You are here

திரைச்செய்தி

தயாரிப்பாளராக மாறும் கதாநாயகி

காஜல்

நடிகை காஜல் அகர்வால் அடுத்து தயாரிப்பாளராக அவதாரம் எடுக்க உள்ளார். இனி தான் நடிக்க இருக்கும் படங்களைத் தொடர்ந்து தயாரிப்பதே அவரது திட்டம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அண்மைக்காலமாக கதாநாயகி களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிப்பதையே முன்னணி நாயகிகள் விரும்புகின்றனர். ஆனால், அத்தகைய படங்களைத் தயாரிக்க பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் நடிகைகளே அத்தகைய கதைகளைத் தயாரிக்க முன்வர வேண்டியுள்ளது. அந்த வகையில் நயன்தாரா, சமந்தா வரிசையில் காஜலும் தயாரிப்பாளராக முடிவு செய்துள்ளாராம்.

வெங்கட்பிரபு, சிம்புவின் புதுக் கூட்டணி

சிம்புவும் வெங்கட் பிரபுவும் இணைந்து புதிய படத்தை வழங்க உள்ளனர். இதை ‘வி ஹவுஸ் புரொடக்‌‌ஷன்ஸ்’ சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ளார். கதாநாயகி யாரென்பது முடிவாகவில்லை. மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வும் நடைபெற்று வருகிறது. பெயரிடப்படாத இப்படத்தை அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. இதற்கிடையே மணிரத்னம் இயக்கி உள்ள ‘செக்கச்சிவந்த வானம்’ விரைவில் வெளியீடு காண உள்ளது.

‘மிஸ்டர் சந்திரமௌலி’

‘மிஸ்டர் சந்திரமௌலி’ படக்குழுவினர்.

‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தில் கவுதம் கார்த்திக் மிகவும் சிரமப்பட்டு நடித்தார் என்கிறார் நடிகர் சதீஷ். இப்படக்குழுவினர் நேற்று முன்தினம் சென்னையில் செய்தி யாளர்களைச் சந்தித்தனர். அப் போது பேசிய சதீஷ், கவுதமை நன்றாகவே சீண்டினார். அவரது பேச்சால் அரங்கில் தொடர்ந்து சிரிப்பலை எழுந்தது. “இயக்குநர் திரு பேசும்போது கவுதம் கார்த்திக் பல படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் இன்னும் சிறப்பாக நடித்திருக்கி றார் என்றார். அதை நான் ஏற்கமாட்டேன்.

‘செம போத ஆகாதே’

அதர்வா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘செம போத ஆகாதே’. படத்தின் நாயகனும் இவர்தான். பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். மிஷ்டி, அனைகா சோதி என இரு நாயகிகள் உள்ளனர். அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக், ஆடுகளம் நரேன், யோகி பாபு, கும்கி அஸ்வின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

நலமாக உள்ளேன்: தனுஷ் விளக்கம்

2018-06-26 06:12:00 +0800

தாம் நலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் தனுஷ். எதற்காக இப்படியொரு விளக்கம் என்கிறீர்களா? வேறொன்றுமில்லை... படப்பிடிப்பின்போது தனு‌ஷுக்கு அடிபட்டதாகவும் அவர் படுகாயமடைந்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியது. ‘மாரி-2’க்காக நடைபெற்ற படப்பிடிப்பின்போது தனு‌ஷுக்கு அடிபட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் தனக்குப் பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் ரசிகர்களின் பிரார்த்தனைக்கும் அன்புக்கும் நன்றி என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தனுஷ். “என் பலத்தின் தூண்களாகிய உங்களை மிகவும் நேசிக்கிறேன்,” என்றும் தனுஷ் தமது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

கைத்தொலைபேசியை வழிப்பறிக் கொள்ளையனிடம் பறிகொடுத்த சஞ்சனா

பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் சாலையில் தனியே செல்லும்போது மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் என்கிறார் நடிகை சஞ்சனா சிங். அவருக்குக் கிடைத்துள்ள அனுபவம் இப்படிச் சொல்ல வைத்திருக்கிறது. என்ன நடந்தது? சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வரும் சஞ்சனா நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் உடற்பயிற்சிக்காக சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

வன்முறைக்கு வழிவகுக்கும் விருப்பம்

‘ப்ரியமுடன்’ படத்தில் வித்தியா சமான கதாபாத்திரத்தில் விஜய்யை நடிக்க வைத்தவர் இயக்குநர் வின்சென்ட் செல்வா. அதன் பிறகு ‘யூத்’ உட்பட ஏரா ளமான படங்களை இயக்கியவர். தற்போது இவரது இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு ‘பத்து செகண்ட் முத்தம்’ என்று வித்தி யாசமான தலைப்பு வைத்துள்ளார். இப்படத்தில் சரிஷ் நாயகனாக வும் கீதா நாயகியாகவும் நடித் துள்ளனர். ‘மிஸ்டர் இந்தியா’ பட் டம் பெற்ற சீனிவாசனை வில்ல னாக்கி உள்ளனர்.

மாறுபட்ட கதைக்களங்களில் நடிக்க விரும்பும் கார்த்தி

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதுப்படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. சாயிஷா நாயகியாக நடிக்கிறார். இது விவசாயத்தின் மேன்மையை மேலும் உயர்த்திப்பிடிக்கும் படமாம். இந்தக் கதையில் சிவகார்த்திகேயனை நடிக்க வைப்பதே பாண்டிராஜின் திட்டமாக இருந்ததாம். ஆனால் சில பிரச்சினைகள் காரணமாக அவரால் கால்‌ஷீட் ஒதுக்க முடியாமல் போக, கார்த்தியை அணுகினாராம் பாண்டிராஜ். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற விறுவிறுப்பான படத்தில் நடித்து முடித்திருந்த கார்த்தியும் அந்தச் சமயத்தில் முற்றிலும் மாறுபட்ட வேறொரு கதைக்காகக் காத்திருந்த நேரம் அது.

‘களவாணி 2’

‘களவாணி’ படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு அதே படத்தின் இரண்டாம் பாகத்தை பரபரப்பாக இயக்கி வருகிறார் இயக்குநர் சற்குணம். முதல் பாகத்தில் நடித்த அதே நடிகர்களை வைத்தே இதையும் எடுத்து வருகிறார். சூரி மட்டும் இரண்டாம் பாகத்தில் தலைகாட்டவில்லை. அவருக்குப் பதிலாக ஆர்ஜே பாலாஜி நடிக்கிறார். விமல், - ஓவியா ஜோடி சேர்ந்திருப்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஜோடியை வைத்து அண்மையில் படமாக்கிய ‘ஒட்டாரம் பண்ணாதே...’ பாடல் மிகவும் சிறப்பாக வந்திருப்பதாக படக்குழுவினர் சொல்கிறார்கள்.

சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த சாயிஷா

முதன்முறையாக சூர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் இளம் நாயகி சாயிஷா. கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்க உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வரும் ‘என்ஜிகே’ முடிவடைந்த கையோடு ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சாயிஷா ஒப்பந்தமாகி உள்ளதாக முன்பே தகவல் வெளியான போதிலும் அது உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் சாயிஷா நடிப்பது உறுதி என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாயிஷா நம்ம சூர்யாவின் தீவிர ரசிகையாம்.

Pages