You are here

தலையங்கம்

பதினொரு வயது முதல் திறன்வளர்க்கும் திட்டம்

குடியரசில் பதினொரு வயது மாணவர்கள் முதல் வயது வந்தோர் வரை, ‘மைஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ வலைத் தளத் தின்வழி இனி பலவித பயன்களைப் பெறமுடியும். துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம் சென்ற வாரம், ‘மைஸ்கில்ஃஸ்பியூச்சர்’ வலைத்தளத்தையும் ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ ஆலோசனை வலைத்தளத்தையும் தொடங்கிவைத்தார். இவை இரண்டுமே மாணவர் களுக்கும் வயதுவந்தோருக்கும் பல வழிகளில் பயன் தரும் என்பது உறுதி.

சிங்கப்பூர் - அமெரிக்கா நல்லுறவு தொடரவேண்டும்

பிரதமர் லீ சியன் லூங் மேற்கொண்ட அமெரிக்கப் பயணத்தின் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்படவுள்ள பல்வேறு நன்மைகள் பற்றி ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டு உள்ளன. அமெரிக்காவுடனான நல்லுறவை சிங்கப்பூர் தொடர்ந்து கட்டிக்காக்க வேண்டியது அவசியம். ஆசியாவில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபாட்டுடன் இருக்க வேண்டியதும் முக்கியம் என்று தம் பயணத்தின்போது பிரதமர் லீ வலியுறுத்திக் கூறினார். திரு லீ அமெரிக்காவில் இருந்தபோது சிங்கப்பூரும் அமெரிக்காவும் சிங்கப்பூர் ஏர்லைன்சுக்காக உடன்பாடு ஒன்றில் கையொப்பம் இட்டன. அதன்படி 39 விமானங் களை போயிங் நிறுவனத்திடமிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வாங்கிக்கொள்ளும்.

வளர்ச்சி அறிகுறியுடன் இந்தியப் பொருளியல்

உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பார்க்கையில் ஆறாவது ஆகப்பெரிய பொருளியலைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. கடந்த 1991ல் இந்தியா பொருளி யலை தாராளமயமாக்கி உலகுக்குத் தன் கதவுகளைத் திறந்துவிட்டது. அது முதல் அந்த நாடு ஆண்டுதோறும் 6=7% வளர்ச்சி கண்டு வருகிறது. மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சி விகிதங்களை வைத்துப் பார்க்கையில் ஒரு நாட்டின் பொருளியல் 2% வளர்ந்தாலே அது வளர்ச்சி என்று கணிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை அதன் பொருளியல் குறைந்தபட்சம் 7 விழுக்காட்டுக்கும் அதிகமாக வளர்ந்தால்தான் அந்த நாடு மில்லியன் கணக்கான தன் மக்களை ஏழ்மைப் பிடியில் இருந்து மீட்க முடியும்.

நம்பிக்கை குறைந்தால்

நம்பிக்கைதான் மனிதவாழ்வின் வெற்றியையும் நிம்மதி யையும் வளர்க்கும் என்பார்கள். அதுவே அவநம்பிக்கை யாகிவிட்டால், நினைக்கக்கூடாதவற்றை எல்லாம்கூட மனித மனம் நினைக்கத் தொடங்கும். ஆயுட்காலத்தில் மனிதமனங்கள் மகிழ்வோடு இருக்கும்போது மகிழ்ச்சிமிக்க செயல்களில் ஈடுபடு வதையும் மகிழ்ச்சியின்றி, நம்பிக்கையின்றி இருக்கும் போது தகாத செயல்களில் ஈடுபடுவதையும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், அமெரிக்காவின் சில பகுதிகளில் ஆப்ரிக்க இனத்தவர் பெரும்பான்மையாக உள்ள வட்டாரங்களில் மாறுபட்ட சிந்தனைகள் உருவாகியிருப்பதை ஆய்வாளர் கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதிமுகவில் மணவிலக்கு முடிந்து மறுமணம்

தமிழ்நாட்டை ஆட்சி புரிகின்ற அதிமுகவில் ஆறு மாத கால மணவிலக்கு முறிந்து மறுமணம் நடந்துள்ளது.
அதிமுகவை அடக்கியாளும் மாமியார் போல் செயல்பட்டுவந்ததாகக் கூறி சசிகலாவையும் அவரின் கையாள் தினகரனையும் ஓரங்கட்டிவிட்டு எடப்பாடியும் பன்னீர்செல்வமும் கை கோர்த்துக் கொண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி நிறைந்த அமாவாசையன்று இணைந்து இருக்கிறார்கள்.

நல்லுறவின் நட்பு நாடுகள்

சிங்கப்பூருக்கு அருகில் இருக்கும் ஆசியான் நாடுகளில் ஒன்று இந்தோனீசியா. இந்தோனீசியாவின் மிகப் பெரிய முதலீட்டாளர்களில் தனிச்சிறப்புமிக்க ஒன்று சிங்கப்பூர். ஆசியான் என்ற தென்கிழக்காசிய அமைப்பு 1967ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது அந்த அமைப்பைத் தோற்றுவித்த தொடக்க கால உறுப்பினர்களாக சிங்கப் பூரும் இந்தோனீசியாவும் பெரும் பங்கு வகித்து வருகின் றன. இரு நாடுகளும் அரை நூற்றாண்டு காலமாக அரு மையான அரசதந்திர உறவைப் பேணி காத்து வந்து உள்ளன.

நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருப்போம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம் முன் னோர் கூறுவர். நாம் அனைவரும் நோயற்ற வாழ்வு வாழ, சுகாதாரமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்க வேண் டியது இன்றியமையாதது.

முன்னேற்றப் பாதையில் நவீன இந்தியா

இந்தியா 1947ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது முதல் பல்வேறு தடைகளைத் தாண்டி இன்றைய முன்னேற்ற நிலையை அடைந்துள்ளது. அண்மையில்தான் அது 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. இன்று சீனாவுக்கும் ஜப்பானுக்கும் அடுத்த நிலையில் இந்தியா மூன்றாவது பெரும் பொருளியல் சக்தியாக இருக்கின்றது. சீனா ஏறக்குறைய 600 மில்லியன் மக்களின் வறுமையை ஒழித்துள்ளது என்றும் அமெரிக் காவுக்கே சவாலாக விளங்குகிறது என்றும் கூறும் விமர்சகர்கள், இந்தியா அந்த அளவுக்கு சாதித்துள்ளதா என்றும் வினா தொடுக்கின்றனர்.

அமெரிக்கத் தீவை வடகொரியா தாக்கினால்

அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவுக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் தொலைவில் இடைவெளி ஏவுகணை களால் தாக்குதல் நடத்த திட்டங்களை மேற்கொண்டு வருவதாக வடகொரியா வா‌ஷிங்டனை அச்சுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் பசிபிக் நிலப்பகுதியில் உள்ளதுதான் குவாம்தீவு. ஒருசில நாட்களில் தான் செலுத்தவுள்ள நான்கு ஏவுகணைகளும் ஜப்பானைத் தாண்டிச் செல்லும் என்று கூறியுள்ள பியோங்யாங், ஏவுகணைகள் செல்லும் பாதை உலகின் சுறுசுறுப்புமிக்க பல கடல், ஆகாய மார்க்கங்களைத் தாண்டிச் செல்லும் என்றும் கூறி இருக்கிறது.

தெற்குநோக்கிய பயணத்தில் பாரதிய ஜனதா கட்சி

அண்மையில் நடந்து முடிந்த இந்திய அதிபர் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி அதன் அடிப்படைக் குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ள தொடங்கியிருக்கும் திட்டத்தின் முதல் நோக்கத்தை நிறைவேற்றியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறியிருக் கின்றனர்.

நாட்டின் அதிபர், பிரதமர், மக்களவை நாயகர் என மூன்று முக்கிய பதவிகளை இதுகாறும் பாரதிய ஜனதா கைப்பற்றியிருப்பது அந்த வெற்றியை உறுதிப்படுத்தியிருக் கிறது.

Pages