You are here

விளையாட்டு

அசுர பலத்துடன் விளையாடிய பால் போக்பா

மான்செஸ்டர்: இந்தப் பருவத்துக் கான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியை மான் செஸ்டர் யுனைடெட் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. நேற்று அதிகாலை தனது சொந்த விளையாட்டரங்கமான ஓல்ட் டிராஃபர்ட்டில் லெஸ்டர் சிட்டியை அது 2-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது.

கடந்த பருவத்தில் லீக் பட்டியலில் யுனைடெட் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இந்தப் பருவத்தில் லீக் பட்டத்தை எப்படியாவது வென்று விட வேண்டும் என்று அக்குழு வுக்கு இருக்கும் முனைப்பு நேற்றைய ஆட்டத்தில் பிரதி பலித்தது.

அரையிறுதியில் ஹாலெப், நடால்

மாண்ட்ரியல்: ரோஜர்ஸ் கிண்ண டென்னிஸ் போட்டியின் அரை இறுதிச் சுற்றுக்கு ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பும் ஸ்பெயி னின் ரஃபயேல் நடாலும் தகுதி பெற்றுள்ளனர். கனடாவின் மாண்ட்ரியல் நகரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் தரநிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நேற்று முன்தினம் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு 3ஆம் சுற்று ஆட்டத்தில் ஹாலெப் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சைத் தோற் கடித்துக் காலிறுதிக்குத் தகுதி பெற்றார். நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீராங்கனை கரோலினா கார்சியாவை ஹாலெப் எதிர்கொண்டார்.

கார்டியோலாவிற்கு எதிராக தயாராகும் உனை எம்ரி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துத் தொடரின் தனது முதல் ஆட்டத்தில் ஆர்சனலை எதிர்கொள்கிறது மான்செஸ்டர் சிட்டி. நாளை இரவு 11 மணிக்கு ஆர்சனலின் சொந்த அரங்கில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. சிட்டி குழுவின் முக்கிய வீரர்கள் சிலர் காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை. என்றாலும் பருவத்திற்கு முந் திய நட்புமுறை ஆட்டத்தில் அக் குழுவினர் சிறந்த முறையிலேயே விளையாடினர்.

மழையால் தத்தளிக்கும் இந்திய அணி

லண்டன்: இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பந்தடித்த இந்தியா 11 ஓட்டங்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டு களை இழந்து தத்தளித்தது. பூவா தலையா வென்ற இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் தவான், உமேஷ் யாதவ் நீக்கப்பட்டுப் புஜாரா, குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

எவர்ட்டன் குழுவில் சேர்ந்த பார்சிலோனா வீரர்கள்

லண்டன்: கடைசி நேரத்தில் எவர்ட்டன் குழு இரண்டு பார்சிலோனா வீரர்கள் உட்பட மூவரை வாங்கியது. காற்பந்து குழுக்களுக்கான வீரர்களை வாங்குவதற்கான காலக்கெடு நேற்று முன்தினம் முடிவடைந்தது. கடைசி நாள் என்பதால் பல இங்கிலிஷ் குழுக்கள் வீரர்களை வாங்குவதில் தீவிர ஆர்வம் காட் டின.

‘யுனைடெட் வெல்வது சிரமம்’

ஹாங்காங்: இந்தப் பருவத்துக்கான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியை மான்செஸ்டர் யுனைடெட் வெல்வது சிரமம் இன்று அக்குழுவின் முன்னாள் நட்சத்திர வீரர் பால் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார். யுனைடெட் ஆட்டக்காரர்கள் உற்சாகம் இன்றி காணப்படுவதாக அவர் கூறினார். வெற்றியைச் சுவைக்க வேண்டுமாயின் யுனைடெட்டின் நிர்வாகி ஜோசே மொரின்யோ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஷோல்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மொரின்யோ கையாளும் உத்திகளை ஷோல்ஸ் குறைகூறினார். “தற்போதைய யுனைடெட் குழுவில் இருந்தால் நானும் மகிழ்ச்சியுடன் இருக்க மாட்டேன்,” என்று ஷோல்ஸ் பட்டென்று ஒரு போடு போட்டார்.

ஆறுதல் வெற்றி பெற்ற இலங்கை அணி

கண்டி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆறுதல் அடைந்தது இலங்கை அணி. இலங்கை = தென்னாப்பிரிக்கா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று 3=0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கண்டியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. பூவா தலையாவில் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

சிந்து: நிச்சயம் உலக வெற்றியாளர் ஆவேன்

ஹைதராபாத்: சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்ற உலகப் பூப்பந்து வெற்றியாளர் கிண்ண இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து (படம்), ஒலிம்பிக் வெற்றியாளர் கரோலினா மரினிடம் (ஸ்பெயின்) தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். உலகப் பூப்பந்துப் போட்டியில் அவர் வெள்ளிப்பதக்கம் வெல்வது இது இரண்டாவது முறையாகும். இந்தியா திரும்பிய 23 வயது பி.வி. சிந்து நேற்று முன்தினம் ஹைதரா பாத்தில் செய்தியாளர் களிடம் பேசினார்.

இரு அணிகளும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம்

பர்மிங்ஹாம்: லார்ட்ஸ் மைதானத் தில் இன்று தொடங்கவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கி லாந்து, இந்தியா ஆகிய இரு அணிகளும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வாய்ப்புள்ளது என இங்கிலாந்து வீரர் மோர்கன் தெரிவித்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச் சாளரான அஸ்வின் 7 விக்கெட்டு கள் வீழ்த்தி முத்திரை பதித்தும் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. தவானின் மோசமான பந்தடிப்பு, பாண்டியாவை அணியில் சேர்த்தது என இத்தோல்விக்கு பல விமர் சனங்கள் எழுந்துள்ள °நிலையில், 2வது போட்டி இன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

செல்சியில் கிபா; ஆக அதிக விலை கோல் காப்பாளர்

லண்டன்: பிரிமியர் லீக் மற்றும் இங்கிலிஷ் காற்பந்துக் குழு வீரர்கள் குழு மாறுவதற்கான காலக்கெடு இவ்வாண்டு மூன்று வாரம் முன்னதாகவே முடிகிறது. அதன்படி இந்த காலக்கெடு சிங்கப்பூர் நேரப்படி இன்று நள் ளிரவோடு முடிகிறது. எனவே பல குழுக்களும் கடைசி நேர மாற் றத்தில் ஈடுபட்டு உள்ளன. அதன் °பிறகு சிங்கப்பூர் நேரப்படி சனிக்கிழமை அதிகாலை முதல் பிரிமியர் லீக் போட்டிகள் தொடங்குகின்றன. பிரிமியர் லீக் பட்டம் வெல்ல கடும் போட்டியில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டியும் லிவர்பூலும் விளையாட்டாளர் களை வாங்க அதிக தொகை செலவிட்டு உள்ளது.

Pages