You are here

விளையாட்டு

தந்தை கடத்தப்பட்ட செய்தியை அறிந்தும் அர்ப்பணிப்புடன் விளையாடிய நைஜீரிய வீரர்

 நைஜீரிய அணித்தலைவர் ஜான் ஒபி மிக்கெல்

அபுஜா: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் பங்கேற்ற நைஜீரிய அணித்தலைவர் ஜான் ஒபி மிக்கெலின் (படம்) தந்தை ஒரு வாரத்திற்குப் பின் கடத்தல் காரர்களால் விடுவிக்கப்பட்டார். ஜான் ஒபி மிக்கெலின் தந்தை யான மைக்கல் ஒபி நைஜீரியாவில் உள்ள இனுகு எனும் நகரத்தில் கடந்த வியாழக்கிழமை துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்.

தங்க ளது நிபந்தனையை ஏற்று பிணைத்தொகையாக கிட்டத்தட்ட 28,000 அமெரிக்க டாலரை ஜான் வழங்கியதை அடுத்து, அவரின் தந்தையை கடத்தல்காரர்கள் விடுவித்தனர்.

ஷரபோவா, குவிட்டோவா அதிர்ச்சி தோல்வி

படம்: ஏஎஃப்பி

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முன்னாள் வெற்றியா ளர்களான மரியா ஷரபோவாவும் பெட்ரா குவிட்டோவாவும் இந்த முறை முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினர். தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வென்று பிரதான சுற்றுக்குள் நுழைந்த சக ரஷ்ய வீராங்கனை விட்டாலியா டயட்சென்கோவிடம் 6-7, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வீழ்ந்தார் ஷரபோவா. செக் குடியரசைச் சேர்ந்தவரான குவிட்டோவா, பெலருசின் அலியக்சாண்ட்ரா சஸ்னோவிச்சிடம் 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் மண்ணைக் கவ்வினார்.

குல்தீப் சுழலில் சிக்கி மூழ்கிய இங்கிலாந்து

மான்செஸ்டர்: இளம் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுகளை அள்ள, இங்கி லாந்து அணிக்கெதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத் தில் ஆய்ன் மோர்கன் தலைமை யிலான இங்கிலாந்து அணி முதலில் பந்தடித்தது. தொடக்க வீரர்களான ஜேஜே ராயும் (30) ஜோஸ் பட்லரும் (69) நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத் ததால், ஒரு கட்டத்தில் இங்கி லாந்து அணி பெரும் இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்பார்க் கப்பட்டது.

வெற்றி பெற்றபோதிலும் நெய்மாருக்கு கெட்ட பெயர்

மாஸ்கோ: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறு திக்கு பிரேசில் தகுதி பெற் றுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அது 2=0 எனும் கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது. தோல்வியைத் தழுவிய மெக் சிகோவின் உலகக் கிண்ணப் பயணம் ஒரு முடிவுக்கு வந்தது. இடைவேளையின்போது இரு தரப்பும் கோல் ஏதும் போடாமல் சமநிலையில் இருந்தன. பிரேசிலின் கோல் முயற்சிகளை மெக்சிகோ கோல்காப்பாளர் மிகச் சிறப்பாகத் தடுத்து நிறுத்தினார். ஆனால் பிற்பாதியில் நிலைமை மாறியது. ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் பிரேசிலின் முதல் கோலை அதன் நட்சத்திர வீரர் நெய்மார் போட்டார்.

போராடி வென்ற பெல்ஜியம்

மாஸ்கோ: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஜப்பா னுக்கும் பெல்ஜியத்துக்கும் இடையே நேற்று அதிகாலை நடைபெற்ற காலிறுதிக்கு முந்திய ஆட்டத்தை யாரும் இனி மறக்க மாட்டார்கள். ஆட்டத்தில் நிகழ்ந்தவை காற்பந்து ரசிகர்களின் மனக் கண்களில் என்றென்றும் வந்து வந்து போகும் அளவுக்கு இரு அணிகளின் அதிரடி ஆட்டம் அமைந்தது. இரண்டு கோல்கள் முன்னிலை வகித்து காலிறுதிச் சுற்றின் வாசல் வரை சென்ற ஜப்பானுக்குக் கடைசியில் பெருத்த ஏமாற்றம். பெல்ஜியத்தின் விட்டுக் கொடுக்கா மனப்பான்மையும் இறுதி வரை போராடும் குணமும் அதற்கு வெற்றியைத் தேடித் தந்தது.

வெற்றி இலக்குடன் சௌத்கேட் வியூகம்

மாஸ்கோ: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறு திக்கு முந்திய ஆட்டத்தில் கொலம்பியாவை இன்றிரவு சந்திக்கிறது இங்கிலாந்து. முதல் சுற்று ஆட்டத்தில் இரண்டு வெற்றிகள் ஒரு தோல் வியுடன் ‘ஜி’ பிரிவில் இரண் டாவது இடத்தைப் பிடித்தது இங்கிலாந்து. பெல்ஜியத்துக்கு எதிரான ஆட்டத்தில் அது 1=0 எனும் கோல் கணக்கில் தோற்றது. ‘ஹெச்’ பிரிவில் இடம்பெற்ற கொலம்பியா அதன் முதல் ஆட்டத்தில் ஜப்பானைச் சந்தித்தது. அதில் அது எதிர்பாராத விதமாக 2-1 எனும் கோல் கணக்கில் வீழ்ந்தது.

காலிறுதியில் ரஷ்யா; சோகத்தில் மூழ்கிய ஸ்பானிய நட்சத்திரப் பட்டாளம்

மாஸ்கோ: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தும் ரஷ்யா காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறி உள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயினை அது 4=3 எனும்  கோல் கணக்கில் பெனால்டி ‌ஷுட்அவட்டில் தோற் கடித்தது. நட்சத்திர வீரர்கள் பலரைக் கொண்ட ஸ்பெயின் வெற்றி பெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது.  அதற்கு ஏற்ப ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு ஃப்ரீகிக் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் வந்த பந்து ரஷ்ய தற்காப்பு ஆட்டக்காரரின் காலில் பட்டு வலைக்குள் சென்றது. ஸ்பெயின் முன்னிலை வகித்தது. ஆனா

மாஸ்கோ: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தும் ரஷ்யா காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறி உள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயினை அது 4=3 எனும் கோல் கணக்கில் பெனால்டி ‌ஷுட்அவட்டில் தோற் கடித்தது. நட்சத்திர வீரர்கள் பலரைக் கொண்ட ஸ்பெயின் வெற்றி பெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்ப ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு ஃப்ரீகிக் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் வந்த பந்து ரஷ்ய தற்காப்பு ஆட்டக்காரரின் காலில் பட்டு வலைக்குள் சென்றது. ஸ்பெயின் முன்னிலை வகித்தது.

பெனால்டி நாயகன் சுபசிச்; டென்மார்க்கின் பயணம் முடிந்தது

மாஸ்கோ: குரோவே‌ஷியாவின் கோல்காப்பாளர் டேனியேல் சுபசிச் டென்மார்க்கின் மூன்று பெனால்டிகளைத் தடுத்து நிறுத்தி தமது குழுவின் வெற்றிக்கு முக்கிய காரண மானார். டென்மார்க் கோல்காப்பாளர் கோஸ்பர் ஷர்மைக்கலும் சளைத்தவர் அல்ல. அவர் இரண்டு பெனால்டிகளைத் தடுத்து நிறுத்தினார். ஆனால் குரோவே‌ஷியாவின் வெற்றியை அவரால் தடுக்க முடியவில்லை.

மோதிப் பார்க்கத் தயாராகும் ரஷ்யா

மாஸ்கோ: முன்னாள் வெற்றியாள ரான ஸ்பெயினை எதிர்த்தாடுவ தால் உலகக் கிண்ணத் தொடரை ஏற்று நடத்தும் ரஷ்யா இன்றைய காலிறுதிக்கு முந்திய சுற்று ஆட் டத்தைக் கிட்டத்தட்ட இறுதிப் போட்டி போலவே கருதி களம் இறங்கவுள்ளது. தொடக்க ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியாவைப் புரட்டியெடுத்த அதே லுஸ்னிகி அரங்கிற்குத் திரும்புவதாலும் கிட்டத்தட்ட 80,000 ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் ஆடவிருப்பதாலும் ரஷ்ய வீரர்கள் மிகுந்த உத்வேகத்துடன் உள்ளனர்.

உறுதியான தற்காப்பும் உச்ச தாக்குதலும்

டியேகோ ஹோடின்

சோச்சி: முதல் ஆட்டத்திலேயே மூன்று கோல்களை அடித்த தாக்குதல் ஆட்டக்காரர் இடம்பெற்றுள்ள அணியும் இதுவரை ஆடிய மூன்று ஆட்டங்களிலும் ஒரு கோல்கூட விட்டுத்தராத அணியும் ஒன்றை ஒன்று எதிர்த்தாடுவதால் உலகக் கிண்ணக் காற் பந்துக் களம் சூடுபிடித்துள்ளது. ஸ்பெயினுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ‘ஹாட்ரிக்’ கோலடித்த சோச்சி அரங்கிற்கு மீண்டும் திரும்புகிறார் போர்ச்சுகல் அணித்தலைவர் கிறிஸ்ட யானோ ரொனால்டோ.

Pages