உலகக் காற்பந்துத் தூண்களை சாய்த்த ஜப்பான்

அல் ரயான்: உல­கக் கிண்­ணப் போட்­டி­யின் 'இ' பிரி­வில் உல­கக் காற்­பந்­தின் தூண்களாக விளங்­கும் ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய இரு அணிகளை வென்று அசத்தி­யி­ருக்­கிறது ஜப்­பான்.

'இ' பிரி­வி­லி­ருந்து ஜப்­பான் முன்­னே­றாது என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. அதற்கு மாறாக முத­லி­டத்­தைப் பிடித்து நெஞ்சை நிமிர்த்­தி­ய­படி இரண்­டாம் சுற்­றுக்­குள் காலடி எடுத்து வைக்­கிறது ஆசிய அணி­யான ஜப்­பான்.

ஜெர்­மனிக்கு எதி­ரான ஆட்­டத்­தில் இடம்­பெற்­ற­தைப் போலவே ஸ்பெ­யி­னுக்கு எதி­ரா­க­வும் முற்­பா­தி­யில் 1-0 எனும் கோல் கணக்­கில் பின்­னால் இருந்­தது ஜப்­பான். பிற்­பா­தி­யில் இரு கோல்­க­ளைப் போட்டு வென்­றது.

இந்த உல­கக் கிண்­ணப் போட்டி ஜப்­பானுக்கு இப்­போதே ஆகச் சிறந்­த­தாக அமைந்­துவிட்டது என்­ற­னர் மகிழ்ச்சி வெள்­ளத்­தில் மூழ்­கி­யி­ருக்­கும் அதன் ரசி­கர்­கள் சிலர். ஸ்பெ­யி­னுக்கு எதி­ராக ஜப்­பான் கண்ட வெற்றி ஆசிய காற்­பந்­துக்­குப் பெருமை சேர்க்­கும் நிகழ்வு என்­றார் அணி­யின் பயிற்று­விப்­பா­ளர் ஹஜிமே மொரி­யாசு. இதைத் தொடர்ந்து உல­கக் காற்­பந்­தில் ஆசிய நாடு­கள் வெற்றி காண­லாம் என்­றும் நம்­பிக்­கை­ய­ளிக்­கும் வகை­யில் குறிப்­பிட்­டார் மொரி­யாசு.

'இ' பிரி­வி­லி­ருந்து ஸ்பெ­யி­னும் இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னே­றி­யது. இரண்­டாம் சுற்­றில் ஸ்பெ­யி­னும் மொரோக்கோ­வும் சந்­திக்­கும், குரோ­வே­ஷி­யா­வு­டன் மோத­விருக்­கிறது ஜப்­பான்.

சென்ற போட்­டி­யின் இரண்­டாம் சுற்­றில் பெல்­ஜி­யத்­திற்கு எதி­ரான ஆட்­டத்­தில் ஜப்பான் வெற்றி­பெ­றும் நிலை­யில் இருந்­து தோல்வி­யடைந்­தது. அந்த ஏமாற்­றத்­தைப் பின்­னுக்­குத் தள்ளி முதன்­மு­றை­யாக உலகக் கிண்ணக் காலி­று­திச் சுற்றுக்கு முன்­னேறும் இலக்­கைக் கொண்­டுள்­ளது ஜப்­பான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!