You are here

விளையாட்டு

ஐந்து ஆட்டங்கள் ஒத்திவைப்பு

பாரிஸ்: பாதுகாப்புக் காரணங் களுக்காக தொடர்ந்து இரண்டா வது வாரமாக பிரெஞ்சு லீக் 1 காற்பந்துப் போட்டிகளில் சில ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு அரசின் கொள்கை முடிவுகளை எதிர்த்து அங்கு போராட்டங்கள் நடைபெற்று வரு கின்றன. அதோடு, அண்மையில் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு களும் காயங்களும் ஏற்பட்டன. இந்த நிலையில், இன்று நடக்கவிருந்த பிஎஸ்ஜி=ஜிஜோன் குழுக்கள் மோதும் ஆட்டம் உட்பட ஐந்து ஆட்டங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இன்றும் நாளையும் நடக்கும் மற்ற ஆட்டங்களின் தொடக்கத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த வர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும்.

முதல் நாள் ஆட்டத்தில் மூவர் அரை சதம்

பெர்த்: இந்திய கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன் னிங்சில் ஆஸ்திரேலிய வீரர்கள் மூவர் அரை சதம் அடிக்க, முதல் நாள் முடிவில் அந்த அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங் களை எடுத்திருந்தது. புதிய பெர்த் ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் எனக் கணிக்கப்பட்டதால் இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சா ளர்களுடன் களமிறங்கியது. காய மடைந்த அஸ்வின், ரோகித் ஆகி யோருக்குப் பதிலாக உமேஷ் யாதவும் ஹனுமா விகாரியும் சேர்க்கப்பட்டனர். முதல் போட்டியில் வெற்றியை இழந்தபோதும் ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப் படவில்லை.

ஹாக்கி: இந்திய அணியின் சோகம் தொடர்கிறது

புவனேஸ்வர்: உலகக் கிண்ண ஹாக்கி போட்டிகளில் இந்திய அணியின் சோகம் தொடர்கிறது. காலிறுதி ஆட்டத்தில் மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 1=2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோற்றுப்போனது. இதனால் 43 ஆண்டுகளுக்குப் பின் கிண்ணம் வென்று பெருமை சேர்க்கும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. பதினான்காவது முறையாக நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டிகளில் 16 அணிகள் நான்கு பிரிவுகளாக இடம்பெற்றன. ‘சி’ பிரிவில் பெல்ஜியம், கனடா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பிடித்திருந்த இந்திய அணி, அம்மூன்று அணிகளையும் வெற்றி கொண்டு நேரடியாகக் காலிறுதிக் குள் நுழைந்தது.

ஆர்சனல், செல்சி முன்னேற்றம்

லண்டன்: யூரோப்பா லீக் காற்பந்தின் அடுத்த சுற்றுக்கு செல்சி, ஆர்சனல் குழுக்கள் தகுதிபெற்று உள்ளன. இவ்விரு குழுக்களும் முதல் சுற்று ஆட்டங்களில் தோல்வியே காணாமல் 16 புள்ளிகளுடன் தத்தமது பிரிவுகளில் முதல் இடத்தைப் பிடித்தன. அஸர்பைஸானின் கரபா குழுவிற்கு எதிராக நேற்று அதி காலை நடந்த ‘இ’ பிரிவு ஆட்டத் தில் அலெக்சாண்டர் லாக்கஸெட் அடித்த ஒற்றை கோலால் 1-0 என்ற கணக்கில் ஆர்சனல் வெற்றி பெற்றது. ‘எல்’ பிரிவில் இடம்பெற்ற செல்சி, ஹங்கேரியின் எம்ஓஎல் வீடி குழுவுடன் மோதியது. முற் பாதி ஆட்டம் 1-1 என முடிந்த நிலையில், இரண்டாம் பாதியின் 11வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலை அடித்து முன்னிலை பெற்றது வீடி குழு.

மொரின்யோ: கிண்ணம் வெல்வதே முக்கியம்

லிவர்பூல்: யர்கன் கிளோப் 2015ஆம் ஆண்டில் நிர்வாகியாகப் பதவியேற்றதில் இருந்து லிவர்பூல் காற்பந்துக் குழுவின் செயல்பாட் டில் நல்ல முன்னேற்றம் காணப் படுகிறது. கடந்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக்கின் இறுதிச் சுற்று வரை சென்ற அக்குழு, இப்போது இங்கிலிஷ் பிரிமியர் லீக் புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளது. நடப்பு இபிஎல்லில் வெல்ல முடியாததாகத் திகழ்ந்து வரும் ஒரே குழுவும் லிவர்பூல்தான்.

ஐரோப்பா லீக்: இங்கிலிஷ் குழுக்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி

ஐரோப்பா லீக்: இன்று அதிகாலையில் நடந்த ஐரோப்பா லீக் தகுதிச் சுற்று ஆட்டங்களில்  ஆர்சனல் குழு 1-0 என்ற கோல் கணக்கில் ஃப்கே கரபாக் (FK Qarabag) குழுவை வென்றது.

இந்த வெற்றியின் மூலம் இதுவரையில் எந்த தோல்வியையும் காணாது 'இ' பிரிவு பட்டியலில் முதலிடம் வகித்து அது போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறுகிறது.

மற்ற ஆட்டங்களில், அதே போன்று செல்சி அணி இதுவரையில் எந்த தோல்வியையும் தழுவாது 'எல்' பிரிவு பட்டியலின் உச்சத்தில் தன் நிலையை தக்கவைத்துக் கொண்டது.

அது விடி (vidi) குழுவுடன் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது.

மான்செஸ்டர் சிட்டியை காப்பாற்றிய லிரோய் சானே

சாம்பியன்ஸ் லீக் ‘எஃப்’ பிரிவு ஆட்டமொன்றில் நேற்று அதிகாலை மான்செஸ்டர் சிட்டியும் ஹோஃபன்ஹைம் குழுவும் மோதின. இதில் ஆட்டத்தின் 16ஆம் நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பின் மூலம் முன்னிலை பெற்ற ஹோஃபன்ஹைம் குழுவை பின்னர் மான்செஸ்டர் சிட்டியின் லிரோய் சானே போட்ட இரு கோல்களால் ஆட்டத்தின் இறுதி யில் 2=1 என்ற கோல் எண் ணிக்கையில் வாகை சூடி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்றைய ஆட்டத்தில் கோல் போடக்கூடிய பல வாய்ப்புகளை சிட்டி குழுவே ஏற்படுத்திய போதும் ஆட்டத்தின் முதல் கோலை என்னவோ ஹோஃபன்ஹைம் குழுதான் போட்டது. அதன் பின்னரே சிட்டி குழு உயிர் பெற்றெழுந்ததாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணியில் அஸ்வின், ரோகித் இல்லை

பெர்த்: ஆஸ்திரேலியாவிற்கு எதி­ரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்­கெட் போட்டியில் விளையாடவுள்ள 13 வீரர்கள் அடங்கிய இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்­வின், ரோகித் சர்மா ஆகியோர் இடம்பெறவில்லை. இப்போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறி­வித்தபோது இது தெரிய வந்தது. காயம் காரணமாக அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

18 வயது மணிப்பூர் வீரர் 10 விக்கெட்டுகள் எடுத்து சாதனை

மணிப்பூர் இளம் வீரர் ரெக்ஸ் ராஜ்குமார் சிங் 10 விக்கெட்டுகள் எடுத்து புதிய சாதனையைப் படைத்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஆனந்தபூரில் நடைபெற்ற கூச் பெஹர் யு=19 போட்டியில் அருணாசல பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 9.5 ஓவர்கள் வீசி 11 ஓட்டங்கள் கொடுத்து எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் ரெக்ஸ் சிங். அருணாச பிரதேச அணி ரெக்ஸ் சிங்கின் அசத்தலான பந்து வீச்சில் இரண்டாவது இன்னிங்ஸில் 36 ஓட்டங் களுக்குச் சுருண்டது. இதை யடுத்து இந்த இலக்கை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது மணிப்பூர் அணி.

விஜய்க்கு இன்னொரு வாய்ப்பு

பெர்த்: இந்திய அணியின் இளம் தொடக்கப் பந்தடிப்பாளர் பிருத்வி ஷா காயத்தில் இருந்து இன்னும் முழுமையாகக் குணமடையாததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவர் இடம்பெறமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நாளை பெர்த் நகரில் தொடங்கவிருக்கும் இரண்டாவது போட்டியிலும் இந்திய அணியின் தொடக்க இணையாக முரளி விஜய்யும் (படம்) லோகேஷ் ராகுலும் களமிறங்குவர் என எதிர்பா ர்க்கப் படுகிறது.

மேலும் செய்திகள்: epaper.tamilmurasu.com.sg

Pages