You are here

திரைச்செய்தி

சாதாரண மனிதன் ‘பேரன்பு’ கொண்டவனாக மாறும் கதை

ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேரன்பு’ ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. தாம் சொல்ல நினைக்கும் கருத் துக்களை ஆணித்தரமாகத் திரையில் வெளிப்படுத்துவது ராமின் வழக்கம். அந்த வகையில் ‘பேரன்பு’ படமும் பெரிதும் விவாதிக்கப்படும் படைப்பாக உருவாகி உள்ளதாம். இப்படத்தில் மம்முட்டி, அஞ்சலி, சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, ‘தங்க மீன்கள்’ சாதனா, திருநங்கை அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங் களை ஏற்றுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். “இப்படத்தின் நாயகன் எல்லோ ரையும் போல் சுயநலமுள்ள சாதார ணமான மனிதன். அவர் எப்படி பேரன்பு கொண்டவராக மாறுகிறார் என்பதுதான் கதை.

சமந்தா எடுத்துள்ள புது முடிவு

சமந்தா நடித்து முடித் துள்ள இரு படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளன. எதிர்வரும் செப்டம்பர் 13ஆம் தேதி ‘யு டர்ன்’, ‘சீமராஜா’ ஆகிய இரு படங்களும் வெளியாக இருப்பது தமக்குக் கூடுதல் உற்சாகம் அளித்திருப்பதாகச் சொல்கிறார் சமந்தா. ஒரே சமயத்தில் இரு படங்கள் வெளியாவது தமக்கு ராசியாக உள்ளது என்றும் சொல்கிறார். “யு டர்ன்’ படத்தில் செய்தியாளராக நடித்துள்ளேன்.

திஷா பாண்டே மனநிறைவுடன் நடித்துள்ள தமிழ்ப் படம்

பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சி னைகளை அலசும் படமாக உருவாகி உள்ளது ‘கொம்பு’. இதில் நாயகியாக நடித்துள்ளார் திஷா பாண்டே. இவர் ‘தமிழ்ப் படம்’ முதல் பாகத்தில் நடித்தவர். “பெண்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தும் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி தருகிறது. பிரச்சினைகளை மட்டும் சொல்லாமல் அவற்றுக்குரிய தீர்வுகள் குறித்தும் பேசும் படமாக உருவாகி இருப்பதில் கூடுதல் மன நிறைவு,” என்கிறார் திஷா. இப்படத்தில் நகைச்சுவை, திகில் என இதர அம்சங்களும் உள்ளனவாம். பட நாயகன் ஜீவா தமக்கு நல்ல பல ஆலோசனைகளை அளித்து உதவிய தாகவும் குறிப்பிடுகிறார் திஷா.

புதுக்கூட்டணி அமைக்கும் நரேன், சிம்பு

‘நரகாசூரன்’ படத்தை முடித்த கையோடு அடுத்த படைப்பில் கவனம் செலுத்தத் துவங்கி விட்டார் இளம் இயக்குநர் கார்த்திக் நரேன். இவர் ‘துருவங்கள் 16’ மூலம் தமிழ் ரசிகர் களின் கவனத்தை ஈர்த்தவர். இந்நிலையில் இவரது அடுத்த படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சிம்புவுடன் பேசி வருவதாக கார்த்திக் நரேனும் கூறியுள்ளார். இருவரும் அண்மையில் சந்தித்துப் பேசியபோது நிறைய கருத்துக்களை, யோசனைகளைப் பரிமாறிக் கொண்டனராம். தாம் இயக்குவதற்காகத் தேர்வு செய்து வைத்துள்ள சில கதைகளைக் கார்த்திக் நரேனிடம் சிம்பு விவரித்தாராம். பதிலுக்கு நரேனும் தன் கைவசம் உள்ள சில யோசனைகளை முன்வைத்துள்ளார்.

டிடிவி தினகரனை ஆதரிப்பேன் - பிரியா பவானி சங்கர்

அரசியல் என்பது இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படம் அல்ல என்கிறார் இளம் நாயகி பிரியா பவானி சங்கர் (படம்). நடிகர்கள் ரஜினியும் கமலும் மிகப்பெரிய நடிகர்கள் என்பதால் அவர்களை நம்பவேண்டும் என்கிற அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரஜினி, கமல் இருவரும் தங்கள் அரசியல் பிரவேசத்தை அறிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின் றனர். இந்நிலையில் அவர்களின் அரசியல் நடவடிக்கைகள் குறித்துத் திரையுலகைச் சேர்ந்த சக கலைஞர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

கடத்தப்படும் வரலட்சுமி: மீட்கப் போராடும் சத்யராஜ்

'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்ற வித்தியாசமான தலைப்பில் புதுப்படம் ஒன்று உருவாகி வருகிறது. மணிரத்னம், ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோரிடம் உதவியா ளராகப் பணியாற்றிய சர்ஜுன் இப் படத்தை இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே ‘மா’, ‘லஷ்மி’ ஆகிய குறும்படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர். அவை இரண் டுமே தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த படைப்புகள்.

சேதுபதி: சிவாவுடன் போட்டி இல்லை

சிவகார்த்திகேயனுடன் தமக்கு எந்தவிதமான போட்டியும் இல்லை என்கிறார் விஜய் சேதுபதி. இதுவரை சிவாவுடன் நெருங்கிப் பழகியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அண்மைய பேட்டி ஒன்றில், எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித், தனுஷ் - சிம்பு ஆகிய இணைகளின் வரிசையில் தற்போது சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி என்ற இணை உருவாகி இருக்கிறதே? என்று சேதுபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’

வி.மதியழகன், ரம்யா தயாரித்துள்ள படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’. மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ளார். ‘திலகர்’ துருவா நாயகனாக நடிக்க, பிக் பாஸ்’ புகழ் ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா நாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், மனோபாலா, மைம் கோபி, அருள்தாஸ் எனப் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கி உள்ளனர். அச்சு இசையமைத்துள்ளார். தமிழகத்தில் அதிகரித்து வரும் சங்கிலிப் பறிப்புச் சம்பவங்களை மையப்படுத்தி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்படத்தை உருவாக்கி இருப்பதாகச் சொல்கிறார் ராகேஷ். “இந்தப் படத்துக்கு தணிக்கைத்துறை சான்றிதழ் கொடுக்க மறுத்தது.

‘ஆண்களுக்கு ஈடாக பெண்களுக்கு மரியாதை கிடைப்பது இல்லை’

நடிகை ராய்லட்சுமி கதாநாயகியாக அறிமுகமானாலும் ஒரு சில படங்களில் மட்டுமே அவரால் அந்த அந்தஸ்தைத் தக்கவைக்க முடிந்தது. நடிப்பைவிட அவரது கவர்ச்சிக்கு மட்டுமே இயக்குநர் களால் முக்கியத்துவம் தரப்பட்டது. நடிப்புத் திறமை கைகொடுக்கா விட்டாலும் கவர்ச்சி கைவிடாததால் அதை ஏற்றுக்கொண்டு தற்போது கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை ஒரு சுற்று வருகிறார். ‘நீயா 2’ஆம் பாகம் உள்ளிட்ட 4 படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

‘எளிமையான பெண் நான்’

சாயிஷா மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்படுகிறார். அந்த மகிழ்ச்சிக்குக் காரணம் அவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்திருக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘ஜுங்கா’ படங்கள்தான். மும்பைவாசியான சயிஷா தற்பொழுது சென்னையில் குடிகொண்டு இருக்கிறார். அதனால் சென்னைவாசிகள் மீது மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் இருக்கிறார். ‘கடைக்குட்டிச் சிங்கம்’ படத்தில் நடித்த பிறகு தமிழ்நாட்டு மக்களின் மீது அன்பு அதிகமாகி இருக்கிறது.

Pages