‘அமெரிக்கா சுறுசுறுப்பான அணி’

அல் ரயான்: உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யின் இரண்­டாம் சுற்­றில் இன்று அமெ­ரிக்­கா­வு­டன் மோத­வுள்­ளது நெதர்­லாந்து. அதை முன்­னிட்டு அமெ­ரிக்­கா­வைப் பாராட்­டிப் பேசி­யுள்­ளார் நெதர்­லாந்து பயிற்­று­விப்­பா­ளர் லூய் வேன் ஹால்.

"அமெ­ரிக்கா மிக­வும் சுறு­சு­றுப்­பாக விளை­யா­டக்­கூ­டிய அணி. அதன் விளை­யாட்­டா­ளர்­கள் ஆட்­டங்­களில் விட்­டுக்­கொ­டுக்­கா­மல் வேகத்­து­டன் விளை­யா­டு­வர்," என்­றார் 71 வயது வேன் ஹால்.

"சிறந்த அணி என்­றால் அதற்கு அமெ­ரிக்கா நல்ல எடுத்­துக்­காட்டு. அந்த அணி­யின் விளை­யாட்­டா­ளர்­கள் பலர் சிறந்த ஐரோப்­பிய குழுக்­களில் விளை­யா­டு­கின்­ற­னர். அத­னால் அவர்­க­ளால் சிறப்­பாக விளை­யாடி நினைத்­ததை நடத்தி முடிக்க இய­லும்," என்­றும் வேன் ஹால் குறிப்­பிட்­டார். முதல் சுற்­றில் 'ஏ' பிரி­வில் முத­லி­டத்­தைப் பிடித்­தி­ருந்­தா­லும் நெதர்­லாந்­தின் விளை­யாட்டு களை­யி­ழந்து காணப்­பட்­டது. போட்­டி­யில் சிறப்­பா­கச் செய்ய அணி பெரி­தும் மேம்­ப­ட­வேண்­டிய நிலை­யில் உள்­ளது.

'பி' பிரி­வில் அமெ­ரிக்கா அதிக கோல்­க­ளைப் போட சிர­மப்­பட்­டது. ஆனால், ஒரு கோலை மட்­டுமே விட்­டுக்­கொ­டுத்­தது. அமெ­ரிக்­கா­வின் திட­மான தற்­காப்பு ஆட்­டம் நெதர்­லாந்­துக்­குப் பிரச்­சி­னை­யாக அமை­ய­லாம், இளம் வீரர் கொடி காக்­போ­விற்கு புதிய சவா­லாக இருக்­க­லாம்.

ஈரா­னுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் கோல் போட்­ட­போது காய­முற்­றார் அமெ­ரிக்­கா­வின் நட்­சத்­திர ஆட்­டக்­கா­ரர் கிறிஸ்­டி­யன் புலி­சிக் (படம்). அத­னால் நெதர்­லாந்­துக்கு எதி­ராக அவர் விளை­யா­டு­வது சந்­தே­கம்.

எனி­னும், ஆட்­டத்­தில் இடம்­பெற தனது சக்­திக்கு உட்­பட்ட அனைத்­தை­யும் செய்­யப்­போ­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளார் புலி­சிக்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!