You are here

விளையாட்டு

சரியான முடிவு என நிரூபித்த மூசா

வோல்கோகிராட்: ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற தன் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நம்பிக் கையை நைஜீரியா அதிகப்படுத்திக் கொண்டதுடன் இந்த முடிவு அர் ஜெண்டினாவிற்கும் நல்ல செய்தி யாக அமைந்துள்ளது. குரோவே‌ஷியாவிடம் 3-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டதால் உலகக் கிண்ணத் தொடரைவிட்டே வெளி யேறும் நிலைக்கு அர்ஜெண்டினா தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதல் சுற்றில் தனது கடைசி ஆட்டத்தில் நைஜீ ரியாவை வீழ்த்துவதன் மூலம் அவ்வணி காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு முன்னேற நல்ல வாய்ப்பு கிட்டியுள்ளது.

விமர்சனங்களுக்குப் பதிலடி

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: கோஸ்டா ரிக்காவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது ஐந்து முறை உலகக் கிண்ண வெற்றி யாளரான பிரேசில். எதிரணியின் கட்டுக்கோப்பான தற்காப்பால் ஆட்ட நேரம் முழு வதும் கோல்போட முடியாமல் தடு மாறிய பிரேசில், இடைநிறுத்தத் திற்கான கூடுதல் நேரத்தில் கொட்டின்யோவும் நெய்மாரும் அடுத்தடுத்து அடித்த இரண்டு கோல்களால் வெற்றிக்கனியைப் பறித்தது. ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் கோலடித்த நெய்மார், ஆட்டம் முடிந்ததாக நடுவர் ‘விசில்’ ஊதி அறிவித்ததும் திடலிலேயே அமர்ந்து தேம்பித் தேம்பி அழுதார்.

ஆட்டம் கண்ட அர்ஜெண்டினா

படம்: ராய்ட்டர்ஸ்

நிஸ்னி நோவ்கொரோட்: பிரேசிலில் 2014ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் இறுதி வரை முன்னேறியும் நூலிழையில் கைவிட்டுப்போன கிண்ணத்தை இம்முறை எப்படியும் வென்றே தீரும் முனைப்புடன் களமிறங்கியது லயனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி. ஆனால், அர்ஜெண்டினாவின் செயல்பாட்டைப் பார்க்கும்போது அவ்வணி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறுவதே கேள்விக்குறியாகி இருக்கிறது.

கடைசி நேர கோல்களால் கரைசேர்ந்த பிரேசில்

ஐந்து முறை உலகக் கிண்ண வெற்றியாளரான பிரேசில், இந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் முதல் வெற்றியைப் பெற்றது. ‘இ’ பிரிவில் இடம்பெற்றுள்ள பிரேசில், சுவிட்ர்சலாந்துடனான முதல் ஆட்டத்தில் 1-1 எனச் சமநிலை கண்டது. இதனால் கோஸ்டா ரிக்காவிற்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பிரேசில் வெற்றி நெருக்கடியுடன் களம் கண்டது. கோஸ்டா ரிக்கா கோல்காப்பாளர் கெய்லர் நவாஸ் பிரேசிலின் பல கோல் முயற்சிகளை முறியடித்தார்.

அடுத்த சுற்றில் பிரான்ஸ்

எக்கதெரின்பர்க்: இளம் வீரர் கிலியன் எம்பாப்பே அடித்த ஒற்றை கோலால் 1-0 என்ற கணக்கில் பெருவை வென்ற பிரான்ஸ் ‘சி’ பிரிவிலிருந்து முதல் அணியாக காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் கிட்டிய தோல்வி, 36 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கிண்ணப் போட்டி களில் விளையாடத் தகுதி பெற்ற பெரு அணியினரின் நம்பிக்கை யைச் சிதறடிப்பதாக அமைந்தது. ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் அடித்த கோலால் உலகக் கிண் ணப் போட்டிகளில் ஆக இளம் வயதில் கோலடித்த பிரெஞ்சு ஆட்டக்காரர் எனும் பெருமையைப் பெற்றார் 19 வயதான எம்பாப்பே. டேவிட் டிரெஸிகி தமது 20 வயதில் கோலடித்து இருந்ததே முன்னைய சாதனை.

ரொனால்டோ=ஆக அதிக கோலடித்த ஐரோப்பியர்

மாஸ்கோ: ஸ்பெயினுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நான்காம் நிமி டத்தில் தமது கோல் வேட்டையைத் தொடங்கிய போர்ச்சுகல் அணித் தலைவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, மொரோக்கோவிற்கு எதிரான இரண்டாவது ஆட்டத் திலும் நான்காவது நிமிடத்தில் கோலடித்து வியப்பளித்தார். முதல் ஆட்டத்தில் அடித்த ‘ஹாட்ரிக்’ கோல்களால் பல சாத னைகளை மாற்றி எழுதிய அவ ருக்கு மொரோக்கோவிற்கு எதிராக விழுந்த கோலும் சாதனை கோலாக அமைந்தது.

கேரளாவில் இருந்து மாஸ்கோ வரை: மெஸ்ஸியை பார்க்க சைக்கிளில் போகும் காற்பந்து ரசிகர்

இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள செர்தாலா என்ற ஊரைச் சேர்ந்த கிளிஃபின் பிரான்சிஸ், 28, என் பவர் தீவிர காற்பந்து ரசிகர். அர் ஜெண்டினாவின் வீரர் லயனல் மெஸ்ஸிதான் அவருக்கு உயிர். ரஷ்யாவில் நடக்கும் உலகக் காற்பந்துப் போட்டியையும் அதில் தன்னுடைய மெஸ்ஸி விளையாடும் அழகையும் எப்படியாவது பார்த்து விடவேண்டும் என்ற வேட்கையில் பிப்ரவரி 23ஆம் தேதி ரஷ்யா புறப்பட்டார் பிரான்சிஸ்.

நம்பிக்கையுடன் நெய்மார்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: சுவிட்சர் லாந்துக்கு எதிரான முதல் ஆட்டத் தில் பிரேசில் அணியின் செயல் பாடு ஏமாற்றமளித்த நிலையில், கோஸ்டா ரிக்காவிற்கு எதிராக இன்று நடக்கவுள்ள இரண்டாவது ஆட்டத்தில் தங்களின் ஆட்டம் மேம்பட்டதாக இருக்கும் என்று நெய்மார் நம்பிக்கை தெரிவித்துள் ளார். நெய்மார் உள்ளிட்ட பல நட்சத்திரங்களைக் கொண்டுள்ள போதும் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள பிரேசில் அணி, சுவிட்சர்லாந்துக்கு எதிராக ஆடிய விதம் கண்டு ரசிகர்கள் ஏமாந்து போயினர். போட்டி 1-1 எனச் சமநிலையில் முடிந்ததற்கு நடுவர்களும் ஒரு காரணம் எனச் சாடிய நெய்மார், தமது அணியினருடன் இணைந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

 

ஸ்பெயின் நிம்மதிப் பெருமூச்சு

கஸன்: முதல் ஆட்டம் சமனான தால் இரண்டு புள்ளிகளை இழந்த ஸ்பெயினுக்கு இரண்டாவது ஆட் டத்திலும் கிட்டத்தட்ட அதே நிலை ஏற்பட்டிருக்கலாம். ஆனாலும், அவ்வணிக்குக் கைகொடுத்தது காணொளி உதவி நடுவர் தொழில்நுட்பம். இதனால் ‘தலை தப்பியது தம்பி ரான் புண்ணியம்’ என ஸ்பெயின் வீரர்கள் நிம்மதி அடைந்தனர். போர்ச்சுகலுக்கு எதிரான ஆட்டத்தில் இரு கோல்களை அடித்ததால் தலைப்புச் செய்தியில் இடம்பெறும் தகுதியைப் பெற்றார் ஸ்பானிய தாக்குதல் ஆட்டக்காரர் டியேகோ கோஸ்டா. ஆனாலும், ‘ஹாட்ரிக்’ கோல்களை அடித்ததன் மூலம் அந்தப் பெருமையை அவ ரிடமிருந்து பறித்துக்கொண்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

அடுத்த சுற்றுக்கு அருகே ரஷ்யா

படம்: ஏஎஃப்பி

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: உலகக் கிண்ணப் போட்டிகளில் விளை யாடும் அணிகளில் கடைசி தர நிலையை (70வது இடம்) பெற்று உள்ளபோதும் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்குள் முதல் அணியாக நுழையும் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதிசெய்துள்ளது, போட்டிகளை ஏற்று நடத்தும் அணியான ரஷ்யா. முதல் ஆட்டத்தில் சவூதி அரேபியாவை 5-0 என்ற கோல் கணக்கில் நொறுக்கித் தள்ளிய ரஷ்யா, நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் எகிப்துவைத் தோற்கடித்தது.

Pages