ஸெலென்ஸ்கி

இருபது ஆண்டுகளில் ரஷ்யாவில் நடந்த மிகக் கொடூரமான தாக்குதலில் ஏராளமானவர்கள் தானியங்கி ஆயுதங்களால் சுடப்பட்டதையடுத்து, ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 24) அந்நாடு துக்கம் காத்தது. தேசியக் கொடிகள் அரை கம்பத்துக்கு இறக்கப்பட்டன.

தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 133 பேர் கொல்லப்பட்டனர். 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைவரையும் கண்டுபிடித்து தண்டிப்பதாக சூளுரைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தேசிய துக்க தினத்தை அறிவித்தார்.

“தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று மார்ச் 23ஆம் தேதி, மக்களுக்கு ஆற்றிய உரையில் திரு புட்டின் வருத்தம் தெரிவித்தார்.
மாஸ்கோ: ர‌ஷ்யா தனது அக்கறைகளைக் கருத்தில்கொண்டு செயல்படும் என்றும் உக்ரேன் போரை மற்ற நாடுகளுக்குப் பரவ விடுவதில் அதற்கு எண்ணம் இல்லை என்றும் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார்.
டாவோஸ், சுவிட்சர்லாந்து: சிங்கப்பூர், சீனா ஒத்துழைப்பு தொடர்பான வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம், சீனப் பிரதமர் லி சியாங் இருவரும் ஜனவரி 16ஆம் தேதியன்று சந்தித்துப் பேசினர்.
கியவ்: உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, 37 ரஷ்யக் குழுக்களுக்கும் 108 பேருக்கும் தடை விதித்துள்ளார்.
கியவ்: ரஷ்யா-உக்ரேன் போர் நிலைகுத்தி நின்றுவிட்டதாக உக்ரேனின் உயர் ராணுவத் தளபதி வெளிப்படையாகக் கூறியதை அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அலுவலகம் கடுமையாக விமர்சித்துள்ளது.