You are here

வாழ்வும் வளமும்

பிக்சல்3 திறன்பேசிகள் நவம்பரில் அறிமுகம்

கூகல் நிறுவனம் தனது புதிய பிக்சல் 3, பிக்சல் 3XL ஆகிய இரண்டு திறன்பேசிகளை நவம்பர் 1ஆம் தேதி அறிமுகப்படுத்த வுள்ளது. இதனை அந்நிறுவனம் நேற்று அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் தனது நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்தது. இந்தத் திறன்பேசிகள் சிங் கப்பூர் உள்ளிட்ட 13 நாடுகளில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இவற்றின் விலைகள்: பிக்சல் 3XL (6.3”) - 64 ஜிபி S$1,399, 3XL(6.3”) (128 ஜிபி) S$1.549. பிக்சல் 3 (5.5”) = 64 ஜிபி S$1,249, பிக்சல் 3 (5.5”) = 128 ஜிபி S$1,399. மூன்று வண்ணங்களில் கிடைக் கும் இந்தத் திறன்பேசி களை வாங்க சிங்கப்பூர் கூகல் ஸ்டோரில் முன்பதிவு செய்யலாம்.

உங்கள் கார்களை சிரமமின்றி விற்பதற்கு சிறந்த வழியைத் தேர்வு செய்யுங்கள்

பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்க விரும்பு வோர் தங்கள் பழைய வாகனத்தை பாதுகாப்பாகவும் லாபகரமாகவும் விரைவில் விற்பனை செய்வதற்கு அதை நல்ல ஒரு வாகன முகவரின் மூலம் ஏலத்தில் விடுவதும் ஒரு வழி. தங்கள் பழைய வாகனத்தை விற்க விரும்புவோர் பெரும்பாலும் வாகன முகவர்களையே நாடுவர். வாகனச் சந்தையில் ஏராளமான முகவர்கள் உள்ள­னர். எந்த முகவரிடம் சென்றால் அதிக லாபத்திற்கு பாதுகாப்பான முறையில் வாகனத்தை விற்க முடியும் என்பதை நாம் அறிந் திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு அறிந்துகொள்வதற்கு ஓர் ஆய்வே செய்யவேண்டியிருக்கும்.

பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஒரு நினைவூட்டல்

வைதேகி ஆறுமுகம்

சிங்கப்பூரின் 55ஆவது தேசிய தினத்தன்று நாட்டை அழிக்க ஆறு பயங்கரவாதிகள் போடும் திட்டத்தைப் பற்றிய கதை ஒன்றை செய்தி ஆசிரியர் திரு ஆண்ட்ரே இயோ, வயது 46, இவ்வாண்டு ஜூன் மாதத்தில் வெளியிட்டார். ‘9 ஆஃப் ஆகஸ்ட்’ எனும் தலைப்பைக் கொண்டுள்ள இப்புத் தகம் சென்ற ஆண்டின் ‘எபிகிராம் புக்ஸ் ஃபிக்‌ஷன்’ பரிசுக்குத் தேர்வுசெய்யப்பட்டது. இதுவே அவர் படைத்த முதல் நாவல். சிங்கப்பூரின் பாதுகாப்பு நிரந் தரமானது என்ற அலட்சியப் போக் கைக் கொள்ளாமல், இந்நாட்டின் குடிமக்கள் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும் என்பதை நினைவூட்டுவதற்காக இக் கதையை எழுதியுள்ளார் திரு ஆண்ட்ரே இயோ.

தொழில்நுட்பத்துடன் தமிழ்மொழி கற்றலை இணைத்த பயிலரங்கு

செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் இக்காலத்தில் சிங்கப்பூர் மாணவர்கள் அடிப்படை கணினி நிரலாக்க (Basic computer programming) திறனை வளர்த்துக் கொண்டு, அதைத் தமிழ்மொழி கற்றுலுக்குப் பயன்படுத்த வேண் டும் என்பதற்காக திரு செம்பியன் சோமசுந்தரம், 25, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ‘குறியீடு, விளையாடு’ எனும் இரண்டு நாள் பயிலரங்கை ஏற்பாடு செய்தார். ‘எஸ்ஐஏ’ பொறியியல் நிறு வனத்தில் நிர்வாகியாகப் பணி புரியும் இவர், கடந்த ஆண்டு மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி வழங் கிய தமிழ்ச்சுடர் விருதை வென் றவர்.

பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்த ஓவியக் கண்காட்சி

பாரம்பரியம், கட்டடக்கலை, இயற்கை ஆகிய கருப்பொருட்களின் தொடர்பில் கிட்டத்தட்ட 150 ஓவியப் படைப்புகளை விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள நூலக வாரியக் கட்டடத்தில் நேற்று நடைபெற்ற தமது முதல் ஓவியக் கண்காட்சியில் எழுத்தாளரும் ஓவியருமான ஜெயந்தி சங்கர் (படத்தில் வலது) காட்சிப்படுத்தி இருந்தார். காலை 10 மணிக்குத் தொடங்கிய கண்காட்சி இரவு 8 மணி வரை நடைபெற்றது. பிற்பகல் 3 மணிக்கு ‘ஆசியாவில் ஓவியக் கலையின் வளர்ச்சி’ என்ற தலைப்பிலும் அதனைத் தொடர்ந்து ‘எவ்வாறு ஓவிய உலகிற்குள் சென்றேன்’ என்ற தலைப்பிலும் திருமதி ஜெயந்தி உரையாற்றினார்.

போதுமான உடற்பயிற்சியின்மை: 1.4 பில்லியன் பேர் பாதிப்படைவர்

போதுமான உடற்பயிற்சி இன்மையால் நால்வரில் ஓர் ஆணும் மூவரில் ஒரு பெண்ணும் உயிர்க்கொல்லி நோய்க்கு ஆளாக நேரிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலகில் கால்வாசிப் பேருக்கு மேல் போதுமான உடற்பயிற்சி செய்வதில்லை என்று அந்த அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக சுமார் 1.4 பில்லியன் பேர் கடுமையான உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் அழகி ஸாரா

சிங்கப்பூரின் ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகியாக நேற்று முன்தினம் தேர்ந்தெடுக்கப்பட்ட 23 வயது ஸாரா கனும் டிசம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து கலந்துகொள்ள இருக் கிறார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் சமூகவியல் துறையில் பட்டம் பெற்ற அவர், போட்டியில் பங்கேற்ற மற்ற 14 பேரையும் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.

Pages