You are here

திரைச்செய்தி

‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தை வெளியிடத் தடை

‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் அப்படக்குழுவினர் வருத்தத்தில் உள்ளனர். இதில் கவினும், ரம்யா நம்பீசனும் ஜோடி சேர்ந்துள் ளனர். எதிர்வரும் 27ஆம் தேதி இப்படம் திரைகாண இருந்தது. இந்நிலையில் திரைப்பட விநியோகிப்பாளர் மலேசியா பாண்டியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இப்படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையைப் படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தரிடம் இருந்து தாம் பெற்றதாகவும் இதற்காகப் பல கட்டங்களாக ரூ.25.20 லட்சம் தந்ததாகவும் பாண்டியன் தெரிவித்துள்ளார். “ஆனால் திட்டமிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் திருமணம்

கேத்ரின் தெரசாவிற்கு பலர் காதல் கடிதங்கள் மூலமாகவும் நேரிலும் காதலிப்பதாகக் கூறுகிறார்களாம். ஆனால் ஐந்து ஆண்டுகள் கழித்துதான் திருமணம். அதுவரை காத்திருக்கவேண்டும் என்று கூறுகிறார் கேத்ரின் தெரசா. கார்த்திக் ஜோடியாக ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்துப் பிரபலமானவர் கேத்ரின் தெரசா. ‘கதகளி’, ‘கணிதன்’, ‘கடம்பன்’, ‘கதாநாயகன்’, ‘கலகலப்பு–2’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் நடிப்பதற்கு முன்பு இவர் தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து வந்தார். இவர் துபாயில் பிறந்து வளர்ந்தவர். பள்ளிப் படிப்பை துபாயில் முடித்தார். இந்தியா வந்து கல்லூரி படிப்பைப் பெங்களூரில் முடித்தார்.

தோசைக்கல்லால் அடித்து இயக்குநருக்கு நெற்றியில் காயம் விளைவித்த அஞ்சலி

அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் பேய் படத்தின் பெயர் ‘லிசா’. இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜூ விஸ்வநாத் இயக்குகிறார். இப்படத்தின் சண்டை காட்சிகள் நேற்று முன்தினம் சென்னையில் படமாக்கப்பட்டன. கதையின் படி, பேய் வேடத்தில் நடித்து வரும் அஞ்சலி, தோசைக் கல்லை புகைப்படக் கருவி முன்பு வீசவேண்டும்.

ஆஷ்னாவை ஆவேசமாக அணைத்த விமல்

விமல் நடிப்பில் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படம் உருவாகி வருகிறது. படத்தில் கதாநாயகனாக நடிக்கும் விமலுக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். விமல் வெட்க சுபாவம் உடையவர். காதல் காட்சிகளில் அதிக நெருக்கம் காட்டமாட்டார். ஆனால் ஒரு காதல் காட்சியில் புகுந்து விளையாடவேண்டும் என்று இயக்குநர் கேட்டிருக்கிறார். அதற்கு சம்மதம் தெரிவித்தார் விமல். ஆஷ்னா சவேரியும் தூக்கலான கவர்ச்சி காட்சியில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறாராம். அதன் வெளிப்பாடு காதல் பாடல் காட்சியில் கட்டிப்பிடிக்கும் காட்சியில் விமல், ஆஷ்னா போதும் போதும் என்கிற அளவுக்கு நெருக்கமாக கட்டியணைத்து நடித்தாராம்.

‘அனுஷ்கா - பிரபாஸ் அழகான ஜோடி’

‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றிக்குப் பல ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றிக்குப் பல காரணங்கள் இருந்தாலும் அந்தப் படத்தில் பொருத்தமான ஜோடி யாக இருந்த பிரபாஸ், அனுஷ்கா இருவரும் முக்கிய காரணம். பிரபாஸ் வீரமான ஆண் மகனாய் வலிமையுடன் அசத்த, அனுஷ்கா வீரத்துடனும் அழகுடனும் ஜொலித்தார். அவர் களைப் பற்றி ‘பாகுபலி’ காலத்தி லிருந்தே காதல் வதந்தியும் திருமண வதந்தியும் வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் அனுஷ்காவின் அம்மா அந்தப் பொருத்தமான ஜோடி பற்றி அவரது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

‘விஜய்யின் அமைதியே அவரின் வெற்றிக்கு காரணம்’

நடிகர் விஜய்யின் வெற்றிக்குக் காரணம் அவரது அமைதிதான் என்று புகழ்ந்திருக்கிறார் இசை யமைப்பாளர் கார்த்திக். அண்மைக்காலங்களில் நடிகர் விஜய்யின் படம் அவ்வளவு எளிதாக வெளியீடு ஆவது இல்லை. பல்வேறு பிரச்சினை களைச் சந்திக்கிறது. ஆனாலும் அவற்றுக்கெல்லாம் அசராமல் எதிர்கொண்டு வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கிறார்.

வெட்கப்படுவதாக சொல்லும் கஸ்தூரி

சென்னையில் பள்ளிச் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சி அளித்திருப்பதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில், தமிழகத்திலோ அல்லது ஒட்டுமொத்த இந்தியாவிலோ பெண்களால் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்திலுள்ள எல்லா ஆண்களும் மோசமானவர்களா?

‘நாடோடி கனவு’ - இளம் ஜோடியால் ஊரையே காலி செய்யும் மக்கள்

மகேந்திரன், சுப்ரஜா ஜோடி சேர்ந்துள்ள படம் ‘நாடோடி கனவு’. வீரசெல்வா இயக்குகிறார். “பொதுவாக கிராமங்களில் யாராவது தவறு செய்தால் ஊரை விட்டு வெளியேற்றுவார்கள். ஆனால் இந்தக் கதையில், ஓர் இளம் ஜோடியால் ஊர் மக்கள் அனைவரும் ஊரை விட்டே வெளியேறுகிறார்கள். அது ஏன் என்பதை விறுவிறுப்பாக விவரிக்க உள்ளோம்,” என்கிறார் வீரசெல்வா.

இனி எல்லா இயக்குநர்களுக்கும் ராம்தான் குரு: அமீர் பேச்சு

‘பேரன்பு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா எளிமையாக அதே சமயம் திரைப் பிரமுகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நடைபெற்றது. ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, ‘தங்க மீன்கள்’ சாதனா ஆகியோரின் நடிப்பில் உருவாகி உள்ளது இப்படம். பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை வாங்கிக் குவித்து வருகிறது.

அமலாவின் அடுத்த கவர்ச்சி வலம்

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ வெற்றிப் படமா என்பது தெரியவில்லை. எனினும் அதில் குடும்பப்பாங்காக நடித்திருந்த அமலா பால் மீண்டும் கவர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளார். ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ குடும்பச் சித்திரம் என்பதால் இடையில் சில காலம் சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சிப் படங்களை வெளியிடாமல் இருந்தார் அமலா. இப்போது மீண்டும் அவரது கவர்ச்சிப் படங்கள் சமூக வலைத்தளங்களில் உலா வரத் தொடங்கிவிட்டன. இதைக் கண்டு கிறங்கிப் போன ரசிகர்கள் அவரது அண்மைய கவர்ச்சிப் படத்தைப் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர். தற்போது விஷ்ணு விஷால் ஜோடியாக ‘ராட்சசன்’ படத்தில் நடிக்கிறார் அமலா.

Pages