பெல்ஜியத்தின் பொற்காலம் நிறைவு

தோஹா: உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யில் முதல் சுற்­றி­லேயே வெளி­யே­றி­விட்­டது பெல்­ஜி­யம். 'எஃப்' பிரி­வில் குரோ­வே­ஷி­யா­வுக்கு எதி­ரான ஆட்­டம் கோலின்றி சம­நி­லை­யில் முடிந்­த­தைத் தொடர்ந்து முதல் சுற்­றி­லேயே பெல்­ஜி­யம் வெளி­யே­று­வது உறு­தி­யா­னது.

பல நட்­சத்­தி­ரங்­க­ளைக் கொண்ட பெல்­ஜிய அணிக்­குக் கடந்த சில ஆண்­டு­கள் பொற்­கா­ல­மா­கக் கரு­தப்­பட்­டது. எனி­னும், அணி கிண்­ணம் ஏதும் வெல்­ல­வில்லை. இப்­போது பெல்­ஜி­யத்­தின் பெரும்­பா­லான நட்­சத்­தி­ரங்­க­ளுக்கு வய­தா­கி­விட்­டது. ஏமாற்­றத்­து­டன் பொற்­கா­லம் நிறை­வுக்கு வரு­கிறது.

சென்ற போட்­டி­யில் இறு­தி­யாட்­டம் வரை சென்ற குரோ­வே­ஷி­யா­வுக்கு எதி­ராக பெல்­ஜி­யம் பல கோல் வாய்ப்­பு­களை உரு­வாக்­கி­யது. ஆனால் அவற்றை வீண­டித்­தது. குரோ­வே­ஷியா மன­வு­று­தி­யு­டன் விளை­யாடி பெல்­ஜி­யத்தை நன்கு கையாண்­டது.

ஆட்­டம் நிறை­வ­டைந்த பிறகு பெல்­ஜி­யத்­தின் பயிற்­று­விப்­பா­ளர் ராபர்ட்டோ மார்ட்­டி­னெஸ் பதவி­வி­ல­கப்­போ­வ­தாக அறி­விக்­கப்­பட்­டது.

'எஃப்' பிரி­வில் குரோ­வே­ஷி­யா­வும் எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு மாறாக முத­லி­டத்­தைப் பிடித்த மொரோக்­கோ­வும் இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னே­றின.

கன­டாவை 2-1 எனும் கோல் கணக்­கில் வென்று பிரி­வில் முத­லி­டத்­தைப் பிடித்­தது மொரோக்கோ. முதல் சுற்­றைத் தாண்­டாது எனப் பலர் நினைத்த அந்த அணி பிரிவில் முதலிடத்தைப் பிடித்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது. மொரோக்­கோ­விற்கு 'வானமே எல்லை' என்று கூறி மேலும் வெற்றி­க­ளைக் குவிக்க நம்­பிக்கை ஊட்­டி­னார் பயிற்­று­விப்­பா­ளர் வாலிட் ரெக்­ரா­குய்.

1986ஆம் ஆண்டு உல­கக் கிண்­ணப் போட்­டிக்­குப் பிறகு முதன்­முறை­யாக இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னே­றி­யது மொரோக்கோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!