You are here

விளையாட்டு

ஆக விலைமிக்க கோல்காப்பாளர்

லண்டன்: உலகிலேயே ஆக விலைமிக்க கோல்காப்பாளராகி உள்ளார் பிரேசிலைச் சேர்ந்த 25 வயது அலிசன் பெக்கர். அவர் நேற்று முன்தினம் லிவர்பூலில் இணைந்தார். லிவர்பூலுடனான 115 மில்லியன் வெள்ளி பெறுமானமுள்ள ஒப்பந்தத்தில் அலிசன் கையெழுத்திட்டுள்ளார். கடந்த பருவத்தில் அலிசன் இத்தாலிய லீக்கில் போட்டியிடும் ரோமாவுக்காக 37 ஆட்டங்களில் களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய அலிசன் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதிக்கு ரோமா தகுதி பெற முக்கிய காரணமாக இருந்தார். அரையிறுதியில் லிவர்பூலிடம் ரோமா தோற்று வெளியேறியது.

‘உத்வேகத்துடன் களமிறங்குவார் போக்பா’

லாஸ் ஏஞ்சலிஸ்: அண்மையில் நடந்து முடிந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பிரான்ஸ் மகுடம் சூடியது. அந்த அணியில் மத்திய திடல் ஆட்டக்காரர் பால் போக்பா முக்கிய வீரராக இருந்து பிரான்ஸ் வெற்றி பெற உதவி னார். போக்பா இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் குழு வுக்காக விளையாடி வருகிறார். உலகக் கிண்ணத்தை வென் றுள்ள போக்பா இனி புது உத் வேகத்துடன் யுனைடெட்டுக்காக விளையாடுவார் என்று அக்குழு வின் நிர்வாகி ஜோசே மொரின்யோ தெரிவித்துள்ளார். கடந்த பருவத்தில் யுனைடெட் குழுவுக்காக போக்பா களமிறங் கியபோது எதிர்பார்த்த அளவுக்கு அவர் விளையாடவில்லை.

அலிசனை ஒப்பந்தம் செய்ய லிவர்பூல் தீவிரம்

லண்டன்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பிரேசிலின் கோல்காப்பாளராகக் களமிறங்கிய அலிசனை ஒப்பந்தம் செய்ய இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஜாம்பவான் லிவர்பூல் தீவிரமாக முயன்று வருகிறது. இந்த ஒப்பந்தம் அடுத்த ஓரிரு நாட்களில் செய்யப்படும் என்று நம்பப்படுகிறது. லிவர்பூலுடன் 120 மில்லியன் வெள்ளி பெறுமானமுள்ள ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் அலிசன் கையெழுத்திடுவார் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டால் உலகிலேயே ஆக விலைமிக்க கோல்காப்பாளர் எனும் பெருமைக்கு அவர் சொந்தக்காரராவார் என்பது குறிப் பிடத்தக்கது.

தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

லண்டன்: இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது. பூவா தலையாவில் வென்ற இங்கிலாந்து அணித் தலைவர் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டுத் தினேஷ் கார்த் திக் இடம்பிடித்துள்ளார். அதே போல் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். சித்தார்த் கவுல் நீக்கப்பட்டுப் புவ னேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டார். இந்திய அணியின் ஆட்டக் காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா - தவான் இணை, ஓட்டங் கள் குவிக்கத் திணறியது.

உலகப் பூப்பந்துப் போட்டி: சிந்துவுக்குக் கடுமையான போட்டி

நான்சிங்: 24வது உலகப் பூப்பந்து வெற்றியாளர் கிண்ணப் போட்டி சீனாவில் வருகிற 30ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான அட்ட வணை நேற்று முன்தினம் அறி விக்கப்பட்டது. இதில் பங்கேற்கும் இந்திய வீராங் கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் கடினமான பிரிவில் இடம் பிடித் துள்ளனர். இருவருக்கும் நேரடி யாக 2வது சுற்றில் விளையாட வாய்ப்பு அளிக் கப்பட்டுள்ளது. சிந்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினால் உலக தரவரிசை யில் ஒன்பதாவது இடத்தில் உள்ள சுங் ஜி ஹூனை (தென்கொரியா) சந்திக்க நேரிடலாம்.

ரொனால்டோ வெற்றி இலக்கு

டுரின்: இத்தாலியின் யுவெண் டஸில் இணைந்திருக்கும் போர்ச் சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டி யானோ ரொனால்டோ அக்குழு வுடன் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் வெற்றியைச் சுவைக்க இலக்கு கொண்டுள்ளார். தமது வயதில் இருக்கும் சில வீரர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் சீனா அல்லது கத்தாரை நோக்கிச் செல்வதுண்டு என்றும் அவர்களிலிருந்து தாம் வேறு பட்டவன் என்றும் 33 வயது ரொனால்டோ தெரிவித்தார். நேற்று முன்தினம் இத்தாலியின் டுரின் நகரில் இருந்த ரொனால் டோவை வரவேற்க யுவெண்டஸ் ரசிகர்கள் பலர் திரண்டனர்.

சிங்கப்பூரில் களமிறங்கும் ஒசில்

சிங்கப்பூரில் இம்மாதம் 26ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை அனைத்துலக வெற்றியாளர் கிண்ணக் காற்பந்துப் போட்டி நடைபெறுகிறது. பிரதான காற்பந்துப் போட்டி களின் புதிய பருவம் தொடங் குவதற்கு முன்பு இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் இப்போட்டியில் இங்கிலாந்தின் ஆர்சனலும் ஸ்பெயினின் அட்லெட்டிகோ மட்ரிட்டும் பிரான்ஸின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மேனும் களமிறங்குகின்றன. அண்மையில் நடந்து முடிந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் ஜெர்மனி முதல் சுற்றுடன் விடைபெற்றுக் கொண்டது.

ஆக அதிக கோல்கள் போட்ட கேன்

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் மற்ற வீரர்களைவிட ஆக அதிக கோல்கள் போட்டு தங்கக் காலணி விருதை வென்றார் இங்கிலாந்தின் ஹேரி கேன். அவர் ஆறு கோல்களைப் போட்டார். ஆகச் சிறந்த கோல்காப்பாளர் விருதை பெல்ஜியத்தின் கோட்வா வென்றார்.

சாதனை படைத்த டிடியே டேஷோம்

ஆட்டக்காரராகவும் பயிற்றுவிப்பாளராகவும் உலகக் கிண்ணத்தை இதற்கு முன்பு இரண்டு பேர் மட்டும் வென்றிருந்தனர். பிரேசிலின் மாரியோ ஸகாலோ, ஜெர்மனியின் பிரான்ஸ் பெக்கன்பாவர் ஆகியோரைப் போலவே பிரான்ஸின் டிடியே டேஷோம் இச்சாதனையைப் படைத்துள்ளார்.

அரியணை ஏறிய பிரான்ஸ்

மாஸ்கோ: இப்புவியிலேயே ஆகச் சிறந்த காற்பந்துக் குழு எனும் பெருமையை பிரான்ஸ் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி யின் இறுதி ஆட்டத்தில் குரோவே‌ஷி யாவை அது 4=2 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி கிண்ணம் ஏந்தியது. இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டிலும் 2010ஆம் ஆண்டிலும் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதி ஆட்டங்கள் கோல் ஏதுமின்றி முடிந்து கூடுதல் நேரத்துக்குச் சென்றன. எனவே இவ்வாண்டின் இறுதி ஆட்டத்தில் கோல் மழை பொழியும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

Pages