You are here

விளையாட்டு

சாம்பியன்ஸ் கிண்ண ஹாக்கி: வெள்ளி வென்றது இந்தியா

சாம்பியன்ஸ் கிண்ண ஹாக்கி: வெள்ளி வென்றது இந்தியா

லண்டன்: சாம்பியன்ஸ் கிண்ண ஹாக்கி தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த இந்திய அணி முதன்முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. 36வது சாம்பியன்ஸ் கிண்ண ஹாக்கி தொடர் கடந்த 10ஆம் தேதி லண்டனில் தொடங்கியது. இதில் இந்தியா, ஆஸ்திரே லியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், தென் கொரியா என 6 அணிகள் பங்கேற்றன. 36 ஆண்டுகளில் முதன்முறை யாக இந்திய அணி இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 13 முறை இத்தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியாவை இந்திய அணி இறுதிப் போட்டியில் எதிர்கொண்டது.

உக்ரேனை வீழ்த்தி யூரோ காற்பந்தில் முதல் வெற்றியை ருசித்தது வடஅயர்லாந்து

உக்ரேனை வீழ்த்தி யூரோ காற்பந்தில் முதல் வெற்றியை ருசித்தது வடஅயர்லாந்து

லியோன்: யூரோ கிண்ண காற்பந்து தொடரில் முதன்முதலாக ஒரு வெற்றியைப் பதிவு செய்து சாதித் துள்ளது வடஅயர்லாந்து. நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த ஆட்டத்தில் உக்ரேனை 2=0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது அக்குழு. கேரத் மெக்காலி 49வது நிமி டத்திலும் நியால் மெக்கின் ஆட் டத்தின் இறுதி நிமிடத்திலும் அந்த கோல்களை அடித்தனர். 1982ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ணத் தொடரில் அதை ஏற்று நடத்திய ஸ்பெயினை வீழ்த்திய பிறகு ஐரோப்பிய காற் பந்துத் தொடர் ஒன்றில் வட அயர்லாந்து பெற்ற முதல் வெற்றி யும் இதுதான்.

அரையிறுதியில் அமெரிக்கா

மெரிக்காவின் முதல் கோலை முட்டும் கிளின்ட் டெம்சி (இடது). படம்: யுஎஸ்ஏ டுடே ஸ்போர்ட்ஸ்

சியாட்டில்: கோப்பா அமெ­ரிக்கா காற்­பந்துப் போட்­டி­களில் நேற்று அதிகாலை எக்­வ­டோரை எதிர்­கொண்ட அமெ­ரிக்கா, கிளின்ட் டெம்சி முயற்­சி­யில் 2=1 என்ற கோல் எண்­ணிக்கை­யில் வெற்றி பெற்றது. இதில் தொடர்ந்து மூன்றா­வது ஆட்­டத்­தில் கிளின்ட் டெம்சி கோல் போட்­ட­தோடு மட்­டு­மல் லாது பிற்பாதி ஆட்­டத்­தில் சக வீரர் கியாசி ஸார்டெஸ் கோல் போட உதவி­யாக பந்தை அவரு டைய பாதையில் தட்டிக் கொடுத் தார். இதன்மூலம் தென்னமெ­ரிக்கா வில் தனது வடக்­குப் பகு­தி­யில் அல்லாத தென்னமெ­ரிக்க நாடு ஒன்றை அமெ­ரிக்கா வென்­றுள்­ளது இதுவே இரண்டா­வது முறை என்று செய்தித் தக­வல்­கள் கூறு கின்றன.

கேரத் பேல்: இதுவே முடிவல்ல

வேல்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கேரத் பேல்

லென்ஸ்: முற்பாதி ஆட்டத்தில் தமது கால்கள் மூலம் வந்த கோலால் தமது அணி முன்னிலை கண்டபோதும் இரண்டாம் பாதியில் இங்கிலாந்து அணி இரு கோல்களைப் போட்டு வாகை சூடியதால் தளர்ந்து போனார் வேல்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கேரத் பேல் (படம்). ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் பேல் ‘ஃப்ரீ கிக்’ மூலம் உதைத்த பந்தை இங்கிலாந்து கோல்காப்பாளர் ஜோ ஹார்ட் கைகளால் தட்டி விட்டபோதும் பந்து வலைக்குள் புகுவதை அவரால் தடுக்க இயலவில்லை. ஆயினும், இங்கிலாந்து பயிற்றுவிப்பாளர் ஹாட்சன் இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே இரு மாற்று வீரர்களைக் களமிறக்கியது அந்த அணிக்கு வெற்றியை ஈட்டித் தந்தது.

ரஷ்யா எச்சரிக்கை

சாலை வழிகாட்டி பலகைகள் மீது ஏறி ரகளை செய்த ரசிகர்கள். படம்: ஏஎஃப்பி

ரஷ்யா எச்சரிக்கை பாரிஸ்: யூரோ காற்­பந்து தொட­ரின்­போது கல­கத்­தில் ஈடு­பட்­ட­தாக ரஷ்ய காற்பந்து ரசி­கர்­கள் கைது செய்­யப்­பட்­டது தொடர்­பாக பிரான்ஸ் தூத­ருக்கு அழைப்­பாணை அனுப்­பி­யுள்­ளது ரஷ்யா. நேற்று முன்­தி­னம் ரஷ்யா, ஸ்லோ­வா­கியா அணிகள் விளை­யா­டி­ய­போது மீண்டும் ரகளை­யில் ஈடு­பட்­ட­தால் மேலும் ஆறு ரஷ்ய ரசி­கர்­கள் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். அதே­ச­ம­யம் 3 ரஷ்­யர்­கள் அவர்களது நாட்­டிற்கு திருப்பி அனுப்­பப்­பட்­ட­னர். ரஷ்­யர்­களுக்கு எதிரான நட­வ­டிக்கை தொடர்ந்தால், அது ரஷ்ய= பிரெஞ்சு உறவை மோசமாக்கும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

யூரோ கிண்ணக் காற்­பந்து தொடரில்ரா பிரான்ஸ் வெற்றி

வெற்றியைக் கொண்டாடும் ஆலிவர்.

யூரோ கிண்ணக் காற்­பந்து தொடரில் நேற்று அதிகாலை நடந்த ஆட்­ட­மொன்­றில் போடப்­பட்ட கடைசி நிமிட கோலால் அல்­பே­னி­யாவை வீழ்த்­தி­யது பிரான்ஸ். இதனால் காலி­று­திக்கு முந்தைய சுற்றான ‘நாக்­அ­வுட்’ சுற்­றுக்கு முதல் அணியாக பிரான்ஸ் தகுதி பெற்றுள்ளது. இரு அணி­களுமே அவ்­வ­போது கிடைத்த கோல் போடும் வாய்ப்பைத் தவ­ற­விட்­ட­னர். பிற்பாதி ஆட்­டத்­தின்­போது அல்­பே­னிய வீரர் அடித்த பந்து எதி­ர­ணி­யின் வலைக்­குள் செல்­லா­மல் கோல் கம்பத்தை உரசி சென்றது. அதேபோல், பிரான்ஸ் வீரர் ஒலிவர் கிர­வுட்­டும் பந்து நேராக வலைக்­குள் செல்லும் வாய்ப்பை மூன்று முறை தவ­ற­விட்­டார்.

டோனியின் சாதனை

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் டோனி, ஒரு நாள் போட்டிகளில் 350 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய விக்கெட் காப்பாளர் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஸிம்பாப்வேவுக்கு எதிராக ஹராரேயில் நடைபெற்ற 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் பும்ரா பந்துவீச்சில் எல்டன் சிகும்பராவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில்
350 விக்கெட்டுகளை
வீழ்த்திய முதல் இந்திய விக்கெட் காப்பாளர் என்ற சிறப்பை டோனி பெற்றுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 482 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர்

ரேம்சி: இங்கிலாந்தைவிட எங்கள் அணி சிறந்தது

வேல்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கள் ஏரோன் ரேம்சி (இடது), கேரத் பேல். படம்: ஏஎஃப்பி

யூரோ 2016 போட்­டி­யில் இன்று இங்­கி­லாந்தை எதிர்­கொள்­கிறது வேல்ஸ் அணி. ஆனால் அதற்­குள் இங்­கி­லாந்து அணியை­விட எங்கள் அணி சிறந்தது என்று இங்­கி­லாந்து வீரர்­கள், ரசிகர் களின் வாயைக் கிள­றி­யி­ருக்­கிறார் வேல்ஸ் அணியின் நட்­சத்­திர விளை­யாட்­டா­ள­ரான ஏரோன் ரேம்சி. “எங்கள் அணி சிறந்த அணி என்று நான் நம்­பு­கி­றேன். நாங்கள் பல சோதனை­களைச் சந்­தித்­துள்ளோம். அவற்­றுக்­கான வெகு­ம­தியை இப்போது பெற்று வருகிறோம். “நாங்கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் மற்­ற­வர்­களுக்­காக போரா­டு­கி­றோம். ஒவ்­வொ­ரு­வ­ரும் மற்­ற­வர் ­களுக்­காக உயிரைக் கொடுத்து விளையாடு­கி­றோம்,” என்று அவர் பெருமையாகக் கூறினார்.

ஹங்கேரியிடம் வீழ்ந்த ஆஸ்திரியா

ஹங்கேரி அணிக்கான முதல் கோலை அடித்த மகிழ்ச்சியில் அதன் வீரர்கள். படம்: ஏஎஃப்பி

போர்டெக்ஸ்: யூரோ கிண்ணக் காற்பந்தின் ‘எஃப்’ பிரிவு ஆட்டத்தில் ஹங்கேரி=ஆஸ்திரியா அணிகள் மோதின. முற்பாதி ஆட்டம் பரபரப்பாக இல்லையென்றாலும் இரு அணி களும் விட்டுக்கொடுக்காமல் விளையாடினார்கள். ஆனால், ஹங்கேரி வீரர் ஆடம் சாலாய் 62வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். சகவீரர் லென்ஹஸ்லர் கடத்திக் கொடுத்த பந்தை அவர் கோலாக மாற்றினார். அதேசமயம் அடுத்த நான்கு நிமிடங்களில் ஹங்கேரி வீரர் டிராகோவிச் தப்பாட்டம் காரணமாக வெளியேற்றப்பட்டார். இதனால் 10 வீரர்களுடன் விளையாடும் நிலை ஆஸ்திரியா வுக்கு ஏற்பட்டது. இது அந்த அணிக்குப் பின்னடைவாக அமைந்தது. 87வது நிமிடத்தில் ஹங்கேரி 2வது கோலை போட்டது.

இந்தியாவிடம் மீண்டும் மோசமாகத் தோற்ற ஸிம்பாப்வே

ராகுல் 2 சிக்சர் 4 பவுண்ட­ரி­களு­டன் 63 ஓட்­டங்களும் பஸல் 55 ஓட்­டங்களும் எடுத்து ஆட்­ட­மி­ழக்­கா­மல் இருந்த­னர். படம்: ஏஎஃப்பி

­­­ஹ­ராரே: இந்தியா=ஸிம்பாப்வே அணிகள் இடை­யி­லான கடைசி ஒருநாள் போட்­டியைக் 3=0 என இந்தியா கைப்­பற்­றி­யது. பூவா தலையா வென்று முதலில் பந்த­டிக்­கத் தொடங்­கிய ஸிம்பாப்வே 42.2 ஓவர்­களில் அனைத்து விக்­கெட்­டு­களை­யும் இழந்து 123 ஓட்­டங்கள் மட்டுமே எடுத்­தது. அந்த அணியில் சிபந்தா(38), சிபபா(27) ஓட்­டங்கள் எடுத்த னர். இந்திய அணி தரப்­பில் பும்ரா 22 ஓட்­டங்கள் மட்டுமே விட்­டுக்­கொ­டுத்து 4 விக்­கெட்டு களைச் சாய்த்­தார். இதை­ய­டுத்து 124 ஓட்­டங்கள் என்ற இலக்கை நோக்கி இந்தியா விளை­யா­டி­யது. சாகல், அறிமுக வீரர் பஸல் தொடக்க வீரர்­க­ளாக கள­மி­றங்­கி­னர்.

Pages