You are here

திரைச்செய்தி

ஆவலுடன் காத்திருக்கிறார் பூமிகா

தமிழ்ப் படங்களில் நடிக்கக் கேட்டு நிறைய வாய்ப்புகள் தேடி வருவதாகச் சொல்கிறார் நடிகை பூமிகா சாவ்லா. ஒரு காலத்தில் விஜய், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து அசத்தியவர். தற்போது ‘யு டர்ன்’ படத்தில் நடித்துள்ளார். இதுவரை ஏற்றிராத வித்தியாச மான கதாபாத்திரத்தில் நடித்திருப் பதாகவும் அதை ரசிகர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என்பதைக் காண ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் பூமிகா. “எந்தவொரு படமாக இருந்தாலும் கதை நன்றாக இருக்கவேண்டும். படக்குழுவினர் சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே ரசிகர்களிடம் அந்தப் படம் சரியாகச் சென்றுசேரும். “கடந்த 1999ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானேன்.

ஒத்திவைக்கப்பட்டது சேதுபதியின் ‘96’ பட வெளியீடு

முதல்முறையாக விஜய் சேது பதியும் திரிஷாவும் இணைந்து நடித்துள்ள ‘96’ படத்தின் வெளி யீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்துள்ளார் நடிகர் ஜனகராஜ். அமெரிக்காவில் இருந்த அவரைத் தேடிப் பிடித்து அழைத்து வந்தனராம். பகவதி பெருமாள், காளி வெங்கட், ‘ஆடுகளம்’ முருகதாஸ், தேவதர்‌ஷினி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘சீமராஜா’வில் இரு பாத்திரங்களில் சிவகார்த்திகேயன்

பொன்ராம், சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘சீமராஜா’. இதில் சிவா ஜோடியாக சமந்தா நடித்துள் ளார். நாளை வெளியீடு காணும் நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயன் சீமராஜா மற்றும் கடம்பவேல் ராஜா என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன்மூலம் சிவா தங்களுக்கு இரட்டை விருந்து அளித்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கிராமப் பின்னணியில் குடும்பப் படமாக உருவாகி உள்ளது ‘சீமராஜா’.

பிரியா: நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன

தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லாத நிலையில் மலையாளக் கரையோரம் ஒதுங்கியுள்ளார் பிரியா ஆனந்த். அங்கு அவர் நடிப்பில் வெளியான ‘எஸ்றா’ என்ற படம் விமர்சன, வசூல் ரீதியில் வெற்றி பெற்றுள்ளது. பிருத்விராஜ் ஜோடியாக இப்படத்தில் பிரியா நடித்துள்ள நிலையில், மலையாளத்தில் மேலும் பல வாய்ப்பு கள் தேடி வருகின்றனவாம். இதையடுத்து திலீப் ஜோடியாக மற்றொரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் பிரியா. இப்படத்தை மோகன்லாலின் நண்பரான உன்னிகிருஷ்ணன் என்பவர் இயக்குகிறார்.

கதாநாயகனாக ஒப்பந்தமான யோகிபாபு

தற்போது ஏராளமான படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் யோகிபாபு. திரையில் அவரைக் கண்டாலே ரசிகர்கள் சிரிக்கத் தொடங்கி விடுகின்றனர். இப்படி ஒரு வரவேற்பு இருக்கும்போது இயக்குநர்கள் சும்மா இருப்பார்களா? வடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் இவரையும் ஒரு படத்தில் நாயகனாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த நல்ல காரியத்தைச் செய்திருப்பவர் ‘டார்லிங்’ படத்தை இயக்கிய சாம் ஆண்டன். இது முழுநீள நகைச்சுவைப் படமாம். கதையைக் கேட்டபிறகு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் யோகிபாபு. இதில் அவருக்குத் தனியார் நிறுவனப் பாதுகாப்பு அதிகாரி வேடமாம்.

ஆனந்தியின் ஆசை நிறைவேறியது

தன்னுடைய ஆசையை நிறைவேற்றி வைத்த இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மனமார்ந்த நன்றி என்கிறார் ‘கயல்’ ஆனந்தி. அப்படி என்ன ஆசையாம்? பெரிதாக ஒன்றுமில்லை. தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்துக்குத் தாமே பின்னணிக் குரல் கொடுக்கவேண்டும் என விரும்பியுள்ளார் ஆனந்தி. அதை மாரி ஏற்றுக்கொண்டாராம். அதற்குத்தான் இந்த நன்றி தெரிவிப்புப் படலம். ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். இதன் சிறப்புக் காட்சியைப் பார்த்த திரையுலகப் புள்ளிகள் அனைவருமே இயக்குநரை வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள். படத்தில் நடிக்கத் தொடங்கியபோது என்ன நடக்கிறது என்று ஆனந்திக்கு ஒன்றுமே புரியவில்லையாம்.

புகைப்படக் கலைஞராக ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘கா’. இது முழுக்க முழுக்க நாயகியை முன்னிலைப்படுத்தும் கதையாம். முழுப் படத்தையும் வனப்பகுதியில் படமாக்கி உள்ளனர். முதல்முறையாக இதில் புகைப்படக் கலைஞராக நடிக்கிறார் ஆண்ட்ரியா. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் நாஞ்சில். தற்போது அந்தமான், மூணாறு, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரஞ்சித்: எனக்குத் திருப்தியளித்த திரைப்படம்

தத்துவம் என்பது நமக்கு முன் னால் உறுதியாக வாழ்ந்து காட்டி யவர்களிடம் இருந்தே பிறக்கிறது என்றும் அந்த வகையில் அம்பேத்கர் மட்டுமே தமக்கு முன்னோடி என்றும் இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார். அவரது சொந்தப் பட நிறுவனம் சார்பில் உருவாகி உள்ளது ‘பரி யேறும் பெருமாள்’. இப்படக்குழு வினர் நேற்று முன்தினம் செய்தி யாளர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வில் பேசிய ரஞ்சித், அம்பேத்கர் இழுத்து வந்த தேரை முன்னோக்கி இழுத்துச் செல்வதே தமது பணி என்றார். அந்தப் பணிக்கான தொடக்கமே இந்தப் படம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆத்மிகா: அடம்பிடிக்க மாட்டேன்

தமிழ்த் திரையுலகம் தாம் எதிர்பார்த்த அளவுக்கு ஆரோக் கியமாக இல்லை என்கிறார் இளம் நாயகி ஆத்மிகா. திறமையை நிரூபிக்கும் வரை நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என்றும் அண்மைய பேட்டியில் கூறியுள்ளார்.

“”பெரிய நாயகிகள் என்றால் அவர்களுக்கான வரவேற்பு பலமாக இருக்கிறது. ஆனால் வளரும் நடிகைகளுக்கு அப்படி இல்லை. அதற்காக புதுமுகங்களுக்கு அறவே மரியாதை இல்லை என்று சொல்லமாட்டேன். படத்துக்குப் படம் எல்லாமே மாறுபடுகிறது. அந்த வகையில் நாம் என்ன மாதிரியான படங்களில் நடிக்கிறோம் என்பது முக்கியம்.

பாராட்டு மழையில் நயன்தாரா

நயன்தாரா தமிழ்த் திரையில் நம்பர் 1 கதாநாயகியாக வலம் வருகிறார். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’, ‘இமைக்கா நொடிகள்’ படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக சம்பளத்தை ஏற்றியதாக தகவல் வந்தாலும் இன்னொரு நல்ல தகவலும் வந்திருக்கிறது. ‘இமைக்கா நொடிகள்’ பட வெளியீட்டின்போது அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்குச் சிக்கல் எழுந்தது. படத்தை வெளியீடு செய்வதற்கு பணப் பிரச்சினைக்கு ஆளானார்.

Pages