You are here

திரைச்செய்தி

அஜித்துடன் நடிக்க விரும்பும் அருண்விஜய்

வில்லனாக நடிக்கவும் அருண் விஜய் தயாராகி சில ஆண்டுக ளாகி விட்டது. முதலில் ’என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துடன் மோதியவர் தற்போது தெலுங்கு நாயகர்களுக்கும் வில்லனாகி உள்ளார். இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில் அஜித்தின் அன் பான பேச்சும் பெருந்தன்மையும் தன்னை வெகுவாகக் கவர்ந்த அம்சங்கள் என்று கூறியுள்ளார் அருண் விஜய்.

கதாநாயகியை மையப்படுத்தும் கதை

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிப்பதையே தற்போது பெரும்பாலான நடிகைகள் விரும்புகின்றனர். அப்படி ஒரு வாய்ப்பு சமந்தாவுக்கும் அமைந்துள்ளது. தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரிசாயா என்பவர் படம் ஒன்றை இயக்குகிறார். அதில் நடிக்க சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். படத்தின் திரைக்கதை யைக் கேட்ட அடுத்த நிமிடமே சம்மதம் தெரிவித்தாராம் சமந்தா. இது முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் படமாம். ஆகஸ்டு மாதமே படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அநேகமாக ஆண்டு இறுதிக்குள் படம் தயாராகிவிட வாய்ப்புள்ளது.

‘நல்லவராக நடிப்பது போரடிக்கிறது’

‘வழக்கு எண்’ படத்தில் நடித்த ரித்திகா சீனிவாஸ் அடுத்து ‘டிக் டிக் டிக்’ படத்தில் ராணுவ அதிகாரியாக மிரட்டியுள்ளார். இந்தக் கதாபாத்திரத்துக்காக 6 கிலோ எடை குறைந்துள்ளாராம். “விண்வெளியை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் இந்தியத் திரை ரசிகர்களுக்கு மிகவும் புதிது. இனி இது போன்ற படங்கள் நிறைய வெளிவரும். தற்போது வில்லி கதாபாத்திரங்களில்தான் அதிகம் நடித்து வருகிறேன். உண்மையில் இத்தகைய வேடங்களில் எனக்கு விருப்பம் அதிகம்.

மேலும் செய்திகள்

கதாபாத்திரங்களை ஆராயும் காஜல்

காஜல் அகர்வால்

எந்த ஒரு படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு முன் தனக்கான கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதை நன்கு ஆராய்வதே தனது முதல் வேலையாக இருக்கும் என்கிறார் காஜல் அகர்வால். தவிர, கதையை முழுமையாகக் கேட்ட பிறகே முடிவெடுப்பாராம். “கனவு கதாபாத்திரம் என எனக்கு எதுவும் இல்லை. என்னைப் பொறுத்தவரை காஜலிடம் எந்தக் கதாபாத்திரத்தை ஒப்படைத்தாலும் நன்றாக நடிப்பார் என்று பெயரெடுக்க வேண்டும். அதுமட்டுமே என் மனதில் உள்ளது.

தீபாவளிப் போட்டியில் களமிறங்கும் விஷாலின் ‘சண்டக்கோழி 2’

எதிர்வரும் தீபாவளிக்கு நான்கு பெரிய படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் நடிக்கும் ‘தளபதி 62’, அஜீத்தின் ‘விசுவாசம்’, சூர்யாவின் ‘என்ஜிகே’ ஆகியவை தீபாவளிக்கு வெளியாவது உறுதி என சம்பந்தப்பட்ட படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் விஷாலும் தீபாவளிப் போட்டியில் களம் இறங்கியுள்ளார். அவர் தற்போது நடித்து வரும் ‘சண்டக்கோழி-2’ படம் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்புள்ளதாம். இதில் கீர்த்தி சுரே‌ஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார் விஷால். லிங்குசாமி இப்படத்தை இயக்குகிறார். முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் அதிரடி சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளனவாம்.

இதுவே எனது அடையாளம் - ஸ்வேதா திரிபாதி

சரவணன் ராஜேந்திரன் இயக்கும் பெயரி டப்படாத படத்தின் மூலம் கோடம்பாக் கத்தில் கால் பதிக்கிறார் ஸ்வேதா திரிபாதி. இந்தியில் இவர் நடித்த ‘மாஸான்’ படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், சில விருதுகளையும் பெற்றி ருப்பதால் பாலிவுட்டில் கவனிக்கத் தக்க நட்சத்திரமாக உருவெடுத்துள் ளார் ஸ்வேதா. கோடம்பாக்கம் பிடித்திருக்கிறதா என்று கேட்டால், “ரொம்பவே பிடித்திருக்கிறது,” என்று தெளிவாகவும் வேக மாகவும் பதில் வருகிறது. “பொதுவாக என் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதைக் கொண்டே எதிலும் நான் முடிவெடுப்பேன்.

வெங்கட் பிரபுவின் ‘ஜருகண்டி’

வங்கியில் கடன் பெற்று, அதன் சுமை தாங்காமல் அவதிப்படும் இளையர் வேடத்தில் நடித்துள்ளார் ஜெய். படத்தின் பெயர் ‘ஜருகண்டி’. இது வேறொரு படத்துக்காக இயக்குநர் வெங்கட்பிரபு தேர்வு செய்து வைத்திருந்த தலைப்பாம். அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிச்சுமணி, தனியாக ஒரு படத்தை இயக்குவது தெரிய வந்ததும், இந்தத் தலைப்பை தாமே முன்வந்து விட்டுத் தந்துள்ளார். ‘ஜருகண்டி’யை தயாரிப்பது நடிகர் நிதின் சத்யா. சொந்தப் படத்தில் தனது நண்பரையே நாயகனாக்கி உள்ளார்.

ஜூலை 13ல் வெளியாகும் ‘தொட்ரா’

மதுராஜ் இயக்கியுள்ள படம் ‘தொட்ரா’. நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் கதாநாயகனாக நடிக்க, கேரளாவைச் சேர்ந்த வீணா கதாநாயகியாக நடித்துள்ளார். உத்தமராஜா இசையமைக்க, செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். “ஒரு தாயைப் போல சினிமாவை நேசித்ததால்தான் என்னால் இவ்வளவு வேகமாக, ஒரு தரமான படத்தை எடுக்க முடிந்தது. கட்டப் பஞ்சாயத்துகள் காரணமாக அதிகம் பாதிக்கப்படுவது காதலர்கள்தான் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளோம்,” என்கிறார் மதுராஜ்.

வாழ்க்கை மாறவில்லை - பிரியா

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் வெளி யீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார் பிரியா பவானி சங்கர். படத்தில் இவரது பெயர் பூங்குழலி செல்லம்மா. அழகான தமிழ்ப் பெயரைக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிடும் பிரியாவுக்கு இதில் நாயகன் கார்த்தியின் மாமன் மகள் வேடம். படம் முழுவதும் “மாமா...மாமா...” என்று கார்த்தியை சுற்றிச் சுற்றி வருவாராம். சின்னத் திரையில் இருந்து சினிமாவில் கால் பதித்ததால் தனது வாழ்க்கை அடி யோடு மாறிவிட்டதாக நினைக்கவேண்டாம் என்று சிரித்தபடியே சொல்பவர், தொலைக் காட்சி தொடர்களில் நடித்தபோது குடி யிருந்த அதே வீட்டில்தான் இப்போதும் வசிப்பதாகச் சொல்கிறார்.

ஜோதிகா: நான் கண்டிப்பான தாய்

ஜோதிகா

தாம் ஒரு கண்டிப்பான தாயாக நடந்து கொள்வதாகக் கூறுகிறார் ஜோதிகா. அதேசமயம் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதில் தம்மைவிட, கணவர் சூர்யாதான் சிறந்தவர் என்றும் பாராட்டுகிறார். “பெண்களுக்கு முக்கியத்துவ ம் தரக்கூடிய, நன்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கதைகளாக இருந்தால் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வந்து நடிக்கிறேன். அந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாகவும் கதாபாத்திரமாகவும் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பதில் தவறில்லை. “குழந்தைகளைக் கவனிப்பதில் என் கணவரே சிறந்தவர். ஏனெனில் அவர்கள் என்ன விரும்புகிறார்களோ, அதைச் செய்ய விடுவார்.

Pages