You are here

விளையாட்டு

ஒரு கோல்கூட விடாமல் முத்திரை பதித்த உருகுவே

படம்: ராய்ட்டர்ஸ்

சமாரா: உலகக் கிண்ணப் போட்டிகளில் முதல் சுற்றின் மூன்று ஆட்டங்களிலும் வென்று ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்தது தென்னமெரிக்க அணியான உருகுவே. போட்டிகளை ஏற்று நடத்தும் ரஷ்யாவை 3=0 என்ற கணக்கில் தோற்கடித்த உருகுவே, 1998ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் சுற்றில் ஒரு கோலைக்கூட விட்டுத் தராத அணி எனும் பெருமையையும் பெற்றது. அந்த ஆண்டு நடந்த உலகக் கிண்ணப் போட்டிகளின் முதல் சுற்றில் ஏழு கோல்களை அடித்த அர்ஜெண்டினா, எதிரணிகளை ஒரு கோல்கூட போடவிடாமல் தடுத்தது. அதேபோல, உருகுவே இம்முறை தனது முதல் இரண்டு ஆட்டங்களில் எகிப்து, சவூதி ஆகிய அணிகளை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்திருந்தது.

பொசுங்கிப்போன போலந்து கஸன்: நட்சத்திர ஆட்டக்காரர்

ராபர்ட் லெவண்டோவ்ஸ்கி தலை மையிலான போலந்து அணி, தான் ஆடிய முதல் இரு ஆட்டங்களிலும் தோற்று உலகக் கிண்ணத் தொடரைவிட்டு வெளியேறியது. முதல் ஆட்டத்தில் செனகலிடம் தோற்ற அக்குழு, நேற்று கொலம் பியாவிடம் 0-3 என்ற கோல் கணக்கில் படுதோல்வி கண்டது. அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைத் தக்கவைக்க வேண்டு மெனில் இந்த ஆட்டத்தில் வென் றாகவேண்டும் என்ற நெருக்கடி யுடன் இரு அணிகளும் களம் புகுந்தன. தங்களுக்கான வாய்ப்பு வரும் எனப் பொறுமை காத்த கொலம் பியாவிற்கு 40வது நிமிடத்தில் பலன் கிட்டியது.

‘தற்காப்பில் சோடைபோனது வெற்றியைப் பறித்துவிட்டது’

எக்கதெரின்பர்க்: ஜப்பானுடனான ஆட்டத்தில் இரு முறை முன்னிலை பெற்றபோதும் வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்ததற்குத் தற்காப்பு ஆட்டக்காரர்கள் இருவரே காரணம் எனச் சாடியுள்ளார் செனகல் பயிற்றுவிப்பாளர் அலியோ சிஸே. லிவர்பூல் குழுவிற்காக விளை யாடி வரும் சாடியோ மானே ஆட் டத்தின் 11ஆம் நிமிடத்தில் அடித்த கோல் மூலம் செனகல் முன்னிலை பெற்றது. வலையை நோக்கி வந்த பந்தை ஜப்பானிய கோல்காப்பாளர் தடுத்தபோதும் அது மானே காலில் பட்டு கோலானது.

வாழ்வா சாவா போராட்டத்தில் அர்ஜெண்டினா

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: முதல் இரு ஆட்டங்களில் சொதப்பலாக ஆடியதால் ‘டி’ பிரிவின் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்ட அர் ஜெண்டினாவிற்கு இன்று பின்னி ரவு நடக்கவுள்ள நைஜீரியாவிற்கு எதிரான ஆட்டமே இறுதி வாய்ப்பு. இந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அர்ஜெண்டி னாவிற்குக் கிட்டலாம். வெற்றி மட்டுமே உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற லயனல் மெஸ்ஸியின் கனவை உயிர்ப்புடன் வைத்திருக்கச் செய்யும். இந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் மெஸ்ஸி இன்னும் தமது கோல் கணக்கைத் தொடங் கவே இல்லை.

போர்ச்சுகல் வீரர்களின் தூக்கத்தைக் கெடுக்க முயன்ற ஈரானிய ரசிகர்கள்

சரன்ஸ்க்: முக்கிய ஆட்டத்தில் போர்ச்சுகலும் ஈரானும் இன்று அதிகாலை மோதவிருந்தன. போர்ச்சுகலை வீழ்த்தும் பட்சத்தில் ஈரான் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பதால், அதற்குத் தங்களால் முடிந்த உதவியைச் செய்ய ஈரானிய ரசிகர்கள் திட்டமிட்டனர். இதையடுத்து, போர்ச்சுகல் ஆட்டக்காரர்கள் தங்கியிருந்த ஹோட்டலைச் சுற்றியிருந்த பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பல மணி நேரம் ஊளையிட்டபடி இருந்தனர். இந்தச் சத்தத்தால் போர்ச்சுகல் வீரர்கள் நிம்மதியாகத் தூங்க முடியாமல் போய், களைப்பு காரணமாக மறுநாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடத் தடுமாறுவர் என்பது ஈரானிய ரசிகர்களின் எண்ணம்.

பின்னடைவிலிருந்து மீண்ட ஜெர்மனி

சோச்சி: ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ணக் காற் பந்துப் போட்டியிலிருந்து ஜெர்மனி முதல் சுற்றிலேயே வெளியேறிவிடும் என்ற பலரது ஆசைகளும் எதிர் பார்ப்புகளும் வீணாகின. ‘எஃப்’ பிரிவில் இடம்பெற்றுள்ள ஜெர் மனி, சுவீடன் அணிகள் நேற்று முன்தினம் பின்னிரவு 2 மணிக்கு பொருதின. ஆட்டத்தின் முடிவில் கூடுத லாக வழங்கப்பட்ட நேரத்தில் ஜெர் மனி அணியின் டோனி குரூஸ் 95வது நிமிடத்தில் கோல் அடித்து தமது அணிக்கு வெற்றி யைத் தேடித் தந்தார். இதன் விளைவாக சுவீடனை 2-1 எனும் கோல் கணக்கில் நடப்பு உலகக் கிண்ண வெற்றியாளரான ஜெர்ம னி வென்றது.

இதுவரை காணாத உலகக் கிண்ண கோல் மழை

நிஸ்னி நோவ்கொரொட்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ‘ஜி’ பிரிவில் நேற்று இரவு 8 மணிக்கு இங்கிலாந் துக்கும் பனாமாவுக்கும் இடையே நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து காட்டில் ஒரே கோல் மழை பெய்தது. பனாமாவை அந்த அணி 6=1 எனும் கோல் கணக்கில் புரட்டிப் போட்டது. ஏற்கெனவே பெல்ஜியத்தின் கரங்களில் 3-0 எனும் கோல் கணக்கில் தோல்வி கண்ட பனாமாவுக்கு இந்தப் படுமோச மான தோல்வி அணியைத் தலைகுனிய வைத்துள்ளது.

அடுத்த சுற்றுக்குள் நுழையும் வாய்ப்புடன் மெக்ஸிகோ

ரோஸ்டோவ் ஆன் டான்: உலகக் கிண்ணப் போட்டியில் ‘எஃப்’ பிரிவில் நேற்று முன்தினம் இரவு மெக்ஸிகோ அணியுடன் நடை பெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் தென் கொரியா 1-=2 எனும் கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. அப்பிரிவில் இரு ஆட்டங் களிலும் தோல்வியைத் தழுவிய தை அடுத்து, இந்த உலகக் கிண்ணப் போட்டியில் கலந்து கொண்ட இரு ஆசிய அணிகளில் ஒன்றான தென் கொரியா, முதல் சுற்றிலிருந்து வெளியேறும் அபாய த்தில் உள்ளது. சுவீடன் அணி உடனான முதல் ஆட்டத்தில் தென் கொரியா 1-0 எனும் கோல் கணக்கில் தோற்றது.

ரொனால்டோவை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈரான்

சரன்ஸ்க்: இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் போர்ச்சுகல் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவதைத் தடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது ஈரான். போர்ச்சுகலை வெல்வதன் மூலம் அடுத்த சுற்றுக்கு ஈரான் தகுதி பெற முடியும். ஆனால் போர்ச்சுகல் அடுத்து சுற்றுக்குச் செல்ல இந்த ஆட்டத்தில் சமநிலை கண்டால் போதும். என்றாலும், ‘பி’ பிரிவில் முதல் இடத்தைப் பிடிக்க போர்ச்சுகல் அணி ஈரான் அணியைத் தோற்கடிக்க முற்படும். அதன் முயற்சிக்கு பக்கபலமாக இருப்பார் அணித் தலைவர் கிறிஸ் டியானோ ரொனால்டோ.

சுவிஸ் தாக்குதலில் நிலைகுலைந்த செர்பியா

கலினின்கிராட்: இந்த உலகக் கிண்ணப் போட்டிகளில், முதலில் கோலை விட்டுக்கொடுத்தபோதும் பின் எழுச்சி கண்டு வெற்றியை ஈட்டிய முதலாவது அணி எனும் பெருமையைத் தேடிக்கொண்டது சுவிட்சர்லாந்து அணி. பரம வைரியான செர்பியாவிற்கு எதிரான ‘இ’ பிரிவு ஆட்டத்தின் ஐந்தாம் நிமிடத்திலேயே சுவிட்சர் லாந்து பின்னடைவைச் சந்தித்தது. அலெக்சாண்டர் மிட்ரோவிச் தலை யால் முட்டி கோலடித்து, அரங்கில் திரண்டிருந்த செர்பிய ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார். இரண்டாம் பாதியில் அதிர்ச்சி காத்திருக்கிறது என்பதை அறியா மல், 1-0 என முன்னிலை பெற்ற உற்சாகத்துடன் செர்பிய அணி யினர் இடைவேளைக்குச் சென் றனர்.

Pages