You are here

விளையாட்டு

ஆரம்பமே அமர்க்களம்

கஸன்: உலகக் கிண்ணத்தை வெல் லும் வாய்ப்புள்ள அணிகளாக முன்னு ரைக்கப்பட்ட அணிகளுள் இரண்டான அர்ஜெண்டினாவும் பிரான்சும் கால் இறுதிக்கு முந்திய சுற்றிலேயே மோதுவதால் இப்போதே அரையிறுதிச் சுற்று போன்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்பார்த்த அளவிற்கு இதுவரை இவ்விரு அணிகளின் செயல்பாடும் அமையாததால் தங்களது உச்ச திறனை மீண்டும் எட்டி வெற்றியை ஈட்ட இரு அணிகளுமே கங்கணம் கட்டியுள்ளன.

US$10,000 பரிசு: மரடோனா அறிவிப்பு

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: நைஜீரியாவுடன் தமது அணி மோதிய ஆட்டத்தை நேரில் கண்டபோது அர்ஜெண்டினாவின் முன்னாள் நட்சத்திரம் டியேகோ மரடோனா, மிகுந்த உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருந்தார். அப்போது அவருக்கு உடல்நலன் குன்றியதால் சிகிச்சை அளிக்கப் பட்டது. இந்நிலையில், அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக வாட்ஸ்அப் மூலம் வதந்தி பரவியது. அதைப் பரப்பியது யார் என்பது குறித்த தகவலை அளிப்போருக்கு 10,-000 அமெரிக்க டாலர் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என மரடோனாவின் வழக்கறிஞர் அறிவித்துள்ளார்.

தென்கொரியா வெற்றி; களிப்பில் மெக்சிகோ

மெக்சிகோ: ஜெர்மனியை 2-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியா தோற்கடித்ததை தென்- கொரியர்களைக் காட் டிலும் மெக்சிகோ காற்பந்து ரசிகர்களே கோலாகலமாகக் கொண்டாடினர். அவர்கள் அங்குள்ள தென்கொரிய தூத ர கத்தின் முன்பு ஒன்று கூடி தங்கள் மகிழ்ச்சியை ஆரவாரத் துடன் வெளிப்படுத்தினர்.

மானம் காத்த மார்க்கோஸ் ரோஹோ

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: பிரேசிலில் கடந்த முறை நடந்த உலகக் கிண்ணப் போட்டி களில் இறுதி வரை முன்னேறி நூலிழையில் கிண்ணத்தை இழந்த அர்ஜெண்டினா, இம்முறை முதல் சுற்றுடன் வெளியேறும் அபாயத்தில் இருந்தபோதும் ஒருவழியாக அதிலிருந்து தப்பியது. ‘டி’ பிரிவில் இடம்பெற்றிருந்த அந்த அணி முதல் இரு போட்டிகளிலும் சேர்த்து ஒரு புள்ளியை மட்டுமே பெற்றிருந்ததால் நேற்றைய ஆட்டத்தில் நைஜீரியாவை தோற்கடிக்க வேண்டிய இக்கட்டான நிலை யில் இருந்தது.

40 ஆண்டுகளில் முதல் வெற்றி

சோச்சி: உலகக் கிண்ணத் தொடரைவிட்டு ஏற்கெனவே வெளியேறிவிட்டபோதும் வெற்றியுடன் விடைபெற்று ஆறுதல் கண்டது பெரு. முதல் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 18வது நிமிடத்தில் ஆண்ட்ரே கரையோவும் 50வது நிமிடத்தில் பௌலோ கரேராவும் கோலடிக்க, பெரு 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது. 1978ஆம் ஆண்டிற்குப் பின் உலகக் கிண்ணப் போட்டிகளில் அவ்வணிக்குக் கிட்டிய முதல் வெற்றி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வெற்றி வீணாகிவிடக்கூடாது’

சமாரா: கடைசி நேரத்தில் விட்டுக்கொடுத்த கோலால் ஜப்பானிடம் தோற்றபோதும் அடுத்த ஆட்டத்தில் போலந்தை வீழ்த்தி மூன்று புள்ளிகளைக் கைப்பற்றியது கொலம்பியா. அந்த உத்வேகத்துடன் இன்றிரவு நடக்கவுள்ள ஆட்டத்தில் செனகலையும் வீழ்த்த கொலம்பியா வியூகம் வகுத்து வருகிறது. இந்த ஆட்டத்தில் தோற்றுப் போனால் உலகக் கிண்ணத் தொடரைவிட்டு அந்த அணி வெளியேற நேரிடும். அப்படி ஏதேனும் நிகழ்ந்தால், போலந்துக்கு எதிரான வெற்றி வீணாகிவிடும். அதனால், 100% கவனம் செலுத்தி வெற்றி முனைப்புடன் ஆடவேண்டும் என சக வீரர்களை வலியுறுத்தி உள்ளார் கொலம்பிய கோல்காப்பாளர் டேவிட் ஒஸ்பினா.

கோலின்றி முடிந்த முதல் ஆட்டம்

மாஸ்கோ: இந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் ஒரு கோல்கூட அடிக்கப்படாத முதல் ஆட்டமாக அமைந்தது பிரான்ஸ்= டென்மார்க் அணிகள் மோதிய ‘சி’ பிரிவு ஆட்டம். இரண்டு ஆட்டங்களில் வெற்றி, ஓர் ஆட்டத்தில் சமநிலை என ஏழு புள்ளிகளுடன் பிரிவில் முதலிடம் பிடித்த பிரான்சும் ஐந்து புள்ளிகளுடன் இரண்டாமிடம் பிடித்த டென்மார்க்கும் அடுத்த சுற்றில் நுழைந்தன.

பெனால்டியில் சறுக்கிய ரொனால்டோ

படம்: ராய்ட்டர்ஸ்

சரன்ஸ்க்: ஈரானுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நேரத்தில் தவறிழைத்து பெனால்டியை விட்டுக் கொடுத்ததுடன், தனக்குக் கிட்டிய பெனால்டி வாய்ப்பிலும் கோலடிக்க தவறியதால் வெற்றியை இழந்த போர்ச்சுகல், ‘பி’ பிரிவில் இரண்டாமிடத்துடன் முடித்தது. இதனால் காலிறுதிக்கு முந்திய சுற்றில் போர்ச்சுகல் வலுவான உருகுவேயை எதிர்த்தாட வேண் டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. முற்பாதியில் ரிக்கார்டோ குரெஸ்மா அடித்த அற்புதமான கோலால் போர்ச்சுகல் அணி 1-0 என்ற முன்னிலையுடன் இடை வேளைக்குச் சென்றது.

கடைசி நேர கோலால் தப்பித்தது ஸ்பெயின்

படம்: ராய்ட்டர்ஸ்

கலினின்கிராட்: மொரோக்கோ விற்கு எதிரான ஆட்டத்தில் இரு முறை பின்னடைவைச் சந்தித்த போதும் ஒருவழியாக மீண்டு, 2=2 எனும் கோல் கணக்கில் ஆட்டத் தைச் சமன் செய்தது முன்னாள் வெற்றியாளரான ஸ்பெயின். ஆட்டம் 90 நிமிடங்களைத் தாண்டியும் 1-2 எனப் பின்னிலை யில் இருந்த ஸ்பெயினுக்கு இடை நிறுத்தத்திற்கான கூடுதல் நேரத் தில் கைகொடுத்தார் இயாகோ ஆஸ்பஸ்.

ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரிய சாலா

முகம்மது சாலா

வோல்கோகிராட்: ஓர் ஆட்டத் தில்கூட வெல்ல முடியாமல், முதல் சுற்றிலேயே உலகக் கிண்ணப் போட்டிகளில் இருந்து வெளியேறியதற்காக எகிப்து ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் அவ்வணியின் நட்சத்திர வீரரான முகம்மது சாலா (படம்). ‘ஏ’ பிரிவில் இடம்பெற்ற எகிப்து, சவூதி அரேபியாவிற்கு எதிரான தனது கடைசி ஆட் டத்தில் சாலா அடித்த கோலால் முன்னிலை பெற்றது.

Pages