும் நிலையில், இளையர், முதியோருக்கிடையே ஒருவர் மற்றவரின் எண்ணங்கள், உணர்வு களுக்கிடையே புரிந்துணர்வை வளர்க்க வேண்டியுள்ளது. சிங்கப்பூரின் எதிர்கால நலனுக்காக இளைய சமுதாயத்தின் மீது கவனம் செலுத்த வேண்டியுள்ள அதேவேளை யில் முதியோரையும் பராமரிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

அரசியல் கடலில் கலக்கும் காவிரி ஆற்றுப் பிரச்சினை

ஒரு கண்டத்திற்கு உரிய அத்தனை இயற்கை இயல்புகளையும் கொண்ட இந்தியா துணைக் கண்டமாகத் திகழ்கிறது. பல மொழி, பல கலாசார பூமியாக இருக்கின்ற அந்த நாடு, பல மாநிலங்களாக மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு இருக்கிறது.

இருந்தாலும் காடுகள், மலைகள், நதிகள் போன்ற பிளவுபடாத இயற்கை வளங்களை எல்லா மாநிலங்களும் பகிர்ந்து பயன்படுத்தி வருகின்றன. வற்றாத ஜீவநதிகளும் குறிப் பிட்ட பருவத்தில் மட்டும் நீர் நிரம்பி ஓடும் ஆறுகளும் அந்த நாட்டில் அதிகம்.

வன்முறையால் ஏற்பட்ட கறை அகல வேண்டும்

ஞாயிறு 25.3.2018

இலங்கையில் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை ஒடுக்க நாடு தழுவிய அளவில் அவசரகால நிலையைப் பிரகடனப் படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது அந் நாட்டிலுள்ள சமூக பிளவின் ஆழத்தை வெளிப்படுத்தியது. 2009ஆம் ஆண்டு முடி வுக்கு வந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பல்லாண்டுகளாக நடைபெற்ற பிரிவினை வாதப் போருக்குப் பின் கடும் நடவடிக்கையை அந்நாட்டு அரசாங்கம் எடுத்திருப்பது இதுவே முதல் முறை.

Pages